'இந்தியன் 2' : ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைப்பு

இப்படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் காலஅவகாசம் தேவை.எனவே ஆகஸ்ட் மாதத்திற்கு 'ரிலீஸ்' தேதி தள்ளி வைக்கப்பட்டது தற்போது உறுதியாகி உள்ளது.
'இந்தியன் 2' : ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைப்பு
Published on

பிரபல நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். 1996 -ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு விழிப்புணர்வு அதிரடி படமாகும். இதில் கம்ல் 'சேனாபதி' என்ற வயதான சுதந்திரப் போராட்ட வீரராக நடித்தார்.

ஊழலுக்கு எதிராக போராடிய சேனாதிபதி இந்தியாவை விட்டு ஓடிப்போய் ஹாங்காங் செல்வதுடன், ஊழல் எப்போதாவது திரும்பினால் திரும்பி வருவேன் என்று மிரட்டுவதுடன் 'இந்தியன்' முதல் பாகம் முடிந்தது.

இந்நிலையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்தை ஜூன், அல்லது ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டனர்.

தற்போது இப்படம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் எடுக்க வேண்டி உள்ளது.

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 'இந்தியன் 2' வெளியாக உள்ளது என புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது.

எனவே ஆகஸ்ட் மாதத்திற்கு 'ரிலீஸ்' தேதி தள்ளி வைக்கப்பட்டது தற்போது உறுதியாகி உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com