என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூல் சுரேஷ்"
- கோட் படம் புரமோஷனுக்காக ஆடு-யை கொண்டு வந்தேன்.
- முதலில் யானையை கொண்டு வரலாம் என்று இருந்தேன்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 'தி கோட்' படத்துக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் தமிழகத்தில் கோட் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.
இந்த படத்தை பார்க்க கூல் சுரேஷ் பார்க்க வந்தார். எந்த ஒரு புதிய படம் ரிலீஸ் ஆனாலும் தவறாமல் வந்து படத்தைப் பற்றியும் படத்தில் நடித்த நடிகர்களை பற்றியும் மிகத் தெளிவாக விமர்சனம் செய்வதில் கூல் சுரேஷ் எப்போதுமே வித்தியாசம் தான். அதுவும் படத்தை பார்க்கும்போது படத்திற்கு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு ப்ராப்பர்ட்டியுடன் வந்து படத்தை புரொமோட் செய்வார்.
அந்த வகையில் ஒரு ஆட்டுடன் வந்தார். படத்தை பார்ப்பதற்கு முன்பே தளபதி தளபதி என கத்திக் கொண்டே தான் உள்ளே செல்கிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோட் படம் புரமோஷனுக்காக ஆடு-யை கொண்டு வந்தேன். முதலில் யானை கொண்டு வரலாம் என்று இருந்தேன். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அணுமதி வாங்க வேண்டும் என்பதால் யானையை கொண்டு வரவில்லை. நான் யானையை கொண்டு வருவதற்காக காரணம் என்னவென்றால் அவரது கட்சி கொடியில் யானை இருப்பது தான். தளபதியின் கோட்டு 2026-ம் ஆண்டு போடுங்க ஓட்டு.
இவ்வாறு சுரேஷ் கூறினார்.
- சத்யராஜ் அடுத்து நடித்திருக்கும் திரைப்படம் தோழர் சேகுவேரா.
- திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவின் வெர்சடைல் நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதுக்கேற்றார் போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தும் நபர். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது வெப்பன் திரைப்படம்.
வெப்பன் திரைப்படத்தின் ஒரு சூப்பர் ஹுயுமன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் ஒரு மாறுப்பட்ட கெட்டப்பில் நடித்து இருந்தார்.
சத்யராஜ் அடுத்து நடித்திருக்கும் திரைப்படம் தோழர் சேகுவேரா. இப்படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியானது. திரைப்படம் முன்னதாக மார்ட் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இருந்தது ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அது தள்ளிப்போனது. திரைப்படம் தற்பொழுது வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதிகார வர்கத்திற்கும் தொழிலாளி வர்கதுக்கும் இடையே நடக்கு போர் மற்றும் பாகுபாடுகளை பேசக் கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது. சத்யராஜுடன் இணைந்து ரஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், அலெக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சாம் அலன் படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தின் இசையை பி.எஸ் அஷ்வின் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியன் 2 படம் இன்று காலை வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.
- இன்று ஒருநாள் மட்டும் 5 சிறப்பு காட்சிகள் வரை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் இந்தியன் 2.
லைகா நிறுவனம் தயாரித்து உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பல சர்ச்சைகள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 9 மணிக்கு தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகியுள்ளது. இன்று ஒருநாள் மட்டும் 5 சிறப்பு காட்சிகள் வரை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, இந்தியன் 2 படம் இன்று காலை வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.
இந்நிலையில், சர்ச்சைகளுக்கு பேர் போன கூல் சுரேஷ் சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்குக்கு இந்தியன் தாத்தா வேடமணிந்து கையில் தேசியகொடியுடன் குதிரையில் சவாரி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பொன்னும் பொருளும் அள்ளி கொடுக்க நான் பெரிய பணக்காரன் இல்லை.
- நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு நண்பன் சந்தானம் தான் காரணம்.
