என் மலர்
நீங்கள் தேடியது "Mansoor alikhan"
- பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- புதிய வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருக்கிறார்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி பல டாஸ்க்குகள் பல்வேறு திருப்பங்கள் என பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் ஜி.பி.முத்து தாமாக முன் வந்து வெளியேறினார். தொடர்ந்து இரண்டாவது நபராக கடந்த வாரம் அசல் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். இப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் இன்றுடன் 22 நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ்
இதனிடையே சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வந்தது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், 'நான் தான் பிக்பாஸாக இருப்பேன்' என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், 'விவசாயத்திற்கு முக்கியத்துவம்' கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸை இருந்து நடத்துவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மன்சூர் அலிகான்
இந்த நிலையில், புதிய வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருப்பது பிக்பாஸ் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது உண்மையா?, புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி சாத்தியமா? என்பது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது, "இந்த போட்டியில் உள்ளூர் போட்டியாளர்கள் மட்டும் அல்ல வெளிநாட்டில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளலாம். இதன் மூலம் வெளிநாட்டினரின் அதிநவீன விவசாய கருவிகள் நம் நாட்டுக்கு வரும். மரம் ஏறுவதற்கு சரியான கருவி இல்லாமல் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு போட்டி நடத்தினால் நமக்கு பல அதிநவீன கருவிகளும், கண்டுபிடிப்பாளர்களும் கிடைப்பார்கள்.

மன்சூர் அலிகான்
மேலும், விவசாயத்தின் மீது தற்போதைய தலைமுறைக்கு ஆர்வம் ஏற்படுவதோடு, இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட ஒரு வழியாகவும் இந்த போட்டி அமையும். இதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய இயற்கை விவசாய புரட்சி ஏற்படும். இன்று விற்கப்படும் காய்கறிகள் அனைத்தும் செயற்கைத்தன்மை வாய்ந்ததாகவும், ஹைப்ரீட் வகைகளாகவும் இருக்கிறது. இதனால் சிறுவயதில் பல நோய்களுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

மன்சூர் அலிகான்
எனவே, இப்படி ஒரு போட்டி மூலம் இயற்கை முறையில் காய்கறி வளர்த்தலையும், இயற்கை உணவு சமைத்தல் போன்றவற்றை கொண்டு புதிய வகையிலான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால், அது வியாபார அளவில் மட்டும் இன்றி மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்." என்றார்.
மேலும், இந்த போட்டியை என்னை வைத்து நடத்த எந்த தொலைக்காட்சி முன் வந்தாலும் அவர்களுக்காக நான் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.
- பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் உள்ளே செல்லும் நபர் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். அதன்பின்னர் நடிகை மைனா நந்தினி வீட்டினுள் நுழைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் 19 நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். இதனிடையே வைல்ட் கார்ட் எண்ட்ரியில் யார் உள்ளே வரப்போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதில் உள்ளே நுழையும் யார் என்று அவர்களின் வியூகத்திற்கு ஏற்ப ஒரு ஒருவரை சொல்லி வருகிறனர். அதன்படி ஜி.பி.முத்துவுக்கு பதில் பிக்பாஸ் வீட்டினுள் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளே நுழையவுள்ளார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

மன்சூர் அலிகான்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், 'நான் தான் பிக்பாஸாக இருப்பேன்' என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், 'விவசாயத்திற்கு முக்கியத்துவம்' கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸாக இருந்து நடத்துவேன் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான்.
- இவரின் நீண்ட நாள் ஆசையான கமலுடன் நடிப்பது விரைவில் நடக்கவிருக்கிறது.
தமிழ் சினிமாவின் 1990 காலகட்டத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டியவர் மன்சூர் அலிகான். மிரட்டும் முகபாவனை, அசாத்தியமான வசன உச்சரிப்பு என சினிமாவில் டிமாண்டான வில்லனாக வலம் வந்தார். மிகப்பெரிய கதாநாயகர்களுடன் சினிமாவில் மல்லுக்கட்டிய மன்சூர் அலிகானுக்கு, கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட நடிக்காதது மிகப்பெரிய வருத்தமாக இருந்திருக்கிறது. இதை பல மேடைகளிலும் மன்சூர் அலிகான் சொல்லி இருக்கிறார்.

