search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Anjali"

  • சுந்தர் சி 2013 ஆம் ஆண்டு மதகஜராஜா எனும் திரைப்படத்தை இயக்கினார்.
  • படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்தது.

  சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 பட்டித் தொட்டி எங்கும் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் 100 கோடி வசூலை எட்டிய முதல் திரைப்படம் இதுவே.

  சுந்தர் சி 2013 ஆம் ஆண்டு மதகஜராஜா எனும்  திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திரைக்கு வரவில்லை. இப்படத்தில் விஷால், அஞ்சலி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.

  படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்தது. அண்மையில் இப்படத்தை குறித்து சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

  மத கஜ ராஜா திரைப்படம் அண்மையில் மிகவும் நெருக்கமான வட்டாரத்திற்கு மட்டும் திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படத்திற்கான வரவேற்பு மிகவும் நன்றாக இருந்தது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்ச்சாகத்தில் உள்ளனர்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
  • அப்படியொரு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை”

  படங்கள் திரைக்கு வரும் முன்பே அதற்கு அங்கீகாரம் கிடைப்பது என்பது மிக பெரிய விஷயம் மட்டுமல்லாது இயக்குனர் மற்றும் அதில் பணியாற்றி அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் மாபெரும் வெற்றி ஆகும். அப்படியொரு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் "ஏழு கடல் ஏழு மலை",

  கடந்த 2024 ஜனவரியில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் படைப்பான 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகி மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.


  இந்நிலையில் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் மற்றுமொரு விழாவான ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

  ராம் இயக்கி இருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ளனர். இதையடுத்து படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.
  • நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம்.

  தெலுங்கு திரையுலகில் உருவாகும் புதிய படம், "கேங்ஸ் ஆஃப் கோதாவரி." இயக்குநர் கிருஷ்ண சைதன்யா இயக்கி இருக்கும் இந்த படத்தில் விஷ்வாக் சென் மற்றும் அஞ்சலி ஜோடி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நேகா செட்டி, சாய் குமார், நாசர், கோபராஜூ ரமணா, ஆயிஷா கான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் இன்று (மே 31) வெளியானது. இதையொட்டி, இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவுடன், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.

  நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளி நிற்க கூறும் போது, அவரை தள்ளிவிட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டது. வீடியோவின் படி பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளிவிடுவதும், அதனை அவர் சகஜமாக எடுத்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

  எனினும், வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான பதிவில், "கேங்ஸ் ஆஃப் கோதாவரி பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியை தனது வருகையால் சிறப்பாக மாற்றிய பாலாகிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

  "எனக்கும் பாலாகிருஷ்ணா அவர்களுக்கும் இடையில் நல்ல புரிதல் மற்றும் இருவருக்கும் இருவர்மீதும் நல்ல மரியாதை உள்ளது. நீண்ட காலமாக எங்களிடையே நல்ல நட்பு நீடித்து வருகிறது. அவருடன் மீண்டும் மேடையை பகிர்வது அருமையாக இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார். 


  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் பங்கேற்றனர்.
  • சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  தெலுங்கில் 'கேங்ஸ் ஆஃப் கோதவரி' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ண சைதன்யா இயக்கி உள்ளார். கதாநாயகனாக விஷ்வாக் சென் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் நேகா செட்டி, சாய் குமார், நாசர், கோபராஜு ரமணா, ஆயிஷா கான் உள்பட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாக உள்ளது.

  இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.

  இந்நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் எதற்காக அப்படி செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் நடிகை அஞ்சலியும் மற்றவர்களும் இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டு சிரிக்கின்றனர்.

  வீடியோவில், நிகழ்ச்சி மேடையில் அனைவரும் நின்றிருக்க அஞ்சலியை நோக்கி கையை நீட்டும் பாலகிருஷ்ணா தள்ளி நிற்கும்படி கூறுகிறார். இதை கவனிக்காத அஞ்சலியின் தோளை பிடித்து பின்னோக்கி தள்ளினார். இதனை சற்றும் எதிர்பாராத அஞ்சலி 2 அடி பின்னால் சென்று நின்றார். அதிர்ஷ்டவசமாக அவர் கீழே விழவில்லை.

  சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • 2006 ஆம் ஆண்டு வெளியான ’போட்டோ’ என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்
  • தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார்.

  2006 ஆம் ஆண்டு வெளியான 'போட்டோ' என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அஞ்சலி. பின்னர் ராம் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை போன்ற படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

  தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் அஞ்சலி தற்போது 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் அஞ்சலிக்கு ௫௦-வது திரைப்படமாகும். ஷிவா துர்லாபடி இப்படத்தை இயக்கியுள்ளார்.  இப்படம் ஹாரர் மற்றும் காமெடி கதைக்களத்தில் அமைந்துள்ளது.

   

  இப்படத்தில் சத்யம் ராஜேஷ், ஸ்ரீனிவாச ரெட்டி, சத்யா, மொஹமத் அலி, சுனில் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். 

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • பாதே சினிமாஸ் திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.
  • இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது.

  சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் "ஏழு கடல் ஏழு மலை" திரைப்படம் உலகளாவிய சினிமா விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

  சமீபத்தில் நடந்து முடிந்த ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன்' போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டு, ரோட்டர்டாம் நகரின் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் மூன்று காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்காக இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.

   


  கவிதை போல அழகாகவும், பிரமிக்கத்தக்க காட்சி அமைப்பும் கொண்ட இந்த திரைப்படம் ஒரு தலைசிறந்த படைப்பு என்றும், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது என்று பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • சினிமாவை விட்டு விலகிய அஞ்சலி உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார்.
  • பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி, 'கேம் சேஞ்சர்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

  தமிழில் 2007-ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இவரின் உடல் எடை அதிகமானதால் படங்கள் குறைந்தன. இதையடுத்து சினிமாவை விட்டு விலகிய அஞ்சலி உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார்.


