என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajesh"

    • 69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
    • பொதுக்குழுவில் விஷால், நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த பொதுக்குழுவில் நடிகர் சங்க கட்டடம் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 29 ஆம் தேதி காலமானார் .
    • ராஜேஷ் அவர்களது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 29 ஆம் தேதி காலமானார் . இவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

    இவர் 1949 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

    அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜேஷ் அவர்களது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இன்று ராஜேஷ் உடலிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளரை சந்தித்த ரஜினிகாந்த்

    "என்னுடைய நெருங்கிய நண்பர், அவரு பெரிய ஹீரோவோ, நடிகரோ, தயாரிப்பாளரோ கிடையாது. ஆனா அவருடைய உடலுக்கு மாண்புமிகு முதலமைச்சரில் இருந்து பல திரைப்பிரபலங்கள் வரை நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அது அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்கான சான்று. அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. அடிக்கடி நாங்கள் சந்திப்போம். என் உடல்நிலையில் அதிகம் அக்கறை காட்டுவார். அவருடைய இழப்பு பேரிழப்பு. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்" என கூறியுள்ளார்

    • கடந்த டிசம்பரில் கோவையில் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சைச நடந்தது.
    • உடம்பு சரியில்லாமல் ராஜேஷ் காலமாகி விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    நடிகா் ராஜேஷ் மறைவு பற்றி நடிகை வடிவுக்கரசி கூறியதாவது:-

    என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எத்தனையோ நடிகர்களுடன் நடித்து வருகிறோம். ராஜேஷ் அவ்வளவு நல்ல மனிதர். தப்பு பண்ணுவதற்கே பயப்படுவார்.

    என்னுடைய பிறந்த நாளை நான் மறந்துவிட்டால் கூட அவரோட வாழ்த்துதான் முதலில் வரும். கடைசி நிமிடம் வரை நடித்துக் கொண்டிருப்பீர்கள் என என்னைப் பார்த்து சொல்வார்.

    கடந்த வாரம் என்னிடம் அவர் பட்டுக்கோட்டை போய் வந்தேன். மகனுக்கு பெண் பார்த்தாச்சு. ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் திருமணம் வைத்துக் கொள்ளலாம். அதைப் பற்றி விளக்கமாக உங்களிடம் சொல்கிறேன். என கூறினார்.

    ரொம்ப சந்தோஷம் என நான் கூறியதும் மகன் திருமணத்திற்கு உங்களுக்கு நல்ல பட்டு புடவை வாங்கி தருகிறேன் என கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி சித்த மருத்துவமனை திறப்பு விழாவிற்காக நானும் அவரும் திருச்சி போயிருந்தோம்.

    அப்போது அவரிடம் நான் கன்னிப் பருவத்திலே படம் திருச்சியில் நாம் இருவரும் தான் நடித்தோம். அதற்கு அவர் ஆமாம்... ஆமாம்.. நீங்கள் தான் என் முதல் கதாநாயகி என சொன்னார்.

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று கன்னிப் பருவத்திலே படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆச்சு என்று வருடம் தவறாமல் பேசுவார். சாப்பாடு, ஆரோக்கியத்திலும் ரொம்ப சரியாக இருப்பார். அவர் உடம்பு சரியில்லாமல் காலமாகி விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

    இப்பவும் யாரையோ பற்றி பேசுகிறோம் என்று தான் உள்ளது. ராஜேஷ் சாரை பற்றி பேசுகிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்பதானே பேசினோம் என்று தோன்றுகிறது.

    கடந்த டிசம்பரில் கோவையில் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சைச நடந்தது. தற்போது அவர் மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

    இவ்வாறு கண்கலங்கிய படி அவர் கூறினார்.

    • தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர்.
    • அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ்.

    தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
    • சிறப்பான நடிப்பினால் சின்னத்திரை நெடுந்தொடர்கள் பல வெற்றித்தொடர்களாகப் பெரும்புகழ் பெற்றன.

    நடிகர் ராஜேஷ் மறைவு தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் அன்பிற்கினிய அண்ணன் இராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

    கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை, பயணங்கள் முடிவதில்லை, மகாநதி, இருவர், விருமாண்டி உள்ளிட்ட பல திரைக்காவியங்களில் தன்னுடைய தனித்துவமிக்க குணச்சித்திர நடிப்பின் மூலம் தனிமுத்திரை பதித்த அண்ணன் இராஜேஷ் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது சிறப்பான நடிப்பினால் சின்னத்திரை நெடுந்தொடர்கள் பல வெற்றித்தொடர்களாகப் பெரும்புகழ் பெற்றன.

    ஓம் சரவணபவ வலையொளி மூலம் உடல்நலனைப் பாதுகாப்பது குறித்து பல அரிய தகவல்களை இறுதிநாள்வரை, தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு வழங்கி வழிகாட்டிய பெருமகன்.