காமெடி நடிகர் கூல் சுரேஷ் அளித்த பேட்டியில்,
நான் பாஜக-வுக்கு பிரசாரம் செய்ததை பார்த்து எனக்கு தெரிந்தவர்களே அதிர்ச்சி அடைந்தனர். சங்கி, பாஜக சப்போட்டர் என்று என்னை பலர் விமர்சனம் செய்தனர். மற்ற கட்சிகள் அழைத்து இருந்தால் அவர்களுக்கும் பிரசாரம் செய்து இருப்பேன்.
நான் பாஜக சப்போட்டர் இல்லை, என்னை மதித்து கூப்பிட்டதால் நான் அவர்களுக்கு பிரசாரம் செய்தேன். கூல் சுரேஷ் வந்தால் பிரசாரத்தில் கூட்டம் இருக்கும். எந்த வேட்பாளருக்கு அவர் ஓட்டு கேட்டு வருகிறாரோ அவர் ஜெயிப்பார் என்று அவர்களுக்கு தெரிந்து உள்ளது. அதனால் என்னை கூப்பிட்டார்கள்.
நானும் சந்தோஷமாக அவர்களுக்கு பிரசாரம் செய்தேன். நீங்கள் அழைத்தாலும் நான் வந்து இருப்பேன். வரமாட்டேன் என்று சொல்ல மாட்டேன். உங்கள் வீட்டு பிள்ளை தான் கூல் சுரேஷ்.
போனதுக்கு பிறகு நீங்கள் அந்த கட்சிக்கு போய்ட்டீங்க என்று சொன்னால் நான் என்ன செய்வது... இது என்னுடைய ஆதங்கம்.
அடுத்த வாரம் டெல்லி செல்கிறேன். குறைந்தபட்சம் 100 வாக்காளர் அட்டை இருக்க வேண்டும். சிஎஸ்கே-க்கு கொடி தயார் செய்து விட்டேன். இருந்தாலும் இன்னொரு சந்திப்பில் முழுமையாக கூறுவேன். கூல் சுரேஷ் கட்சி... சிஎஸ்கே கட்சி வருவது உறுதி. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இப்ப கூட ஒருவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தேன். சில பேர் கட்சி ஆரம்பிக்க போறீங்களா என்று கேட்டார்கள்.
கட்சி ஆரம்பிக்க போவது உறுதிதான். நான் செய்யும் உதவி இன்று நேற்று அல்ல 2000-த்தில் இருந்து செய்கிறேன். 300-க்கும் மேற்பட்ட ரத்த தான முகாம்கள் நடத்தி உள்ளேன்.
கொரோனா நேரத்தில் செய்த உதவியை சொல்ல வரவில்லை. ரத்த தான முகாம்கள், மழை நேரத்தில் நிலவேம்பு கசாயம், பல மருத்துவ உதவிகள் செய்து உள்ளேன்.
என்னுடைய ரத்த வகை AB Positive. நூறில் 5 பேருக்கு தான் இந்த வகை பிரிவு இருக்கும்.
டாக்டர்கள் என்னிடம் ரத்த தானம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் கூல் சுரேஷ் நற்பணி மன்றத்தின் இருந்து அழைப்பு வந்தால் ரத்த தானம் செய்வேன். 3 மாதம் இடைவெளி விட்டுதான் ரத்ததானம் செய்ய வேண்டும். டாக்டர்களிடம் பொய் சொல்லி ரத்த தானம் செய்துள்ளேன்.
பொன்னும் பொருளும் அள்ளி கொடுக்க நான் பெரிய பணக்காரன் இல்லை. என் தாய், தந்தை கொடுத்த ரத்தத்தை மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று கொடுத்தேன். வெயில் நேரத்தில் மோர் பந்தர், தண்ணீர் பந்தல் அமைத்துள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.
