என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் சங்கம்"
- சங்க கட்டிட பணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே பதவிக்காலம் நீட்டிப்பு.
- வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.
நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவி நீடிப்பு மற்றும் தேர்தல் நடத்தக்கோரி நடிகர் நம்பிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் நடிகர் விஷால் பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் " சங்க கட்டிட பணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது; பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதில் எவ்வித விதிமீறலும் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
- இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று சொன்னது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பல கர்நாடக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு கமல் பதிலளிக்கும் வகையில் " கர்நாடகா மீதுள்ள என் அன்பு உண்மையானது. நான் இதற்கு முன் மிரட்டப்பட்டுள்ளேன். என் மீது தவறு இருந்தால் நான் மன்னிப்பு கேட்பேன். அப்படி இல்லை என்றால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் அது தான் என்னுடைய வாழ்வியல், நன்றி" என தெரிவித்துள்ளார்.
தற்பொழுது கமல்ஹாசனுக்கு தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் "உலக நாயகன் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமிழ்த் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும் அகில உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர் திரைப்படங்களையே தனது சுவாசமாகவும், உணர்வாகவும் உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர்.
வெகுஜன மக்களை மட்டுமின்றி, அந்த மக்களின் பேராதரவையும், அபிமானத்தையும் ஈட்டிய பய இரை நட்சத்திரங்களின் மனதிலும், மதம், இனம், மொழி பேதமின்றி தனது பேரன்பாலும், கலைத்திறனானும் நிரந்தர இடம் பிடித்தவர் பதம்ஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் அந்த வகையில் அவருக்கும் கிரிஷ் கர்னாட்டுக்கும் உள்ள நட்பும் அவர் எழுத்தின் மேய் இருக்கும் பெரும் ஈடுபாடும் அனைவரும் அறிந்ததே.
அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ராஜ பார்வை திரைப்படத்தை ஆழ்ந்த சகோதர பாசத்துடன் முன் நின்று ளொப் அடித்து துவக்கி வைத்தவர் கன்னட திரை உலகின் ஈடில்லா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த பதிமபூக்ஷன், தாதா சாகிப் பால்கே கர்நாடக ரத்னா, அமரர், டாக்டர் திரு ராஜ்குமார் அவர்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
பின்னாளில், துரதிஷ்டவசமாக டாக்டர் ராஜ்குமார் அவர்கள் கடத்தப்பட்ட சமயத்தில் அதை கண்டித்தும், அவரை மீட்க வேண்டியதை வழியுறுத்தியும் நடத்தப்பட்ட போராட்டங்களில் முதல் குரலாக ஒலித்து முன் நின்றவர்களில் திரு.கமல் ஹாசன் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியதை எவரும் மறுக்க இயலாது.
சூப்பர் ஸ்டார் டாக்டர் திரு ராஜ்குமார் அவர்களைத் தனது உடன் பிறவா மூத்த சகோதரராகவும் அவரது புதல்வர் திரு.சிவராஜ்குமார் அவர்களைத் தனது மகனுக்கு இணையாகவும் கன்னட மக்களைத் தனது குடும்பமாகவும் கருதுபவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.
மிக சமீபத்தில் உடல் நலிற்று சிகிச்சை பெற்ற திரு சிவராஜ்குமார் அவர்கள் மீது திரு.கமல்ஹாசன் கொண்ட அதீத அக்கறையின் வெளிப்பாடாக, அவரை தொடர்பு கொண்டு விசாரித்து ஊக்கம் அளித்ததை மிக நெகிழ்ச்சியுடன் 'தக் லைஃப்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு.சிவராஜ்குமார் அவர்களே நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
அந்த நிகழ்ச்சியின் தாக்கம் குறையாமல் அடுத்து மேடையேறிய திரு கமல்ஹாசன் அவர்கள் டாக்டர் ராஜ்குமார் தனக்கு மூத்தவர் என்றும் அவர்தம் குடும்பத்தில் அவருக்குப் பின் தன்னை ஒரு குடும்ப உறுப்பினர் என்றும். திரு. சிவராஜ்குமார் அவர்கள் அந்தக் குடும்பத்தில் தனக்குப் பின் வந்த இளையவர் என்பதையும் பேரன்போடும். உரிமையோடும் சட்டிக் காட்டும் விதமாக அவர் குடும்பத்தில் எனக்குப் பின் கான் கன்னடரான திரு.சிவராஜ்குமார் கோன்றினார் என்னும் பொருள்பட பேசினார்.
