ஓடிடி-யில் ஆளவந்தான்

கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆளவந்தான்’.இப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார்.
ஓடிடி-யில் ஆளவந்தான்
Published on

கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆளவந்தான்'. இப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கலைப்புலி தாணுவின்  'வி கிரியேஷன்ஸ்' இப்படத்தை தயாரித்தது. கமலுடன் ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன் இப்படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் இவரே நடித்திருப்பார். அக்காலக்கட்டத்திலேயே அனிமேஷன் காட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களை பயன்படுத்தி வித்தியாசமாக படத்தை எடுத்திருப்பர்.

இப்படம் சில மாதங்களுக்கு முன் டிஜிட்டல் மெருகேற்றல் செய்ட்து ரிரீலிஸ் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டிஜிட்டல் மெருகேற்று செய்யப்பட்ட வெர்ஷன் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com