கண்டிப்பாக சிஎஸ்கே கட்சி வருவது உறுதி. முடிந்தால் நீங்கள் அனைவரும் ஓட்டு போடுங்க. இன்று முதலே நான் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டதாக நினைச்சிக்கோங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கூல் சுரேஷ் கட்சிக்கு ஓட்டு போடுங்க. கண்டிப்பாக ஜெயிப்பேன். மக்களுக்கு உதவி செய்துகொண்டே தான் இருப்பேன்.
நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு நண்பன் சந்தானம் தான் காரணம்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து சிஎஸ்கே கட்சி... கூல் சுரேஷ் கட்சி பணியாற்றும். விஜய் சார் விருப்பப்பட்டால் அவர்களுடன் சேர்ந்து கூல் சுரேஷ் கட்சி பணியாற்றும். அப்படி பணியாற்றினால் விஜய் சாருக்கு இது பிளஸ் ஆக இருக்கும்.
ஒரு வேளை கூல் சுரேஷ் கட்சி நிராகரிக்கப்பட்டால் அது கூல் சுரேஷூக்கு பிளஸ் ஆக அமையும்.
விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்.
டிஆர் சார் என் தந்தை மாதிரி. என் கட்சி ஆரம்பித்த பின் என் கோட்பாடு, என் நிலை என்ன என்று உங்களிடம் தெரிவிப்பேன் என்று தெரிவித்தார்.
- பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் பிரசாரம் செய்து வருகிறார்.
- பா.ஜ.க. கூட்டணியிலும் மக்கள் நலன் சார்ந்த பல கட்சிகள் உள்ளன.
செங்கம்:
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் பிரசாரம் செய்து வருகிறார். இவர் பிரசாரத்தில் பேசும் வசனங்கள் காமெடி கலாட்டா என களைகட்டி வருகிறது.
செங்கம் பகுதியில் பிரசாரம் செய்த கூல் சுரேஷ் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் செருப்புகளை வாங்கிக்கொண்டு செருப்புகளை தைத்து பா.ஜ.க.வுக்கு வாக்கு கேட்டார். அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்பினார்.
மேலும் அங்கு தர்பூசணி, ஐஸ்கிரீம், பழம் விற்பனையாளரிடம் சென்று அவற்றை விற்பது போல கூவி கூவி பொதுமக்களை அழைத்து வியாபாரம் செய்தார். மேலும் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக்கொண்டார்.
பொறி வியாபாரி ஒருவரிடம் சென்று இதில் பொறி கடலை உள்ளிட்ட சத்தான பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. அதே போல தான் பா.ஜ.க. கூட்டணியிலும் மக்கள் நலன் சார்ந்த பல கட்சிகள் உள்ளன. அந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
திறந்தவெளி வேனில் கூல் சுரேஷ் பிரசாரம் செய்த போது அங்கிருந்த டீக்கடையில் இருந்த பெண் ஒருவர் அவருக்கு டீ வழங்கினார். இந்த டீயில் அன்பு பண்பு பாசம் எல்லாவற்றையும் கலந்து தந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி என பேசிக்கொண்டிருந்த போதே அந்த வழியாக சென்ற டவுன் பஸ்சில் இளைஞர்கள் தொங்கியபடி சென்றனர்.
இதனை பார்த்துக் கூல் சுரேஷ் டேய் தொங்காதிங்கடா.. தொங்காதிங்கடா.. உங்கள் வாழ்க்கை முக்கியம் தாய், தந்தை, தங்கை என உங்கள் வாழ்க்கையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
- மன்சூர் அலிகான் நடித்துள்ள திரைப்படம் 'சரக்கு'.
- இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் 'சரக்கு' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சரக்கு இசை வெளியீட்டு விழா
இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், "கையில் ஒரு மாலையுடன் வந்து சற்றும் எதிர்பாராதவிதமாக தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனைக் கண்டு தொகுப்பாளினி கடும் கோபமடைந்தார். 'எல்லோருக்கும் மாலை போட்டிங்க நம்மை வித்தியாசமான வார்த்தைகளை கூறி வரவேற்பவருக்கு மாலை போட்டோமா?" என அவர் பேசினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த மன்சூர் அலிகானிடம் பத்திரிகையாளர்கள் ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் அப்படி நடந்தது தவறு தான். அவருடைய செயலைக் கண்டு நானே அதிர்ச்சியடைந்தேன். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறி, கூல் சுரேஷையும் மன்னிப்பு கேட்க சொன்னார்.
