என் மலர்

  நீங்கள் தேடியது "kamal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
  • இப்படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.


  'ஜெயிலர்' திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல் மந்திரி பினராயி என பலர் பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்தை செல்போனில் அழைத்து பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் படத்தை தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இடைவெளி இல்லாமல் நடைபெற்று வருவதாகவும் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்தவர் மோகன் (வயது 60).
  • இவர் இன்று காலை பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

  கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்தவர் மோகன் (வயது 60). பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும் நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். காலப் போக்கில் மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் யாசகம் எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார்.  இந்நிலையில் இன்று காலை பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் இறந்த மோகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இறந்த மோகனுக்கு 2 சகோதரர்கள், 5 சகோதரிகள் உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் இலவச ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அனுப்பி வைக்கப்பட்டது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K).
  • இந்த படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.

  இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  'புராஜெக்ட் கே' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று காலை 1.30 மணிக்கு வெளியானது. 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பாராட்டி இயக்குனர் ராஜமவுலி பதிவிட்டுள்ளார். மேலும் படக்குழுவிடம் இன்னும் ஒரே ஒரு கேள்வி மட்டும் மீத உள்ளது என்று கூறி படத்தின் வெளியீட்டு தேதி எப்பொழுது என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கமல், தற்போது இந்தியன்-2 படத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
  • கமல் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

  தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தை தொடர்ந்து கமல், புராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை தொடர்ந்து கமல், எச்.வினோத் இயக்கத்தில் "கேஎச்233" படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இப்படத்தின் பணிகளில் இயக்குனர் எச்.வினோத் மும்முரம் காட்டி வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி, கமலுடன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் யோகி பாபு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி-கமல் கூட்டணி இணையவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார்.
  • சிம்புவின் 50வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

  பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.  இப்படத்திற்கு பிறகு சிம்பு, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கு பிறகு சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும் இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்டது.  தற்போதைய தகவல்ப்படி மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234 வது படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், இந்த படமே சிம்புவுக்கு 50வது படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிம்பு இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனது 50வது படத்தில் சிம்பு வில்லனாக நடிக்கயிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  இதற்கு முன்பு சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டான், பிரின்ஸ், சர்தார், வாரிசு, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ஷோபி.
  • இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் ஈர்த்து வருகிறது.

  கமலின் வசூல்ராஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடன இயக்குனராக அறிமுகமானவர் டான்ஸ் மாஸ்டர் ஷோபி. அதன்பின்னர் திருப்பாச்சி, சச்சின், ஆறு, குருவி, வில்லன், சிங்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியான டான், பிரின்ஸ், சர்தார், வாரிசு, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார்.  இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் ஷோபியின் பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதன்படி புராஜெக்ட் கே படத்தில் நடிக்கவுள்ள பிரபாஸ் மற்றும் கமல்ஹாசனின் புகைப்படங்களை ரசிகர் ஒருவர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்று எடிட் செய்திருக்கிறார். இதனை பகிர்ந்த ஷோபி, இது Fan Made-னு நினைக்குறேன்.. இருந்தாலும்..! தீயாய் இருக்கிறது என்று குறிப்பிடும் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேருந்து ஓட்டுநர் பணியை துறந்த கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கமல்ஹாசன் புதிய காரை பரிசாக வழங்கினார்.
  • ஷர்மிளா ஒரு ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல; பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை என்று கமல் கூறினார்.

  கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்திப்பதற்காக அவர் இயக்கும் பஸ்சில் ஏறினார். பின்னர் அவரை நேரில் சந்தித்து அவருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

  இதற்கிடையே, தனியார் பஸ் டிரைவரான ஷர்மிளாவை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியானது. கனிமொழி எம்.பி. பஸ்சில் பயணித்தபோது டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்தார்.   இந்நிலையில் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கமல்ஹாசன் புதிய காரை பரிசாக வழங்கினார். அதன்பின்னர் பேசிய கமல், ஷர்மிளா ஒரு ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல; பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை. வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை மீண்டும் தொடரவிருக்கிறார் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார்.
  • இப்படத்திற்கு பிறகு சிம்பு படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.  இப்படத்திற்கு பிறகு சிம்பு, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கு பிறகு சிம்புவின் 50வது படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும் இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

  இதற்கு முன்பு சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பட பொன்னியின் செல்வன்.
  • இப்படத்தை நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியுடன் இணைந்து கமல் பார்த்து ரசித்தார்.

  கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருந்த இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

   

  பொன்னியின் செல்வன்

  பொன்னியின் செல்வன்

  இதனிடையே ராஜராஜசோழன் குறித்து அண்மையில் இயக்குனர் வெற்றிமாறன் கூறிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளானது. சினிமாவை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம் என்று தெரிவித்த அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் பேசினார்.

   

  கமல்

  கமல்

  இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் கார்த்தி, நடிகர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பார்த்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் வெற்றிமாறன் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

   

  செய்தியாளர்களை சந்தித்த கமல்

  செய்தியாளர்களை சந்தித்த கமல்

  இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், "ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்த திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print