என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூர்யவம்சம்"

    • ஒரு தியேட்டரில் ரசிகர்களின் மனநிலை அறிய காத்திருந்தோம்.
    • சில நேரம் நம் பார்வையை விட ரசிகர்களின் பார்வை வேறுவிதமானது என்பதையும் புரிந்துகொண்டேன்.

    தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் சரத்குமார், சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் வெளியான 'டியூட்' படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் கவனம் ஈர்த்தது. இதற்கிடையில் தனது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த 'சூர்ய வம்சம்' படம் குறித்த நினைவலைகளை அவர் பகிர்ந்துள்ளார்.



    அவர் கூறுகையில், ''சூர்ய வம்சம் படம் ரிலீசான சமயத்தில் ஒரு தியேட்டரில் ரசிகர்களின் மனநிலை அறிய காத்திருந்தோம். அப்போது ஒரு இயக்குனர் என்னிடம் வந்து 'என்ன படம் எடுத்துள்ளீர்கள், இது எப்படி ஓடும்?' என்று கேட்டு சென்றார். எல்லோரும் சூப்பர் என்று சொல்லும் சூழலில், இவர் இப்படி சொல்லிட்டாரே... என்று யோசித்தேன். சில நேரம் நம் பார்வையை விட ரசிகர்களின் பார்வை வேறுவிதமானது என்பதையும் புரிந்துகொண்டேன்.

    என்னை பொறுத்தவரை இன்று வரை தியேட்டர்களில் அதிக ரசிகர்கள் பார்த்த படம் என்றால், அது சூர்ய வம்சம் படம் தான். அதை உறுதியாகவே சொல்வேன்'', என்றார்.

    • '3 BHK' ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
    • '3 BHK' திரைப்படத்தின் டிரெய்லரரை படக்குழு வெளியிட்டது.

    சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    '3 BHK' திரைப்படத்தின் டிரெய்லரரை படக்குழு வெளியிட்டது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற 3BHK படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் சூர்யவம்சம் படத்தின் காட்சியை படக்குழு ரீ க்ரியேட் செய்துள்ளது.

    அந்த காட்சியில், "சரத்குமார், தேவயாணி உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்றும், அதில் சித்தார்த் பங்கேற்காமல் தனித்து நிற்பது போன்றும்" சூர்யவம்சம் படத்தின் காட்சியை ரீ க்ரியேட் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூர்யவம்சம்’.
    • இப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

    கடந்த 1997- ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'சூர்யவம்சம்'. இந்த படத்தில் தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    இதில், வில்லனாக நடித்திருந்த ஆனந்த்ராஜின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும், அவர் பயன்படுத்திய மரிக்கொழுந்து வாசனை திரவியம் அந்த காலத்தில் அவ்வளவு பேமஸாக இருந்தது. இந்த படத்தில் சரத்குமார் சக்திவேல் கவுண்டர் மற்றும் சின்ராசு என்ற இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.

    மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. அதிலும் 'நட்சத்திர ஜன்னலில்' பாடல் இன்று வரை அனைவரும் கொண்டாடும் ஒரு பாடலாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் தேவயானி செய்த இட்லி உப்புமா தாக்கம் இன்றுவரை உள்ளது.


    இந்நிலையில், 'சூர்யவம்சம்' திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சரத்குமார் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி!

    விரைவில் சூர்யவம்சம் - 2!..." என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 'சூர்யவம்சம்' இரண்டாம் பாகம் வருவதை சரத்குமார் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்
    • மதுரையில் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான்

    பாஜகவுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் சமகவை பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அதிரடியாக அறிவித்தார். மூன்றாவது முறை மோடியை பிரதமராக்குவதே லட்சியம் என்று அவர் சூளுரைத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் விருதுநகரில் பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் களம் காண்கிறார்கள். இதனால் விருதுநகரில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

    மதுரை அடுத்த திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வழிபாடு நடத்திய பிறகு ராதிகா சரத்குமார் தனது பரப்புரையைத் தொடங்கினார். அப்போது பேசிய ராதிகா, "வேலைவாய்ப்பு, இருப்பிடம் மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவே நாங்கள் செயல்படுவோம். பிரதமர் மோடி நாட்டுக்கு எத்தனையோ நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவற்றில் பல விஷயங்கள் இன்னும் தமிழ்நாட்டுக்கு வந்து சேரவில்லை. ஆகவே, மோடியின் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வர நாங்கள் பாடுபடுவோம்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான். சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல எனது மனைவி ராதிகாவை எம்.பி ஆக்குவேன். காமராஜர் பிறந்த மண்ணில் என் மனைவி போட்டியிடுவது பெருமை, மோடி 3வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    ×