தொகுப்பாளினிக்கு மாலை போட்ட கூல் சுரேஷ்
இதைத்தொடர்ந்து பேசிய கூல் சுரேஷ் இந்நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து நானும் அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருந்தோம் என கூற, அந்த தொகுப்பாளினி 'நான் உங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை' என பதில் கொடுத்தார். தொடர்ந்து தான் தெரியாமல் அப்படி செய்துவிட்டதாகவும், மன்னிச்சுக்கோ தங்கச்சி' என மன்னிப்பு கேட்டார். கூல் சுரேஷின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
- நடிகர் சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
- இப்படத்திற்காக நடிகர் கூல் சுரேஷ் ஹெலிக்காப்படருடன் வந்தார்.
ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது. 'பத்து தல' படத்திற்காக ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளில் கூடி மேள தாளத்துடன், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சிம்புவின் தீவிர ரசிகரான நடிகர் கூல் சுரேஷ், சிம்புவின் படங்கள் வெளியாகும் பொழுது வித்யாசமான முறையில் திரையரங்குக்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பத்து தல படத்திற்காக பக்கத்து வீட்டை விற்றாவது ஹெலிக்காடரில் வருவேன் என்று கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் கூல் சுரேஷ் தியேட்டருக்கு எப்படி வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் பத்து தல படத்தின் 8 மணி காட்சியை காண கூல் சுரேஷ் குழந்தைகள் விளையாடும் பொம்மை ஹெலிக்காப்டரை கொண்டு வந்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக நெட்ட்சன்கள் கூல் சுரேஷை வறுத்தெடுத்து வருகின்றனர்.
- நடிகர் கூல் சுரேஷ் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
- இவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் கூல் சுரேஷ். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர். ஒவ்வொரு திரைப்படத்தின் போதும் சமூக வலைதளங்களுக்கு இவர் அளிக்கும் பேட்டி ரசிகர்களைக் கவர்ந்தது. சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் வரை அதை புரொமோட் செய்துள்ளார்.
கூல் சுரேஷ்
சமீபத்தில் கூல் சுரேஷின் காரை ரசிகர்கள் அடித்து நொறுக்கியதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால்,இதை மறுத்து கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ரசிகர்கள் என்னை எதற்கு தாக்க வேண்டும், அவர்கள்தான் எனக்குப் பாதுகாப்பு. நான் என்ன துரோகம் செய்தேன். கமெண்ட்களில் என்னைப் பற்றி அவதூறாக பேசுகிறீர்கள்.
சமூக வலைதளங்களில் பிரபலமானாலும் நான் வருமானமின்றி கஷப்படுகிறேன். ரிவியூ பிடிக்கவில்லை என்றால் இனிமேல் வரமாட்டேன். என் தலைவன் சிம்புவிற்காக தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன் அந்த படம் வெளியாகிவிட்டது. நான் ரிவியூ கொடுப்பதால் எனக்கு வருமானம் வரவில்லை.
கூல் சுரேஷ்
ரசிகர்கள் என் மீதுள்ள ஆர்வத்தில் காரின் மீது ஏறினார்கள். அதை நான் சரிசெய்துகொள்கிறேன். என் நண்பன் நடிகர் சந்தனம் எனக்கு உதவுவார். எனக்கு தெரிந்த பத்து இயக்குனர்கள் உதவுவார்கள். தயவு செய்து என்னை பத்தி அவதூறாக பேசாதீர்கள். வெந்து தணிந்தது காடு எஸ்டி ஆருக்கு வணக்கத்த போடு என்று கூறி கொண்டே இருப்பேன் என்று பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்