    தனிப்பட்ட முறையில் என்மீது பெரும் பாசமுடைய அண்ணன் ராஜேஷ் அவர்கள், அவரிடமிருந்த கிடைத்தற்கரிய சிறந்த புத்தகங்களை எனக்கனுப்பி தந்து படிக்க பரிந்துரைத்த பேரன்புக்காரர். நாங்கள் முன்வைக்கும் அரசியல் கருத்துகள் மிகச்சரியானது என்பதை பல தருணங்களில், பல மேடைகளில் தயக்கமின்றி வெளிப்படுத்திய பெருந்தகை!

    அண்ணன் ராஜேஷ் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், வலையொளி பின்தொடர்பாளர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

    தலைச்சிறந்த குணச்சித்திரத் திரைக்கலைஞர் அண்ணன் இராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜேஷ் காலமானார்.
    • ராஜேசுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர்.

    'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ் (வயது 75). தொடர்ந்து கன்னிப் பருவத்திலே, அச்சமில்லை, சாமி, ரெட், ஆட்டோகிராப் என தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கிறார். நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞ ராகவும் பணியாற்றி வந்த ராஜேஷ் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.

    45 ஆண்டு காலமாக சினிமாத்துறையில் பயணித்து வரும் ராஜேஷ் குடும்பத்துடன் ராமாபுரத்தில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜேஷ் காலமானார்.

    இதையடுத்து அவரது உடல் ராமாபுரம் கோத்தாரி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது திடீர் மறைவு திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ராஜேஷ் மறைவு பற்றி தகவல் அறிந்ததும் அவரது உடலுக்கு ஏராளமான திரை உலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் ராஜேஷ் மனைவி ஜோன்சில்வியா கடந்த 2012-ம் ஆண்டு காலமானார். ராஜேசுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் ராமாபுரத்திலுள்ள இல்லத்தில் நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோரும் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
    • ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

    பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

    இவர் 1949 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

    அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ராஜேஷ் அவர்களது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கள் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் "என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்." என கூறியுள்ளார்.

    • திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
    • இவர் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

    பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

    இவர் 1949 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

    அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய தயாரிப்பாளரான கோட்டபாடி ஜே ராஜேஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்தை முதலில் தயாரித்தார்.
    • தயாரிப்பாளராக இருந்த ராஜேஷ் தற்பொழுது நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.

    இந்திய தயாரிப்பாளரான கோட்டபாடி ஜே ராஜேஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்தை முதலில் தயாரித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அதை தொடர்ந்து பிரபு தேவாவின் குலேபகவாலி, ஐரா, டிக்கிலோனா, விஜய் சேதுபதியின் க.பே ரணசிங்கம் மற்றும் சிவகார்த்திகேயனின் ஹீரோ, டாக்டர் மற்றும் அயலான் திரைப்படத்தை தயாரித்தார்.

    இந்நிலையில் தயாரிப்பாளராக இருந்த ராஜேஷ் தற்பொழுது நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக கடுமையான உடற் பயிற்சி செய்து உடலெடையை குறைத்துள்ளார். இப்படத்தை பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநராக இருந்த ஜேபி தென்பதியன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அங்கீகாரம் என தலைப்பிடப்பட்டுள்ளது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக இருக்கிறது.

    இப்படம் ஒரு ஸ்போர்ட்ஸ் கோர்ட் டிராமா கதைக்களத்தில் உருவாகி வருகிறது. படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையை ஜிப்ரான் மேற்கொள்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
    • ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

    கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி நாயகனாக நடித்த எந்த திரைப்படமும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. அவர் கடைசியாக சைரன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    ஜெயம் ரவி அதற்கடுத்து பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையை மேற்கொண்டுள்ளார்.

    சில வாரங்களுக்கு முன் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது என்ற அப்டேட்டை ஒரு வீடியோ மூலம் யூ டியூபில் வெளியிட்டனர். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டை நாளை காலை 11:11 மணிக்கு வெளியிடப்போவதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
    • படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    ஜெயம் ரவி சைரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையை மேற்கொண்டுள்ளார்.

    சில வாரங்களுக்கு முன் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது என்ற அப்டேட்டை ஒரு வீடியோ மூலம் யூ டியூபில் வெளியிட்டனர். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

    தற்பொழுது படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் வாட் இஸ் மக்காமிஷி? என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

    'சைரன்' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி பல சுவாரசிய கதையம்சம் கொண்ட படங்களில் கமிட் ஆகி வருகிறார். இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். 'பிரதர்' திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

    'பிரதர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் விரைவில் வெளியாகவுள்ளது குறித்து படக்குழுவினர் வாட் இஸ் மக்காமிஷி? என்ற போஸ்டரை நேற்று வெளியிட்டு இருந்தனர்.

    இந்நிலையில் 'பிரதமர்' படத்தை செப்டம்பர் 27-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×