மன்சூர் அலிகான்
அதேபோல, 'மன்சூர் அலிகானை ஒரு படத்திலாவது பயங்கரமான வில்லனாக நடிக்க வைத்து விடுவேன்' என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி எடுத்துள்ளார். 'விக்ரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்தையும் எடுக்க லோகேஷ் ஆர்வமாக இருக்கிறார்.

மன்சூர் அலிகான்
எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல் 'விக்ரம்' படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனுடன் மல்லுக்கட்டும் வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் மன்சூர் அலிகானின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறப்போகிறது.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார்.
குறிப்பாக சாலையோர வியாபாரிகளுடன் அமர்ந்து பிரசாரம் செய்தது, டீக்கடைகளில் டீ போட்டு கொடுத்தது, புரோட்டா கடைகளில் மாவு தயாரித்து கொடுத்தது, செருப்பு தைக்கும் தொழிலாளர்களுடன் அமர்ந்து ஷூ பாலீஸ் போட்டு கொடுத்தது, குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் பெண்களிடம் காய்கறி விலை நிலவரம் குறித்து கேட்டு பிரசாரம் செய்தது போன்ற பல்வேறு சம்பவங்கள் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.
தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்களை விட இவரது நூதன பிரசாரமே தினசரி செய்தியாக வெளிவந்து கொண்டு இருந்தது. இவரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்த போது சட்டை அணியாமல் மேடையில் வந்து கலந்து கொண்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இன்று திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழக கல்லூரிக்கு அருகே மன்சூர்அலிகான் தனது கட்சியினருடன் வந்தார். தபால் வாக்குப்பதிவு மற்றும் முதல் சுற்று வாக்குப்பதிவு ஆகியவற்றை கேட்டபோது தனக்கு குறைவான வாக்குகளே வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து வாக்கு நிலவரங்களை தனக்கு தெரிவிக்குமாறு தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதே போல் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டாக்டர் சுதாகரனும் மிகுந்த நம்பிக்கையுடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்தார். 2 சுற்று முடிவில் கிடைத்த வாக்கு நிலவரங்களை கேட்டு ஏமாற்றத்துடன் அவரும் திரும்பிச் சென்றார்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுக்கிறார். இதற்காக திண்டுக்கல் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரோட்டா செய்வது, டீ போடுவது, டயருக்கு பஞ்சர் ஒட்டுவது, துணிகளை அயன் செய்வது, குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது என விதவிதமான யுக்திகளில் பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார்.
இன்று திண்டுக்கல் அருகே உள்ள கோபால்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தார். இவர் ஒத்தக்கடை பகுதியில் சாலையோரம் தென்னை நார் திரிக்கும் பெண் தொழிலாளர்களிடம் வேலை எப்படி போகிறது, கிடைக்கிற வருமானம் போதுமானதாக உள்ளதா? வேறு ஏதும் பிரச்சனைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். வேலாதயும்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் போது ஒரு வீட்டில் வளைகாப்பு நடைபெற்றது. அங்கு சென்ற நடிகர் மன்சூர்அலிகான் கர்ப்பிணியை வாழ்த்தி ஆசீர்வதித்தார். பின்னர் கலவை சாதத்தை விரும்பி வாங்கி சாப்பிட்டார்.
அதன்பின்னர் பெரியமுளையூர் பகுதியில் வாக்கு சேகரித்தபோது உண்ட களைப்பினாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து அதனால் ஏற்பட்ட சோர்வினாலும் அங்கிருந்த அரசு பள்ளி மரத்தின் அடியில் அயர்ந்து தூங்கினார்.
