என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் சித்தார்த்"
- 3BHK படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
- '3 BHK' திரைப்படத்தின் டிரெய்லரரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
'3 BHK' திரைப்படத்தின் டிரெய்லரரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் உருக்கமாக எமோஷனலாக இருக்கிறது. ஒரு நடுத்தர குடும்பம் 2 தலைமுறைகளாக ஒரு சொந்த வீடு வாங்க முயற்சி செய்வது போல் காட்சிகள் அமைந்துள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார் கண்கலங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
நான் சினிமாவிற்கு வந்த காலத்தில் இருந்து ஒரு நடிகனா இது எனக்கு 40வது படம். என் தாய், தந்தையிடம் அந்த விஷயத்தை பற்றி நான் சொன்னப்போ.. 40 படங்கள்ல நடிச்சிட்டல சித்து என்று என் அப்பா கூறினார். நான் அதற்கு பதிலும் சொல்லவில்லை. ஆனால் அந்த கேள்வியில் ஒரு பெருமை இருந்தது. ஆச்சரியம் இருந்தது. என் அப்பா கண்ணில் ஒரு ரிலீப் தெரிந்தது.
இங்கு மேடையில் பேசிய அனைவரும் அழ வைத்துவிட்டீர்கள். இது ஒரு இமோஷனலான தருணமாக இருக்கிறது.
இந்த 40 படங்கள அமைத்து கொடுத்தது என் தாய் தந்தை. தாய் எழுத்தாளர். தந்தை தயாரிப்பாளர். அவங்க ரெண்டு பேரும் நம்பி என் மீது முதலீடு செய்திருக்கிறார்கள். தாய் எழுத்தாளர் ஸ்ரீகணேஷ். தந்தை தயாரிப்பாளர் அருண் விஷ்வா. என்னை நம்பி படம் கொடுத்ததற்கு நன்றி.
எனக்கு 40 படங்கள் கடந்தது மனநிறைவாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
- டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான சன்ஃப்ளவர் கடந்த மாதம் வெளியானது. டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகர் சித்தார்த் "டாடி ரொம்ப பாவம்" என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை வெளியானது.
- நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
- இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.
சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், நீண்ட நாட்களாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் இன்று தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சித்தார்த்தின் 40-வது படத்தை ஸ்ரீகணேஷ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- படத்தை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் படித்தவர் சித்தார்த். அதன் பிறகு மணி ரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். 180 படத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.
அதன்பிறகு வெளியான காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4 போன்ற படங்கள் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் மூலம் தன்னை நிலநடுத்திக்கொண்டார் நடிகர் சித்தார்த்.
அதுமட்டுமில்லாமல் படங்களை தவிர்த்து சமூக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.
இதனைத்தொடர்ந்து நடிகை அதிதி ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் சித்தார்த்தின் 40-வது படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்தார்த்தின் 40-வது படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்க இருப்பதாகவும், இந்த படம் உலகளாவிய ஈர்ப்பு கொண்ட கதையைக் கொண்டிருக்கும். எல்லோரது இதயங்களிலும் எதிரொலிக்கும் படமாக அமையும். இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர்.
- தல தீபாவளி கொண்டிய தம்பதிக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் `பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு வெளிவந்த சித்தா படம் வெற்றியை கொடுத்தது.
இதற்கிடையே, நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது.
இதைதொடர்ந்து, நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் தங்களது தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் மற்றும் குடும்பத்தினருடன் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தல தீபாவளி கொண்டிய தம்பதிக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