  நடிகை அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் உலா வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இருவரும் பிரேக் அப் செய்ததாக செய்திகள் வெளியானது. தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி, 'கேம் சேஞ்சர்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


  இந்நிலையில், நடிகை அஞ்சலி தன்னை பற்றி பரவி வரும் திருமண வதந்திகள் குறித்து நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப்பற்றி என்ன எழுத வேண்டும், யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்று அவர்களே முடிவு செய்து எழுதுகிறார்கள். முதலில் நடிகர் ஜெய்யை காதலித்ததாக செய்தி வந்தது. பின்னர் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனதாக சொல்லப்பட்டது. எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆனதை நினைத்து நான் சிரித்தேன்" என்று கூறியுள்ளார்.

  • தேவகோட்டை ரூசோ நினைவிடத்தில் இந்திய ஜனநாயக கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
  • மதுரை மாநகர மாவட்ட இணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  மதுரை

  சிவகங்கை மாவட்ட முன்னாள் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ரூசோ 25-வது நினைவு தினத்தையொட்டி தேவகோட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் தலைவர், ஐ.ஜே.கே. முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கட்சியினர் ஊர்வலமாக சென்று ரூசோ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

  இதில் பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் வரதராஜன், இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச் செயலாளர் லீமாரோஸ் மார்ட்டீன், துணைத் தலைவர் இளவரசி ஜெரோம், மாநில போராட்ட குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், அமைப்பு செயலாளர் அன்னை இருதயராஜ், மகளிரணி துணைச் செயலாளர் சகிலா புரோஸ், இளைஞரணி துணை செயலாளர் செந்தூர் பாண்டி, மதுரை மாநகர மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான் பெனடிக்ட், மதுரை மாநகர மாவட்ட இணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட் டக் கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி செய்தி ருந்தார்.

  ராமநாதபுரம்

  இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், வெள் ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ் நாட்டின் தென் மாவட்டங்க ளில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கா கப் போராடி, ஓர் அரசியல் சக்தியாக, அவர்கள் அணி திரள்வதற்கு முக்கிய கார ணமாக இருந்தவருமான அரசியல் தலைவர், சுதந்தி ரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

  இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி. மு.க. பொதுச்செயலாள ரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப் பட்டது.

  முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த் திகா முனியசாமி, கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, தலை மைச் செயற்குழு உறுப்பினர் ராஜலெட்சுமி, முன்னாள் அமைச்சர்கள் அ.அன்வர் ராஜா, கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் எம்.மணிகண்டன்

  முன்னாள் கழக அமைப் புச் செயலாளர் நிறைகுளத் தான், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சதன் பிரபாகர், டாக்டர் எஸ்.முத்தையா, முதுகுளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. துணைச் செயலா ளரும், வெங்கலக்கு றிச்சி ஊராட்சி மன்றத் தலைவ ருமான எஸ்.டி.செந்தில்கு மார் மற்றும் அ.தி.மு.க. சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் உள் ளிட்டோர் அவரது நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர்.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ராமநாதபுரம் மாவட் டக் கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி செய்தி ருந்தார்.

  • தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தவர் அஞ்சலி.
  • இவர் தன் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பின்னர் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா படங்களில் அஞ்சலியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும் ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


  தெலுங்கு, மலையாள, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ள அஞ்சலி இணையத்தொடரான பிட்ட கதா தொடரில் அளவுக்கு மீறிய கவர்ச்சியாக நடித்து திடுக்கிட வைத்தார். தொடர்ந்து ஜான்ஸி, பால் போன்ற தொடர்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன.


  இந்நிலையில், நடிகை அஞ்சலி தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது :- பெண்களை மதிக்கத்தெரிந்த ஒருவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன். அவர் திருமணம் முடிந்த பிறகும் என்னை மரியாதையாக நடத்தும் நபராக இருக்க வேண்டும். இதற்குப் பிறகுதான் அன்பு, காதல் எல்லாமும். அப்படி ஒரு பையன் கிடைக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.

  • அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பின்னர் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா படங்களில் அஞ்சலியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும் ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

  தெலுங்கு, மலையாள, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினிமாவில் அறிமுகமாகி இதுவரை 49 படங்களில் நடித்து முடித்துள்ள அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


  ஈகை

  ஈகை

  'ஈகை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கிரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தை அசோக் வேலாயுதம் இயக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு தரண் குமார் இசையமைக்கிறார். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
  • காளையை ஊர்வலமாக எடுத்து சென்று இன்று மாலை நல்லடக்கம் செய்ய உள்ளனர்.

  அலங்காநல்லூர்

  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் காளை இருந்து வந்தது. உடல்நல குறைவால் அந்த காளை இன்று காலை இறந்தது.

  இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக் கட்டுகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி நாணயம், அண்டா, சைக்கிள், பீரோ உள்ளிட்ட பல பரிசுகள் பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது. இந்த காளை ஊருக்குள் சுற்றும் போது செல்ல பிள்ளை யாகவும், வாடி வாசலில் சீறிப்பாயும் போது வீரனாகவும் மாறி ஊருக்கு பெருமை சேர்த்து வந்தது.

  இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த காளை இறந்துவிட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலரும் வருகை தந்து காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர் மந்தையில் காளையை நிறுத்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  பெண்கள் உள்பட ஒட்டு மொத்த கிராமமே ஒன்று திரண்டு கண்ணீர் மல்க காளையை ஊர்வலமாக எடுத்து சென்று இன்று மாலை நல்லடக்கம் செய்ய உள்ளனர்.

  ×