நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் ஆலோசனை!

கடந்த சில மாதங்களாகவே நடிகர் சங்கத்திற்கு பல நடிகர்கள் முன் வந்து நிதியுதவி செய்து வருகின்றனர்அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் ஆலோசனை!
Published on

கடந்த சில மாதங்களாகவே நடிகர் சங்கத்திற்கு பல நடிகர்கள் முன் வந்து நிதியுதவி செய்து வருகின்றனர், நடகர் சூர்யா, கார்த்தி, கமல், தனுஹ், சிவகார்த்திகேயன் மற்றும் பலர் இதுவரை நிதியுதவி செய்துள்ளனர். இதனால் நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் நிதி திரட்ட நட்சத்திர கலை விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் இன்று (01.07.2024) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான திரு.ரஜினிகாந்த் அவர்களிடமும் மற்றும் திரு.கமல்ஹாசன் அவர்களிடமும் ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில் அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள்.

வேகமாக நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நேரில் வந்து கட்டிடப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com