அப்போது அவ்வழியாக வந்த சிறுவர் சிறுமிகள் கேப்டன் பிரபாகரன் படத்தில் வந்த மன்சூர்அலிகானின் வீரபத்திரன் கதாபாத்திரத்தை நினைவில் கொண்டு நம்ம ஊருக்கு வீரபத்திரன் வந்துள்ளார் என ஆர்வமாக சத்தம்போட்டுக் கொண்டே சென்றனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் மன்சூர்அலிகானை காண திரண்டனர். குழந்தைகளிடம் நன்றாக படிக்க வேண்டும் என்றார். பொதுமக்களிடம் நல்ல வேட்பாளரை தேர்வு செய்யுங்கள் என கூறி சென்றார். #Loksabhaelections2019 #MansoorAlikhan
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் அம்மியில் மசாலா அரைப்பது, இளநீர் வெட்டுவது, தேநீர் விற்பது, மீன் விற்பது, காய்கறி விற்பது என வித்தியாசமான முறையில் ஆங்காங்கே சென்று மக்களிடையே நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பழனி சுற்றுவட்டார பகுதிக்கு சென்ற இவர் பாப்பம்பட்டி பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது வயல்வெளிகளில் வேலை பார்த்த பெண்கள் மரக்கிளையில் தொட்டில் கட்டி தங்களது குழந்தைகளை தொட்டிலில் போட்டிருந்தனர்.
அங்கு சென்ற மன்சூர்அலிகான் குழந்தைகளுக்கு ஆரீராரோ என தாலாட்டு பாடினார். அப்போது வயலில் களை பறித்த பெண்கள் மன்சூர்அலிகானை பார்த்ததும் ஓடிவந்தனர். அவர்களிடம் மன்சூர்அலிகான் உங்கள் வாழ்வு வளம்பெற கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்றார். #LokSabhaElections2019 #MansoorAlikhan
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நடிகர் மன்சூர்அலிகான் மக்களை கவரும் வகையில் வாக்கு சேகரித்து வருகிறார். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் அவரே தராசு பிடித்து பொதுமக்களுக்கு காய்கறி வழங்கினார். திண்டுக்கல் நகர் பகுதியில் தெருக்களை சுத்தம் செய்து கரும்பு விவசாயிக்கு ஓட்டு போடுங்க. மற்றவங்களுக்கு ஓட்டு போட்டா வேட்டு வச்சிருவாங்க என்று பிரசாரம் செய்தார்.
நேற்று கொடைக்கானல் பகுதியில் வாக்கு சேகரித்தார். ஏரிச்சாலை, கலையரங்கம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் இருந்தவாரே பிரசாரம் செய்தார். அதன் பின்னர் இரு சக்கர வாகனத்தில் பஸ் நிலையம், செவன்ரோடு, கே.சி.எஸ். திடல் ஆகிய பகுதிகளில் ஓட்டு கேட்டார்.
டீக்கடைக்குள் சென்ற அவர் டீ தயாரித்து எனக்கு ஓட்டு போடுங்கள். இதை விட நல்ல டீயாக தருகிறேன் என்று தமாசாக பேசினார். அங்கு நின்றவர்கள் அனைவரும் வாய் விட்டு சிரித்தனர். மூஞ்சிக்கல் பகுதிக்கு சென்ற அவர் செருப்பு தைக்கும் கடைக்கு சென்று பொதுமக்களின் காலணிகளுக்கு பாலீஷ் போட்டு ஆதரவு கோரினார்.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கும் முன்பே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாவட்டத்தின் பல பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார்.
குறிப்பாக விவசாய தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களையும், காய்கறி சந்தையில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்கு கேட்டு வந்தார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தினந்தோறும் ஒவ்வொரு பகுதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி திண்டுக்கல் அண்ணாமலையார் பள்ளி செல்லும் சாலையில் துப்புரவு பணியாளர்கள் வைத்திருந்த துடைப்பத்தை எடுத்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார். தெரு முழுவதும் இருந்த குப்பைகளை அள்ளி வண்டியில் கொட்டினார்.
தாமதமாக வந்த துப்புரவு பணியாளர்களிடம் எத்தனை மணிக்கு பணிக்கு வருகிறீர்கள்? என கண்டித்தார். அதனை தொடர்ந்து தெருவோரம் இருந்த வியாபாரிகளிடம் தனக்கு வாக்களிக்குமாறு நகைச்சுவையுடன் கூறிச்சென்றார். #LokSabhaElections2019 #MansoorAliKhan
