என் மலர்
நீங்கள் தேடியது "கேம் சேஞ்சர்"
- கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- சித்தார்த் மல்கோத்ரா-கியாரா அத்வானிக்கு திரை உலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'கேம்சேஞ்சர்' படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்தவர் கியாரா அத்வானி. பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். தற்போது ஹிருத்திக்ரோசனுடன் 'வார் 2' படத்தில் நடித்துள்ளார்.
கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் பாரம்பரிய முறைப்படி பிரமாண்டமாக நடந்தது.
இதையடுத்து கியாரா அத்வானி தாய்மை அடைந்திருப்பதை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இந்நிலையில் கியாரா அத்வானிக்கு பிரசவ வலி ஏற்பட்டு மும்பை ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை அவருக்கு சாதாரண பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் சித்தார்த் மல்கோத்ரா மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பெற்றோரான நட்சத்திர தம்பதிகள் சித்தார்த் மல்கோத்ரா-கியாரா அத்வானிக்கு திரை உலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'.
- இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
சில வாரங்களுக்கு முன் நடந்த நேர்காணல் ஒன்றில் கேம் சேஞ்சர் படத்தின் படத்தொகுப்பாளரான ஷமீர் முகமத் படத்தில் வேலைப்பார்த்த அனுபவம் மிகவும் மோசமானது என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " நான் இதுவரை 60 திரைப்படங்கள் தயாரித்துள்ளேன் ஆனால் எந்த ஒரு திரைப்படமும் பெரிய இயக்குநர்களுடன் வேலைப் பார்த்தது இல்லை. கேம் சேஞ்சர் திரைப்படம் நான் செய்த தவறான முடிவு. நான் படப்பிடிப்பிற்கு முன்பே காண்டிரக்டில் சில விஷயங்களை சேர்த்திருக்க வேண்டும் அதை செய்யாதது என்னுடைய தவறு. ஒரு தவறு நடக்கும் போது அதை தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு தயாரிப்பாளரின் பொறுப்பு ஆனால் நான் அதை செய்ய தவறிவிட்டேன். இதன் பிறகு அப்படி ஒரு திரைப்படத்தை தயாரிக்க மாட்டேன்." என கூறியுள்ளார்.
- இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'.
- படத்தின் படத்தொகுப்பை மலையாள படத்தொகுப்பாளரான ஷமீர் முகமத் மேற்கொண்டார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
ராம் சரண் இப்படத்தில் 2 கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். படத்தின் இசையை எஸ்.தமன் மேற்கொண்டுள்ளார். படத்தின் படத்தொகுப்பை மலையாள படத்தொகுப்பாளரான ஷமீர் முகமத் மேற்கொண்டார். சமீபத்தில் நடந்த நேர்காணலில் கேம் சேஞ்சர் படத்தில் வேலைப்பார்த்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் " கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நேரளவு முதலில் 7.5 மணி நேரமாக இருந்தது. அதை கொடுத்து ஷங்கர் சார் ஒரு திரைப்படத்திற்கான அளவிற்கு கட் செய்து தர சொன்னார். நான் அதை 3 மணி நேரத்திற்கு கட் செய்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து அதில் வேலை செய்ய முடியவில்ல அதனால் அப்படத்தில் இருந்து விலகினேன். இதனால் அவருடன் வேலைப்பார்த்த அனுபவம் மிகவும் மோசம்" என கூறியுள்ளார்.
- இயக்குனர் ஷங்கர் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லீக்கான பாடல்
இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜாபிலம்மா' என்ற பாடல் ரிலீஸாகுவதற்கு முன்பே சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த பாடல் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. மேலும், இந்த பாடலை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தின் பாடலுக்காக ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கேம் சேஞ்சர் போஸ்டர்
இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' பாடல் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- இயக்குனர் ஷங்கர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
- இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' பாடல் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

