கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி

ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிக்கு  அனுமதி
Published on

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் படத்தின் முதல் காட்சி நாளை காலை 9 மணிக்கு தொடங்கவுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது. அதே மாதிரி திரைப்படம் வெளியாகி 10 நாட்களுக்கு அரசு முடிவு செய்த கூடுதல் டிக்கெட் விலையில் விற்கலாம் என கூறியுள்ளது. படத்தின் சிக்கெட் முன்பதிவுகள் அதிவேகமாக நடைப்பெற்று வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com