என் மலர்
சினிமா செய்திகள்

கருப்பு பல்சர்- திரைவிமர்சனம்
மிடில் க்ளாஸ் வாலிபரான அட்டகத்தி தினேஷ், ஆர்ஓ ப்யூரிபையர் வாட்டர் சப்ளை செய்து வருகிறார். திருமணத்திற்காக, மணமகள் தேவை என மேட்ரிமோனியலில் விளம்பரம் செய்கிறார்.
அப்படி, ரேஷ்மாவை சந்திக்கும் தினேஷ்க்கு அவரை பிடித்துப்போகவே இருவரும் பழகுகிறார்கள். இருவரும் காதலிக்கிறார்கள்.
காதலிக்கும்போது, தன்னிடம் கருப்பு நிற பல்சர் இருப்பதாக தினேஷ் கூற, அந்த பைக்கில் தன்னை அழைத்து செல்லும்படி ரேஷ்மா ஆசையாக கூறுகிறார்.
இதனால், தினேஷ் வேறு வழியின்றி பழைய கருப்பு பல்சர் ஒன்றை விலைக்கு வாங்குகிறார். ஆனால் அந்த பைக்கை வாங்கியதில் இருந்து தினேஷூக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது. தன்னை சுற்றி அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன.
அப்போது, இந்த பைக்கில் ஆவி புகுந்து இருப்பது தெரியவருகிறது. இதன்பிறகு, பைக்கில் அமானுஷ்ய சக்தி புகுந்தது எப்படி? தினேஷை துரத்த காரணம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை..
நடிகர்கள்
பட்ஜெட் போட்டு வாழும் இளைஞராக வரும் அட்டகத்தி தினேஷ், தனது வழக்கமான எதார்த்த நடிப்பில் இரு வேடங்களில் கலக்கி இருக்கிறார். அழகாக வந்து தனது கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ரேஷ்மா. மன்சூர் அலிகான், மதுநிகா, சரவண சுப்பையா, கலையரன் கண்ணுசாமி உள்ளிட்டோரும் தங்களது பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
வழக்கமான கதை என்றாலும் திரைக்கதை எடுத்திருக்கும் விதத்தில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். பைக்கில் காளையின் ஆவி புகுந்தது வித்தியாசமான முயற்சி.
இசை
இன்பாவின் இசை படத்திற்கு பலம்
ஒளிப்பதிவு
பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கச்சிதம்.
ரேட்டிங்- 1.5/5






