கேப்டன் பிரபாகரன் படத்தை பார்த்து Vibe-ஆன மன்சூர் அலிகான், பேரரசு

இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர் திரையரங்கில் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
கேப்டன் பிரபாகரன் படத்தை பார்த்து Vibe-ஆன மன்சூர் அலிகான், பேரரசு
Published on

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் நாயகனாகவும், 'கேப்டன்' என்று கோடிக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், அவரது 100-வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை புதுப்பொலிவுடன் கடந்த 22ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

1991-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு அன்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இசைஞானி இளையராஜாவின் அதிரடியான இசையில், விஜயகாந்துடன் சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலி கான், லிவிங்ஸ்டன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.

தற்போது, பலரும் இப்படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்று விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர் திரையரங்கில் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

அப்போது, இப்படத்தில் இடப்பெறும் "ஆட்டமா தேரோட்டமா" பாடலுக்கு, மன்சூர் அலிகான் மற்றும் பேரரசு நடனமாடி வைப் ஆனார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், 'கேப்டன் பிரபாகரன்' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், பேரரசு உள்ளிட்ட பிரபலங்கள் கேக் வெட்டி விஜயகாந்த் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com