'யுத்தத்தில் வெற்றி என்பது மரணத்திற்குத்தான்': வெளியான 'கல்கி 2898' படத்தின் புதிய ட்ரைலர்

பிரமாண்டமான செட் மற்றும் கச்சிதமான கிராஃபிக்ஸுடன் காட்சிகள் ஈர்க்கின்றன. இறுதியில் வரும் கமல்ஹாசனின் கெட்டப் நம்மை மிரட்டுகிறது.
'யுத்தத்தில் வெற்றி என்பது மரணத்திற்குத்தான்': வெளியான 'கல்கி 2898' படத்தின் புதிய ட்ரைலர்
Published on

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 'கல்கி 2898 ஏடி' படத்தின் புதிய ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தின் மூலம் புதியதோர் உலகை உருவாகியுள்ளார். பிரமாண்டமான செட் மற்றும் கச்சிதமான கிராஃபிக்ஸுடன் காட்சிகள் ஈர்க்கின்றன.

நடிகர்களுக்கான உடைகள் தொடங்கி, வித்தியாசமான வாகனத்தை வடிவமைத்தது முதல் இறுதியில் வரும் கமல்ஹாசனின் கெட்டப் வரை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

பிரமாண்டமான காட்சிகளுடன் கூடிய புதிய ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com