கேம் சேஞ்சர் அறிக்கை
இந்நிலையில், இந்த பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பாடல் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாடலுக்காக ஆர்வமாக காத்திருந்த ரசிகர்கள் இந்த அறிவிப்பால் சற்று ஏமாந்துவிட்டனர்.
#GameChanger pic.twitter.com/UhrDpTrg9W
— Sri Venkateswara Creations (@SVC_official) November 11, 2023
- இயக்குனர் ஷங்கர் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' பாடல் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பாடல் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருவதாகவும் இங்கு ராம் சரண் மற்றும் எஸ்.ஜே. சூர்யா காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
- முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர்.
- இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாடலான 'ஜாபிலம்மா' என்ற பாடல் ரிலீஸாகுவதற்கு முன்பே சமூக வலைதளத்தில் லீக்கானதால் பாடல் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை தில் ராஜு பகிர்ந்துள்ளார். அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தில் ராஜு 'கேம் சேஞ்சர்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
- சினிமாவை விட்டு விலகிய அஞ்சலி உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார்.
- பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி, 'கேம் சேஞ்சர்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் 2007-ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இவரின் உடல் எடை அதிகமானதால் படங்கள் குறைந்தன. இதையடுத்து சினிமாவை விட்டு விலகிய அஞ்சலி உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார்.

நடிகை அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் உலா வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இருவரும் பிரேக் அப் செய்ததாக செய்திகள் வெளியானது. தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி, 'கேம் சேஞ்சர்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை அஞ்சலி தன்னை பற்றி பரவி வரும் திருமண வதந்திகள் குறித்து நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப்பற்றி என்ன எழுத வேண்டும், யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்று அவர்களே முடிவு செய்து எழுதுகிறார்கள். முதலில் நடிகர் ஜெய்யை காதலித்ததாக செய்தி வந்தது. பின்னர் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனதாக சொல்லப்பட்டது. எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆனதை நினைத்து நான் சிரித்தேன்" என்று கூறியுள்ளார்.
- கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
- கேம் சேஞ்சர் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இயக்குநர் சங்கருடன் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் திரைக்கதை எழுதி இருக்கிறார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொள்ள தில் ராஜூ தயாரித்துள்ளார்.

இன்று கேம் சேஞ்சர் படத்தின் நாயகன் ராம் சரண் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை ஒட்டி ராம் சரண் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
- "கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.
இயக்குனர் சங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவே. சங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராம்சரண் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு மேற்கொள்ள தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார்.
தற்போது, "கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று தனது 51வது பிறந்த நாள் முன்னிட்டு இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர் சங்கருடன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியன் பாகம் 1 இயக்கி 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வெளியாகவுள்ளது.
- அவர் அடுத்து இயக்கப்போகும் படங்களைப் பற்றி கூறினார்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்று கூறினாலே நமக்கு நியாபகத்திற்கு வரும் முதல் இயக்குனர் ஷங்கர் ஆவார். அவரின் கதையை நேர்த்தியாகவும் , மிக பிரம்மாண்டமாகவும் எடுக்கும் திறம் பெற்றவர். இவர் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தியன் பாகம் 1 எடுத்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. உலகமெங்கும் பல நகரங்களில் படக்குழுவினர் சென்று ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்படும் போது அங்கு நடந்த நேர் காணலில் அவர் அடுத்து இயக்கப்போகும் படங்களைப் பற்றி கூறினார். அதில் அவர் கூறியது " தற்பொழுது எனக்கு 3 ஐடியாக்கள் உள்ளன, ஒன்று ஒரு வரலாற்று சிரப்புமிக்க திரைப்படம், மற்றொன்று ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஒரு படம், மற்றொன்று சை ஃபை கதைக்களத்துடன் 2012 என்ற பெயரில் உருவாகவுள்ளது" என கூறினார்.
இந்த மூன்று திரைப்படங்களும் மிகப் பெரிய பொருட் செலவிலும் அதில் நிறைய VFX காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அப்படங்களில் உலகில் உள்ள அனைத்து புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளார் என்பதையும் கூறீனார்.
மேலும் அவர் ராம் சரண் நடிப்பில் இயக்கிக் கொண்டு இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு இன்னும் 15 - 20 நாட்கள் தான் படப்பிடிப்பு பணிகள் இருக்கிறது என கூறியுள்ளார். இந்தியன் 3 பாகத்தில் பெரும்பாலான காட்சிகளை படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதால் இன்னும் 6 மாதங்களில் அப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






