search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Game changer"

    • கேம் சேஞ்சர் டத்தில் மொத்தமாக 5 மணிநேர காட்சிகள் இருந்தது.
    • இதனால் படத்தில் பல நல்ல காட்சிகளை வெட்டி நீக்க வேண்டியிருந்தது.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது.

    இந்நிலையில், இந்த படம் தொடர்பாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் ஷங்கர், "கேம் சேஞ்சர் திரைப்படத்தை இன்னும் சிறப்பாக பண்ணியிருக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டில் நான் முழுமையாக திருப்தி அடையவில்லை. படத்தில் மொத்தமாக 5 மணிநேர காட்சிகள் இருந்தது. இதனால் படத்தில் பல நல்ல காட்சிகளை வெட்டி நீக்க வேண்டியிருந்தது.

    இயக்குநர் ஷங்கரின் இந்தப் பேச்சு இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.
    • இப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் முதல் நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் திரைப்படம் உலகளவில் முதல் நாள் வசூலாக 186 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வரும் நாட்களில் திரைப்படம் இன்னும் அதிக கோடிகளை வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.
    • இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் படத்தின் முதல் காட்சி நாளை காலை 9 மணிக்கு தொடங்கவுள்ளது.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது. அதே மாதிரி திரைப்படம் வெளியாகி 10 நாட்களுக்கு அரசு முடிவு செய்த கூடுதல் டிக்கெட் விலையில் விற்கலாம் என கூறியுள்ளது. படத்தின் சிக்கெட் முன்பதிவுகள் அதிவேகமாக நடைப்பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.
    • பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.

    இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. அதனால் தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் எஸ் ஜே சூர்யா படத்தை குறித்த சுவாரசிய தகவலை கூறினார். அதில் அவர் " இத்திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். படன் எடுத்த செலவு மட்டுமே 400- 500 கோடி ரூபாய் இருக்கும். அது இல்லாமல் அப்பணத்தில் வட்டி இருக்கிறது. அதையெல்லாம் கணக்கு போட்டால் எங்கேயோ சென்றுவிடும். படத்தில் ஜரகண்டி என்ற பாடல் படத்தில் இருக்கிறது. நேற்று தான் அந்த பாடலை நான் திரையில் கண்டேன். அந்த ஒரு பாடலின் விஷ்வல் போது மக்கள் கொடுக்கும் டிக்கெட் காசு அதற்கு ஈடாகிவிடும். அப்படி ஒரு பிரம்மாண்டம், அந்த பாடலுக்காகவே இன்னொரு முறை நீங்கள் பார்ப்பீர்கள். பிரபு தேவாவின் கோரியோ. ராம் சரணின் நடனம். கியார அத்வானியின் அழகு என அனைத்திலும் அப்பாடல் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இது தவிர்த்து படம் முழுவதும் போன்ஸ் தான் " என்று மிகவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.
    • பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.

    இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. அதனால் தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று நடந்த விழாவில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது " நான் திரையரங்கில் திரைப்படம் பார்ப்பது மிகவும் குறைவு. நான் சென்னையில் இருக்கும்பொழுது நான் ஷங்கர் இயக்கத்தில் வெளியன ஜென்டில் மேன் திரைப்படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் வாங்கி பார்த்தேன். காதலன் திரைப்படத்தை என்னுடைய பாட்டியுடன் சென்று பார்த்தேன்." என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.
    • பொங்கலை குறி வைத்து இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.

    இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொங்கலை குறி வைத்து இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. அதனால் தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ராஜமௌலி கலந்துக் கொண்டார். படத்தின் டிரெய்லர் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • பொங்கலை குறி வைத்து இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.
    • இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு வெளியானது 'இந்தியன் 2'. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தது.

