என் மலர்
நீங்கள் தேடியது "Karuppu Pulsar"
- இப்படத்தில் ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
- இந்தப் படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
'அட்டக்கத்தி' தினேஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'கருப்பு பல்சர்' படம் வருகிற 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை முரளி கிரிஷ் இயக்கியுள்ளார். முரளி இதற்கு முன்பு 'சிவா மனசுல சக்தி' மற்றும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எம். ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
இப்படத்தில் ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டாக்டர் சத்ய முரளி கிருஷ்ணன் தயாரித்த இந்தப் படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
'கருப்பு பல்சர்' படத்தில் தினேஷ் இருவேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவராகவும் மற்றொருவர் மதுரை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரராகவும் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியால் ஏற்படும் முன்விரோதத்தில் மதுரை சேர்ந்த தினேஷ் கொலை செய்யப்பட அவருடைய பல்சர் பைக் சென்னையை சேர்ந்த தினேஷிடம் வந்து சேர இதன்பின் நடைபெறும் சம்பவங்களே கதை.
இந்த நிலையில், 'கருப்பு பல்சர்' வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.






