search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddarth"

    • கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
    • லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளார்.

    தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாததால் சினிமாவிலிருந்து சிறுது காலம் அவர் விலகியிருந்தார்.

    இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து அவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

    லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது, கூடிய விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • சித்தா திரைப்படத்தை இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.
    • சித்தா படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார்.

    நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார்.

    இந்த படத்திற்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், சித்தா படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி சித்தா திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நவம்பர் 28-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    • அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சித்தா'.
    • இப்படத்தை சித்தார்த் தயாரித்திருந்தார்.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சித்தா'. இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.


    ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.


    சித்தா போஸ்டர்

    இந்நிலையில், 'சித்தா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 17-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார்.
    • அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்த 'சித்தா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியானது. 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவு தெரிவித்து பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளத்தில், "நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும் , சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.



    அடுத்து நடிகர் சிவராஜ்குமார் "மற்றவர்களின் உணர்வுகளை நாம் எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது. கன்னட திரையுலகம் சார்பாக நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் சித்தார்த். இதைச் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், அதைக் கண்டு நாங்கள் மிகுந்த மன வருத்தம் அடைகிறோம். இனி இப்படி நடக்காது" என்று கூறினார்.

    இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "'ஜெயிலர்'படத்தில் கிளப்பிய Mass-ஐ விட,நிஜத்தில் இன்று கன்னடத்தில் கண்டனம் தெரிவித்து தெறிக்க விட்டு இருக்கும் நண்பர் திரு சிவராஜ்குமார் அவர்களுக்கும், சினிமாவில் மட்டுமே வில்லனாகவும் நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் பாராட்டு !!!!

    எதற்கு?மனதில் உள்ளதை தில் உள்ள மனிதர்களாக நேர்மையாக சொல்லி இருக்கிறார்கள். நீண்ட(கால)காவேரி பிரச்சனையை அதன் நீள அகலங்களில் அரசுகள் அலசி ஆராய்ந்து இன்னும் நீண்ட காலம் தீரா பிரச்சனையாக்கி அரசியல் செய்வதை விட்டு விட்டு,ஒரு கலைஞனை காயப் படுத்தி ஆவதென்ன?

    அவர்கள் …. எதிரிகளாக நினைக்கும் நம்மிடமிருந்து எதிர்ப்பு எழுவதை விட,அவர்கள் தெய்வமென மதித்த மறைந்த திரு ராஜ்குமார் அவர்களின் வம்சாவழியும், அவர்கள் பெரிதும் நேசிக்கும் திரு சி.ரா.கு எதிர்ப்பையும் மன்னிப்பையும் வெளிபடுத்தும் போது, அநாவசியமாக அநாகரிகமாக நடந்துக் கொண்ட மிக சிலர் (அவர்கள் மட்டுமல்ல கர்நாடகா என்பது) திருந்த வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.


    ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'சித்தா' படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன் இப்படம் குறித்து பேசியுள்ளார்.


    அவர் கூறியதாவது, "வித்தியாசமான தமிழ் படங்களை பார்க்க வேண்டும் எடுக்க வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் உன்னத ரசிகர்களில் ஒருவர் சித்தார். இப்படி சினிமாவை நற்திசையில் நோக்கி நகர்த்தும் பல கலைஞர்களில் முக்கியமான ஒருவர் சித்தார்த். அவர் 'சித்தா' படத்தின் நாயகன். சித்தப்பாவாக இருப்பது மிகவும் கடினம் கூட மிகவும் சந்தோஷமானதும் கூட. இந்த சித்தப்பாவின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். 'சித்தா' திரைப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படம் ‘சித்தா’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கிறார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைக்கிறார்.


    சித்தா முதல் தோற்ற போஸ்டர்

    ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

    இதையடுத்து சித்தார்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

    • சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது.
    • இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக பங்கேற்கும் புகைப்படங்களும் வைரலானது.

    நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    சித்தார்த் -அதிதி ராவ்

    சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது.

    சமீபத்தில், நடிகர் சித்தார்த்துடன் இணைந்து விஷாலின் எனிமி படத்தில் இடம்பெற்ற மாலை டம் டம் பாடலுக்கு நடிகை அதிதி ராவ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், சித்தார்த் உடனான காதல் வதந்திக்கு அதிதி ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.


    சித்தார்த் - அதிதி ராவ்

    இது குறித்து அவர் கூறியதாவது, மக்கள் அப்படித்தான் பேசுவார்கள், அதை தடுக்க முடியாது எதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை, அது 'தேவையற்றவை' எனது வேலையில் கவனம் செலுத்துகிறேன். தான் விரும்பும் இயக்குனர்களுடன் பணிபுரியும் வரை, பார்வையாளர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளும் வரை தான் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறினார்.

    சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
    • இவ்விழாவில் ரஜினி மற்றும் கமல் சிற்ப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.


    பொன்னியின் செல்வன்

    இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர் ரஹ்மான் இசை கச்சேரி நடைபெற்றது. இதில், 'ஆயுத எழுத்து' படத்தில் இடம்பெற்ற 'யாக்கை திரி காதல் சுடர்' பாடலை மேடையில் இருந்த கலைஞர்கள் பாடினார்கள். அப்போது திரிஷா மற்றும் சித்தார்த் இருவரும் அந்த பாடலுக்கு இருந்த இடத்தில் இருந்து உற்சாகமாக நடனமாடி ரசித்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



    மெட்ராஸ் படம் மூலம் புகழ் பெற்ற கேத்ரீன் தெரசா, தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்திருக்கிறார். #CatherineTresa
    மெட்ராஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்ரீன் தெரசா. கடம்பன், கணிதன் படங்களில் தொடர்ந்து நடித்தவர் அடுத்து சித்தார்த்துக்கு ஜோடியாக சாய்சேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

    சாய்சேகர் கேத்ரீன் பற்றி கூறும்போது ‘இது வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது. நன்றாக நடிக்க தெரிந்த கதாநாயகி தான் வேண்டும். அதனால் தான் கேத்ரீன் கொண்டு வந்தோம். மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் நடித்தார். 



    ஒரு காட்சியில் வில்லன் அவரது தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்து வரவேண்டும். இன்னொரு காட்சியில் 30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடிக்க வேண்டும். எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்தார்’ என்று கூறி இருக்கிறார்.
    ×