திரு சிவராஜ்குமார் அவர்கள் மீண்டு வந்ததை கண்ட மகிழ்ச்சியில் திரு கமல்ஹாசன் அவர்கள் வெளிப்படுத்திய அந்த வார்த்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டது மட்டுமில்லாமல் அந்த தவறான புரிதலை தீயென வேகமாக பரப்பியும் வருகின்றனர் அதனால் தேவையற்ற சங்கடமான குழலையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்திய மொழிகள் அனைத்திற்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் கமல்ஹாசன், ஒருமைப்பாட்டின், சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருபவர்.
அதன் வெளிப்பாடாகவே கர்நாடகா கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மூலமாக நாற்பதாண்டுகளுக்கும் மேவாசு கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். என்றும் கன்னட மொழியை சீர்காக்கி பார்க்கின்ற கமல் அவர்களுக்கு ஒருபோதும் சிறுமைப்படுத்தும் நோக்கம் இருந்ததில்லை என்பதை அவருடைய கடந்த கால நிகழ்வுகள் தரவுகளாக இருக்கின்றன.
உண்மை இவ்வாறு இருக்க அதற்கு மாறாக திருகமல் ஹாசன் அவர்கள் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல சாதி மதம் இனம் மொழி என்ற எந்த பாகுபாடும் இன்றி மாநில, தேசிய எல்லைகளைக் கடந்து தனது வாழ்நாள் முழுவதுமாக கலைப்பணிக்கு அர்ப்பணித்த ஓர் மாபெரும் கலைகுறுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநிதியை, சுய சிந்தனையும், பகுத்தறிவும் கொண்ட எவருமே அனுமதிக்கலாகாது.
சுய ஆதாயங்களுக்காக குறிப்பிட்ட சிவர் திரு.கமல் ஹாசன் அவர்களை கருவியாக பயன்படுத்தி கன்னட- தமிழ் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகவும், வரலாற்றில் ஒரு மாபெரும் கருப்புப்புள்ளியாகவும் நிலைத்து விடக்கூடும்.
கர்நாடக மாநிலத்தின் அனைத்து அன்பர்களும் திரைத்துறை அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் திரு கமல்ஹாசன் வெளிப்பாடாக உதிர்த்த வார்த்தைகளின் உண்மையான பொருளை உணர்ந்த ஒரு மகத்தான கலைஞனுக்கு எதிராகத் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளைத் தடுத்துநிறுத்த முற்பட வேண்டு என தமிழ்த் திரையுலகத்தின் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் பேரன்புடன் கோரிக்கை வைக்கிறோம் அவர்களது
எந்தக் கலையும் மொழி உட்பட வேறுபாடுகளையும் எல்லைகளையும் கடந்தது. அந்த கலையை ரசிக்கும் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் கூட அது பொருந்தும்.
மொழிகள் அனைத்துமே நீடு பசுழோடு வாழ வேண்டும். அன்பும் புரிதலும் மாற்றார் பண்பாடு போற்றுதலும் மட்டுமே நம்மை இறுகப் பிணைத்து வளம் தரும் எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்" பேதமற்ற ஒற்றுமை பாராட்டும் என தெரிவித்துள்ளனர்.
- நடிகர் சங்க பேரவை கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடக்கிறது.
- துணைத்தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை வாசித்து வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்பிக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பேரவை கூட்டம் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடக்கிறது. தலைவர் நாசர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. துணைத்தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை வாசித்து வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்பிக்கிறார்.
பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும் பொதுச்செயலாளர் விஷால் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் பேசுகின்றனர். துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி அனைத்து சினிமா சங்கங்களின் ஒருங்கிணைப்புடன் அன்று மட்டும் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 25வது நாளை கொண்டாடும் வகையில் கேக் ஒன்றை ரசிகர்களுடன் சேர்ந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
- தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால் அது 100 நாட்களுக்கு சமம்.
திருப்பூர்:
நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்து வெளியான கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் 25 நாட்களாக திரையரங்கில் ஓடி வருகிறது.
இதனை கொண்டாடும் வகையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் 25-வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சதீஷ் கலந்துகொண்டு திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இதனைத்தொடர்ந்து 25வது நாளை கொண்டாடும் வகையில் கேக் ஒன்றை ரசிகர்களுடன் சேர்ந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
தொடர்ந்து மறைந்த நடிகரும் தே.மு.தி.க., நிறுவனத்தலைவருமான விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறும்படம் ஒன்று திரையிடப்பட்டு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து நடிகர் சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால் அது 100 நாட்களுக்கு சமம் . அந்த வகையில் கான்ஜுரிங் கண்ணப்பன் வெற்றிகரமாக ஓடி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன். மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் மரியாதை செய்வது என்பது அது நடிகர் சங்கத்திற்கு பெருமை. நடிகர் சங்கத்தின் ஒரு அடையாளமே விஜயகாந்து தான். இவ்வாறு அவர் கூறினார்.
- கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28-ந்தேதி காலமானார்.
- வருகிற ஜன.19-ந்தேதி நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெறு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவினால் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
நினைவிடத்தில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் நினைவிடத்திற்கு நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விஜயகாந்த் மறைவையொட்டி நடிகர் சங்கம் சார்பில் வருகிற 19-ந்தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும்.
புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கை பற்றி அன்று நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
அரசுக்கும் சில கோரிக்கைகள் வைக்க இருக்கிறோம். அவர் ஒரு நல்ல ஆளுமை. நடிகர் சங்க தலைவராக இருக்கும்போது பல சவால்களை சந்தித்து சாதித்துள்ளார்.
எந்த வேலை என்றாலும் முன்னின்று செய்வார். அவரது புகழ் என்றும் ஓங்கி நிலைத்திருக்கும். நம்மிடம் அவர் இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.
வருங்கால முதலமைச்சராக வேண்டியவர் விதி வசத்தால் போய்விட்டார். அவருடன் நான் சில படங்களில் நடித்திருக்கிறேன். கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை மெரினா அரங்கத்தில் கலைஞருக்கு மிகப்பெரிய விழாவை விஜயகாந்த் எடுத்தார்.
விழாவில் 3½ லட்சம் பேர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கலைஞர் இன்னும் கொஞ்சம் தூரம் நீங்கள் என்னை கடந்து சென்றுவிட்டால் நான் முதலமைச்சராகி விடுவேன் என்றார். அவ்வாறே 1 மாதத்தில் கலைஞர் முதலமைச்சர் ஆனார். மலேசியாவில் கமல், ரஜினி உள்பட தமிழ் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நட்சத்திர விழாவின் மூலம் நடிகர் சங்க கடனை அடைத்தார். அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறினார்.
- கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி
- கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார்
எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் சேரன், "ஏ.வி.ராஜுவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், நடிகர் சங்க நிர்வாகிகளான விஷால், கார்த்தி ஆகியோரை டேக் செய்துள்ள சேரன், நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது
- ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளா
"கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என த்ரிஷா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தடத்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு கூறியிருக்கிறார்.
- கீழ்த்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
திரைத்துறை மற்றும் நடிகை திரிஷா தொடர்பான அதிமுக முன்னாள் நிர்வாகி A.V.ராஜூவின் பேச்சுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைய சமூக வலைத்தளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு.A.V.ராஜீ என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தடத்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் திரு.கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்.
பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக திருமதி.முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் "பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மேலும் நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குப் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம்
- போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது.
கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது. சமூகத்தை பாதிக்கும் ஆபத்தான செயல் என மன்சூர் அலிகான் ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சமீப காலமாக சினிமா நடிகைகளை பொதுவெளியில் கொச்சையாக பேசுவது அதிகரித்துள்ளது.
- ஏ.வி.ராஜுவுக்கு கட்சிக்குள் பிரச்சினை இருக்கலாம், அதற்காக நடிகைகளை அசிங்கமாக பேசுவதா?
நடிகை திரிஷாக்கு ஆதரவு நடிகை கஸ்தூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சமீப காலமாக சினிமா நடிகைகளை பொதுவெளியில் கொச்சையாக பேசுவது அதிகரித்துள்ளது. வாய், நாக்கு இருப்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசுவதா? பார்க்காத விஷயத்தை பார்த்தமாதிரி எப்படி பேசலாம். ஏ.வி.ராஜுவுக்கு கட்சிக்குள் பிரச்சினை இருக்கலாம், அதற்காக நடிகைகளை அசிங்கமாக பேசுவதா?அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
My video statement on AV Raju's shocking slander on Trisha, Karunaas and actresses in general. @trishtrashers @karunaasethu
— Kasturi (@KasthuriShankar) February 20, 2024
I believe a swift and strong reaction is warranted from the affected parties. https://t.co/CYBMItalEV
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான், இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இப்போது அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
- திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான், இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
கூவத்தூரில் நடிகைகள் அழைத்து வரப்பட்டதாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இப்போது அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
பிரபல நடிகை குறித்து சர்ச்சை பேச்சு.. "நான் அப்படி பேசவில்லை.." ஏ.வி.ராஜூ பரபரப்பு விளக்கம்#avraju #admk #thanthitvhttps://t.co/9UdUYMmZzZ
— Thanthi TV (@ThanthiTV) February 20, 2024
இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
திரிஷா விவகாரத்தில் நடிகை கஸ்தூரி, மன்சூர் அலிகான், இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏ.வி.ராஜூவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் கருணாஸ் இன்று புகார்
- கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார்.
கூவத்தூர் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் கருணாஸ் இன்று புகார் அளித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.