search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Mansooralikhan"

  • கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம்
  • போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது.

  கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது. சமூகத்தை பாதிக்கும் ஆபத்தான செயல் என மன்சூர் அலிகான் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

  அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

  இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதற்காக அவருடன் உடனே சேர்ந்து பயணிக்க முடியாது. அவர் தனது கொள்கைகளைச் சொல்லட்டும், பின்னர் பார்க்கலாம்.
  • நடிகர்கள் கட்சித் தொடங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

  நடிகர்கள் கட்சித் தொடங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

  சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மன்சூர் அலிகான், " நான் இதற்கு முன்னர் தொடங்கிய கட்சிக்கு தமிழ் தேசிய புலிகள் என பெயரிட்டிருந்தேன். ஆனால் இந்தியா முழுவதும் முழுமைக்கு தமிழ்நாட்டின் முன்னேற்றம் அடைந்ததாகத் தெரியவில்லை. தமிழ் இனத்தில் முன்னேற்றமில்லை. ஒரு தமிழனை பிரதமராக்க முடியவில்லை. இது தொடர்பாக 24ஆம் தேதி நடத்தவுள்ள மாநாட்டில் விரிவாக பேசவுள்ளேன். வரும் மக்களவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவோம். ஆனால் எத்தனைத் தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் என இன்னும் முடிவு செய்யவில்லை.

  நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கே உடன்பாடு இல்லை. என்னை நான் ஒரு நடிகனாகக் கருதவில்லை. கடந்த 1991-ம் ஆண்டுதான் எனது முதல் படம் வெளியானது. ஆனால் கடந்த 1987, 88 ஆண்டுகளில் மறைந்த ஆதித்தனாரை தமிழர் தலைவர் என அழைத்தற்கு அதனை விமர்சித்து ஒரு பத்திரிகை கடுமையாக எழுதியது. இதனைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது நான் நடனக் கலைஞராக இருந்தேன்."

  அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற்ற காவிரி, இலங்கைப் பிரச்னைகளுக்கான போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆளுநர் மாளிகைக்கு எதிராக கிரிக்கெட் விளையாடச் சென்றேன். அப்போது தமிழ் நாட்டில் மைதானங்களே இல்லை. ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல முடியாத காலகட்டம். இதுபோன்ற போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். நடிப்பு என்பது தொழிலாகத்தான் எனக்கு இருந்தது.

  சமீபகாலமாக நாட்டில் என்ன நடக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு முடிவோடு இறங்கி இருக்கின்றேன், பார்ப்போம். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்துள்ளனர். 15 ஆயிரம் பேருக்கு மேல் பொறுப்புகள் போட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளோம். இந்தியா முழுமைக்குமான உரிமைகளுக்கு குரல் கொடுப்போம். எங்கள் கட்சி தேசிய அளவில் இருக்கும். அதற்காக நாங்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. தமிழர்களுக்கான உரிமைகள் பல மறுக்கப்படுகின்றது. ஒக்கிப் புயல் வந்தபோது பல நாட்கள் கடல் நீரில் மீனவர்கள் மிதந்தார்கள். ஆனால் ஒரு ஹெலிகாப்ட்டர் கூட மினவர்களை மீட்கச் செல்லவில்லை. நம்மால் அப்படி இருக்க முடியுமா? மீனவர்கள் யாராவது நம்மை மீட்க வருவார்களா என காத்துக்கொண்டு இருந்தனர்.

  நான் விடப்போவதில்லை. அதிரடி அரசியல், உரியடி பதவிகள். தேசியக் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதற்காக அவருடன் உடனே சேர்ந்து பயணிக்க முடியாது. அவர் தனது கொள்கைகளைச் சொல்லட்டும், பின்னர் பார்க்கலாம். பல்லாவரத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

  தமிழ்நாட்டில் படிப்பறிவு குறைவாக உள்ளது. பார்ப்பதற்கு ஹாலிவுட் பட நடிகர் போல உள்ளார். ஒரு ஜெராக்ஸ் கடை எங்கு உள்ளது எனக் கேட்டால் தெரியவில்லை. இப்படியான நிலையில்தான் தமிழ்நாடு உள்ளது" என மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

  கனமழையால் தன் வீட்டிற்கு முன் தேங்கி இருக்கும் தண்ணீரில் நடிகர் மன்சூரலிகான், பாட்டுபாடி படகு ஓட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
  தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூரலிகான். வில்லன், காமெடியனாக நடித்து வரும் மன்சூரலிகான், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

  மன்சூரலிகான்

  கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் நடிகர் மன்சூரலிகான், மழையினால் தனது வீட்டிற்கு முன் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீரில் படகு ஓட்டி இருக்கிறார். மேலும், மழை நிலைமையை பாடி, மகிழ்ந்து வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார் மன்சூரலிகான்.


  சென்னையில் இருந்து சேலத்துக்கு அமைய இருக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த மன்சூர் அலிகான் இன்று கைது செய்யப்பட்டார். #Mansooralikhan
   சென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த புதிய சாலை அமைகிறது. தற்போது சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை.

  ஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். அதே போல் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகிறது. பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த சாலை அமைத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும். கிராமங்களும் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

  இந்த வழித்தடத்தில் உள்ள 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளது.

  இதனால் இயற்கை வளங்கள் அழியும் என்று கூறி வடமாநிலத்தை சேர்ந்த பியூஸ் மானுஸ் என்ற இயற்கை ஆர்வலர் சேலத்தில் முகாமிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இவரின் அழைப்பின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த மாதம் 3-ந்தேதி அங்கு சென்றார். கன்னங்குறிச்சியில் மூக்கன் ஏரியை பரிசலில் சென்று பார்த்தார். எட்டு வழிச்சாலை அமையும் இடங்களையும் பார்வையிட்டார்.

  பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சேலத்தில் விமான நிலைய விரிவாக்கமும், எட்டு வழிசாலை அமைக்க முயற்சிப்பதும் சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான். பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த திட்டங்களை நிறை வேற்றினால், இயற்கை வளங்கள் அழியும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே மத்திய- மாநில அரசுகள் இந்த திட்டங்களை கைவிட வேண்டும்.

  பொதுவாக தமிழகத்தின் அனைத்து திட்டங்களுமே அழிவை நோக்கியே செல்கின்றன. இந்த சர்வாதிகார ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய-மாநில அரசுகள் கமி‌ஷனுக்காகத்தான் ஆட்சி நடத்தி வருகின்றன. மக்கள் எதிர்ப்பை மீறி இந்த திட்டங்களை அரசு செயல் படுத்தக்கூடாது.

  இந்த திட்டங்களை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டத்தில் நான் கலந்து கொள்வேன். மக்கள் எதிர்ப்பை மீறி எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை வெட்டிக் கொன்றுவிட்டு ஜெயிலுக்கு செல்வேன் என்று ஆவேசமாக பேசினார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தனர்.

  கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசு நிர்வாகத்தை அச்சுறுத்துதல் உள்பட பல பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

  இந்த வழக்கில் மன்சூர் அலிகானை இன்று காலை சென்னையில் அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை வேனில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் சேலம் அழைத்து சென்றனர்.
  ×