என் மலர்
நீங்கள் தேடியது "கருப்பு பல்சர்"
மிடில் க்ளாஸ் வாலிபரான அட்டகத்தி தினேஷ், ஆர்ஓ ப்யூரிபையர் வாட்டர் சப்ளை செய்து வருகிறார். திருமணத்திற்காக, மணமகள் தேவை என மேட்ரிமோனியலில் விளம்பரம் செய்கிறார்.
அப்படி, ரேஷ்மாவை சந்திக்கும் தினேஷ்க்கு அவரை பிடித்துப்போகவே இருவரும் பழகுகிறார்கள். இருவரும் காதலிக்கிறார்கள்.
காதலிக்கும்போது, தன்னிடம் கருப்பு நிற பல்சர் இருப்பதாக தினேஷ் கூற, அந்த பைக்கில் தன்னை அழைத்து செல்லும்படி ரேஷ்மா ஆசையாக கூறுகிறார்.
இதனால், தினேஷ் வேறு வழியின்றி பழைய கருப்பு பல்சர் ஒன்றை விலைக்கு வாங்குகிறார். ஆனால் அந்த பைக்கை வாங்கியதில் இருந்து தினேஷூக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது. தன்னை சுற்றி அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன.
அப்போது, இந்த பைக்கில் ஆவி புகுந்து இருப்பது தெரியவருகிறது. இதன்பிறகு, பைக்கில் அமானுஷ்ய சக்தி புகுந்தது எப்படி? தினேஷை துரத்த காரணம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை..
நடிகர்கள்
பட்ஜெட் போட்டு வாழும் இளைஞராக வரும் அட்டகத்தி தினேஷ், தனது வழக்கமான எதார்த்த நடிப்பில் இரு வேடங்களில் கலக்கி இருக்கிறார். அழகாக வந்து தனது கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ரேஷ்மா. மன்சூர் அலிகான், மதுநிகா, சரவண சுப்பையா, கலையரன் கண்ணுசாமி உள்ளிட்டோரும் தங்களது பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
வழக்கமான கதை என்றாலும் திரைக்கதை எடுத்திருக்கும் விதத்தில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். பைக்கில் காளையின் ஆவி புகுந்தது வித்தியாசமான முயற்சி.
இசை
இன்பாவின் இசை படத்திற்கு பலம்
ஒளிப்பதிவு
பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கச்சிதம்.
ரேட்டிங்- 1.5/5
- தணிக்கை வாரியத்தின் இந்த செயல் அப்பட்டமான தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் போக்காக தெரிகிறது.
- நான் என் மனதில் பட்டதை தைரியமாக சொல்வேன்.
முரளி கிரிஷ்.எஸ் இயக்கத்தில் நாளை மறுநாள் (30-ந்தேதி) திரைக்கு வர இருக்கும் படம் 'கருப்பு பல்சர்'. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ் மதுனிகா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசினார். சமீப காலமாக விஜய்யை கடுமையாக எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டு வந்த மன்சூர்அலிகான் நேற்று நடந்த 'கருப்பு பல்சர்' பட விழாவில் 'ஜன நாயகன்' பட விவகாரம் குறித்து விஜய்க்கு ஆதரவாக பேசினார். படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர தாமதிப்பதாக கூறி தணிக்கை வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்து பேசினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
படம் எடுப்பது என்பது படைப்பாளியின் சுதந்திரம். ஆனால் தற்போது அந்த சுதந்திரம் பறிபோய் கொண்டு இருக்கிறது. படைப்பாளிகள் நசுக்கப்பட்டு வருகிறார்கள். மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கையில் விஜய்யின் ஜனநாயகன் படத்தை வெளியிட முடியாமல் தணிக்கை வாரியம் செய்வது எந்த வகையில் நியாயம். மத்திய அரசு ஏன் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அந்த படத்துக்கு முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஏன் தணிக்கை வாரியம் யோசிக்க மறுக்கிறது.
இந்த படத்தை வெளியிடுவதால் அவர்களுக்கு என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது. அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள் .ஆனால் பொங்கல் பண்டிகைக்கு அந்த படத்தை வரவிடாமல் செய்து விட்டார்கள். இப்போது அந்த படத்தை வெளியிடவே கூடாது என்ற வகையில் முயற்சி செய்து வருகிறார்கள் .
தணிக்கை வாரியத்தின் இந்த செயல் அப்பட்டமான தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் போக்காக தெரிகிறது. மத்திய அரசும் அதற்கு துணை போகிறது. நாட்டில் எவ்வளவோ அத்துமீறல்கள் அடக்கு முறைகள் மக்கள் பிரச்சனைகள் இருக்கும் போது துளி கூட செவி சாய்க்காத மத்திய அரசு இது போன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து முழுமூச்சாக இறங்குவது பயமாக இருக்கிறது. இப்படி சென்றால் படைப்பாளியின் சுதந்திரம் என்ன ஆவது. இதை நினைத்தாலே வேதனையாக இருக்கிறது. நான் என் மனதில் பட்டதை தைரியமாக சொல்வேன். எந்த இடத்திலும் பயம் இல்லாமல் பேசுவேன். எனக்கு யாரைப் பற்றியும் கவலை கிடையாது. திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும்.
இந்த போக்கு தொடர்ந்தால் படங்கள் இனி சுதந்திரமாக வெளிவர முடியாது. என்னை கேட்டால் தணிக்கை வாரியமே எதற்கு என்பேன். நல்ல படத்தை மக்கள் மதிப்பீடு செய்து சான்றிதழ் அளித்தால் போதும். எதற்கு தணிக்கை வாரியம்? என்று பேசினார்.
- இப்படத்தில் ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
- இந்தப் படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
'அட்டக்கத்தி' தினேஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'கருப்பு பல்சர்' படம் வருகிற 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை முரளி கிரிஷ் இயக்கியுள்ளார். முரளி இதற்கு முன்பு 'சிவா மனசுல சக்தி' மற்றும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எம். ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
இப்படத்தில் ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டாக்டர் சத்ய முரளி கிருஷ்ணன் தயாரித்த இந்தப் படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
'கருப்பு பல்சர்' படத்தில் தினேஷ் இருவேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவராகவும் மற்றொருவர் மதுரை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரராகவும் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியால் ஏற்படும் முன்விரோதத்தில் மதுரை சேர்ந்த தினேஷ் கொலை செய்யப்பட அவருடைய பல்சர் பைக் சென்னையை சேர்ந்த தினேஷிடம் வந்து சேர இதன்பின் நடைபெறும் சம்பவங்களே கதை.
இந்த நிலையில், 'கருப்பு பல்சர்' வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.






