என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
![28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறான் இந்தியன் - ரீரிலீஸ் அப்டேட் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறான் இந்தியன் - ரீரிலீஸ் அப்டேட்](https://media.maalaimalar.com/h-upload/2024/05/26/2344167-newproject-2024-05-26t184707469.webp)
28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறான் இந்தியன் - ரீரிலீஸ் அப்டேட்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிரபல நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். 1996 -ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியானது
- தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.
பிரபல நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். 1996 -ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு விழிப்புணர்வு நிறைந்த அதிரடி படமாகும். இதில் கமல் 'சேனாபதி' என்ற வயதான சுதந்திரப் போராட்ட வீரராக நடித்தார்.
ஊழலுக்கு எதிராக போராடிய சேனாதிபதி இந்தியாவை விட்டு ஓடிப்போய் ஹாங்காங் செல்வதுடன், ஊழல் எப்போதாவது திரும்பினால் திரும்பி வருவேன் என்று மிரட்டுவதுடன் 'இந்தியன்' முதல் பாகம் முடிந்தது.
இந்நிலையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்பட பணிகள் முடிவடைந்து வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக தயாராகவுள்ளது. படத்தின் முதல் பாடலானா 'பாரா' சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில் அப்படத்தின் பாகம் 1 மீண்டும் ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர். இந்தியன் திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது.
28 ஆண்டுகளுக்கு பிறகு ரிரீலிஸ் செய்யப்படும் இத்திரைப்படத்தை பார்க்க மக்களிடையே ஆர்வம் உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)