'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் கதாநாயகி இவரா?

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் கதாநாயகி இவரா?
Published on

கடந்த 2009-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'சிவா மனசுல சக்தி' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணையுமா? என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

இதனிடையே, ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். அப்படத்திற்கு 'ஜாலியா இருந்த ஒருத்தன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Malik Streams Corporation தயாரிக்கும் இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி இப்படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். இவானாவின் பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடிய நிலையில் புகைப்படத்தை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com