search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கர்"

    • கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
    • கேம் சேஞ்சர் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இயக்குநர் சங்கருடன் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் திரைக்கதை எழுதி இருக்கிறார்.

    இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொள்ள தில் ராஜூ தயாரித்துள்ளார்.

     


    இன்று கேம் சேஞ்சர் படத்தின் நாயகன் ராம் சரண் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை ஒட்டி ராம் சரண் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் சிவாஜி.
    • இப்படம் 2007-ஆம் ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

    இயக்குனர் சங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 'சிவாஜி'. இந்த படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

    ஏ.வி.எம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்த 'சிவாஜி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக ஏ.வி.எம். புரொடக்‌ஷன் கடந்த 13-ஆம் தேதி முதல் சமூக வலைதளப்பக்கத்தில் 'சிவாஜி' திரைப்படத்தின் சுவாரஸ்யமான பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது.

     இந்நிலையில், 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக இயக்குனர் சங்கர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். மேலும், சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×