    இதனை தொடர்ந்து இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொங்கலை குறி வைத்து இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. அதனால் தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
    • சண்முகப் பாண்டியனின் ‘படைத் தலைவன்’ படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் அன்று வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

    பொங்கலையொட்டி வருகிற 10-ந்தேதி பாலாவின் வணங்கான் படமும் ஷங்கரின் கேம் சேஞ்சர் படமும் வெளியாகவுள்ளது.

    பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் விலகியதை அடுத்து பொங்கல் விடுமுறையை குறிவைத்து பல புதிய படங்கள் களமிறங்கியுள்ளன.

    கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம், பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    சிபி ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டென் ஹவர்ஸ்' படமும் சண்முகப் பாண்டியனின் 'படைத் தலைவன்' படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் நடிகர் சிவா நடித்து உள்ள 'சுமோ' படமும் சசிக்குமார் நடித்துள்ள 'ஃப்ரீடம்' படமும் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் அஜித் குமாரின் "விடாமுயற்சி" ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து, மேலும் சில படங்கள் பொங்கல் பண்டிகை தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • அஜித்தின் 'விடாமுயற்சி' தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் அன்று வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
    • ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம்சேஞ்சர்' திரைப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    நாடு முழுவதும் 2025-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்று பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் அன்றைய தினம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.

    இருப்பினும், புத்தாண்டின் தொடக்கத்திலேயே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'விடாமுயற்சி' தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் அன்று வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

    இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு 4 திரைப்படங்கள் விருந்தளிக்க வருகிறது. அப்படங்கள் குறித்து பார்ப்போம்...

    ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டது. பின்னர் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போன நிலையில், தற்போது 'விடாமுயற்சி' படத்தின் தள்ளிவைப்பால் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிபி ராஜ் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ளது 'டென் ஹவர்ஸ்'. த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இப்படம் பொங்கலையொட்டி வருகிற 10-ந்தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

    ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம்சேஞ்சர்' திரைப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் நடிகர் சிவா நடித்து உள்ள படம் 'சுமோ'. இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆன்ந்த் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

    இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் 'ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    நடிகர் அஜித் குமாரின் "விடாமுயற்சி" ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து, மேலும் சில படங்கள் பொங்கல் பண்டிகை தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
    • ஜனவரி 10 ஆம் தேதி கேம் சேஞ்சர் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

    இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.

    கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இந்நிலையில், இத்திரைப்படத்தின் 4வது சிங்கிளான 'தொப் {Dhop}' கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ரசிகர்கள் ராம் சரணுக்கு 256 அடிக்கு கட் அவுட் வைத்தனர்.

    படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சில நாட்களில் நடைப்பெறவுள்ள நிலையில் தயாரிப்பாளரான தில்ராஜு ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாணை நேரில் சந்தித்து இந்நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.
    • சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி. கடந்த மாதம் இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.

    இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். மேலும் தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

    இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.

    இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார்.

    இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் பாடலுக்காக ஜானி மாஸ்டருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

    பாலியல் வழக்கில் ஜானி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை பாராட்டி கியாரா அத்வானி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த பதிவில் இருந்து ஜானி மாஸ்டரின் பெயரை கியாரா அத்வானி நீக்கியுள்ளார்.

    கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
    • ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

    இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.

    கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இந்நிலையில், இத்திரைப்படத்தின் 4வது சிங்கிளான 'தொப் {Dhop}' பாடல் நேற்று வெளியானது. இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    அப்படி ஒரு ப்ரோமோஷன் பணி நேற்று அமெரிக்காவில் நடைப்பெற்றது. அதில் பேசிய ஷங்கர் கூறியதாவது "எனது பாணியில் தனித்துவமான கதையுடன் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். கடந்த மூன்று தசாப்தங்களாக நான் தெலுங்கு படம் எடுக்கவில்லை என்றாலும், தெலுங்கு பார்வையாளர்கள் எப்போதும் என் மீது பெரும் அன்பு செலுத்தினர். ராம் சரணுடன் தெலுங்கில் அறிமுகமாகியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×