என் மலர்

  நீங்கள் தேடியது "parliamentary election"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதும், 475 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  சென்னை:

  நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் 539 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களை வைத்து ஒரு தனியார் அமைப்பு ஆய்வு செய்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 233 பேர் (43 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 159 பேர் மீது கொலை, கடத்தல், கற்பழிப்பு போன்ற கொடுங்குற்ற வழக்குகள் உள்ளன. குற்ற வழக்கு உள்ளவர்களில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் 116 பேர் (கொடுங்குற்ற வழக்கில் 87 பேர்), காங்கிரசார் 29 பேர் (கொடுங்குற்ற வழக்கில் 19), தி.மு.க.வினர் 10 பேர் (கொடுங்குற்ற வழக்கில் 6) என கட்சிகளின் பட்டியல் நீள்கிறது.

  2009-ம் ஆண்டில் இருந்து குற்றப் பின்னணியுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பது வருத்தத்திற்குரியது. 2009-ம் ஆண்டு 30 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகளும், 14 சதவீதம் பேர் மீது கொடுங்குற்ற வழக்குகளும் இருந்தது. 2014-ம் ஆண்டில் இது 34 சதவீதம் மற்றும் 21 சதவீதம் என்று அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

  கேரளா மாநிலம் இடுக்கி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியகோஸ் மீது அதிகபட்சமாக 204 வழக்குகள் உள்ளன. இதில் 37 கொடுங்குற்றங்களும் அடங்கும். சில வழக்குகளில் தண்டனையும் அனுபவித்துள்ளார்.

  குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 10 பேர் எம்.பி.க்கள் ஆகியுள்ளனர். அவர்களில் பா.ஜ.க.வினர் 5 பேர், காங்கிரசார் 4 பேர், ஒருவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

  வெற்றி பெற்றவர்களில் 475 பேர் (88 சதவீதம்) கோடீஸ்வரர்கள். அவர்களில் 265 பேர் பா.ஜ.க.வையும், 43 பேர் காங்கிரசையும், 22 பேர் தி.மு.க.வையும் (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மற்ற கட்சியினரையும் சேர்த்து) சேர்ந்தவர்கள். கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு தேர்தலிலும் உயர்ந்து வருகிறது. 2009-ம் ஆண்டில் 58 சதவீதமாக இருந்த கோடீஸ்வர எம்.பி.க்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 88 சதவீதமாக அதிகரித்தது.

  பெரும் பணக்கார எம்.பி.க்களில் முதல் 3 இடங்களிலும் காங்கிரசார் தான் உள்ளனர். அவர்கள் மத்தியபிரதேசம் நகுல்நாத் (ரூ.660 கோடி), தமிழ்நாடு எச்.வசந்தகுமார் (ரூ.417 கோடி), கர்நாடகா சுரேஷ் (ரூ.338 கோடி). குறைந்த சொத்து உள்ள முதல் 3 பேர் ஆந்திராவை சேர்ந்த மாதவி (ரூ.1.41 லட்சம்), ஒடிசா சந்திரானி முர்மு (ரூ.3.40 லட்சம்), ராஜஸ்தான் மகந்த் பாலக்நாத் (ரூ.3.53 லட்சம்).

  தொடர்ந்து 2-வது முறையாக எம்.பி.யான 224 பேரின் சொத்துகள் சராசரியாக 29 சதவீதம் உயர்ந்துள்ளது. அவர்களில் பா.ஜ.க.வினர் 154 பேருக்கு 35.62 சதவீதமும், காங்கிரசில் 14 பேருக்கு 150 சதவீதமும் சொத்து உயர்ந்துள்ளது.

  392 பேர் பட்டதாரிகள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள். 128 பேர் பள்ளிக்கூடத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஒருவர் எழுதப்படிக்க மட்டும் தெரிந்தவர். ஒருவர் படிக்காதவர். மற்றவர்கள் 17 பேர்.

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தல் தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சறுக்கல் தான், வீழ்ச்சி அல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
  ஆலந்தூர்:

  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் ஏராளமான வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்து உள்ளனர். தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியானது. சந்தர்ப்பவாதம் கிடையாது. தென்னிந்தியாவில் வெற்றி பெற்று உள்ளோம். வட இந்தியாவில் தோல்வியடைந்து உள்ளோம். வருங்காலத்தில் அங்கும் கட்சியை வளர்த்து மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.

  இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. ஒரு மாநிலத்தில் வேறு கட்சி வெற்றி பெற்றால் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்றால் அது சர்வாதிகாரம். மத்திய அரசின் திட்டங்கள் மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. தமிழகத்தை ஒதுக்கி விடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டக்கூடாது. தமிழகத்தில் தாமரை நன்றாக மலரட்டும். ஆனால் தாமரை மலர தண்ணீர் வேண்டும். நீரற்ற குட்டையில் தாமரை மலருமா?.

  தோல்வியும், வெற்றியும் தற்காலிகமானது என்பதை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லி இருக்கிறார். மக்களை நேசிக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை சொல்கிறோம். மொழி, சாதி, மதம் ஆகியவற்றை கொண்டு மக்களை பிரிக்கக்கூடாது என்று கூறுகிறோம். ஆனால் மோடி தனி மனித விமர்சனத்தை வைத்தார். காங்கிரஸ் கட்சி சரியான பாதையில் செல்கிறது. இது ஒரு சறுக்கல் தான். வீழ்ச்சி கிடையாது.

  இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வழி நடத்த ராகுல்காந்தியை தவிர வேறு யாரும் இல்லை. தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி சொன்னாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தொண்டர்கள் ராகுல்காந்தியை தான் விரும்புகின்றனர்.

  காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் மகிழ்ச்சி. அதற்காக பேச்சுவார்த்தை எல்லாம் நடத்த மாட்டோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை என கட்சியினரிடம் தெரிவித்தேன், ஆனால் என்னுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர் என மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
  கொல்கத்தா:

  மேற்கு வங்காளத்தில், மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முந்தைய தேர்தலில் 34 இடங்களை பிடித்திருந்தது. இந்த பின்னடைவு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.  

  பாஜகவின் இந்த வெற்றி மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இதனை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் அவசரக் கூட்டத்தை இன்று கூட்டி இருந்தார்.

  கூட்டம் முடிந்த பின செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

  பாஜகவின் இந்த வெற்றியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாஜக எப்படி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதை கேட்க மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு பயமில்லை.

  மத்திய படைகள் எங்களுக்கு எதிராக செயலாற்றின. அதனால் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டது.  நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்தோம். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  6 மாதங்களால் என்னால் பணியாற்ற முடியவில்லை என கட்சியினரிடம் கூறினேன்.  முதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை என கட்சியினரிடம் தெரிவித்தேன். ஆனால் என்னுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர்.

  கட்சி சின்னம் தான் எனக்கு மிகவும் முக்கியம். மக்கள் துணிவான முடிவு எடுத்தால் என்னால் முதல்-மந்திரியாக தொடர முடியும். எங்களின் ஓட்டு வங்கியை அதிகரிக்க நினைக்கிறோம். இடதுசாரிகள் ஓட்டு தான் பாஜகவுக்கு சென்றுள்ளது என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது.
  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி இப்படி தொடர்ந்து ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை என்கிற வகையில் இது சாதனை வெற்றியாக அமைந்துள்ளது.

  மற்றொரு புறம், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 2-வது முறையாக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது.

  அத்துடன், இந்திய அரசியலில் குறிப்பாக கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், அதெல்லாம் பழங்கதை என்ற நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளன.

  2004 பாராளுமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 59 எம்.பி.க்கள் இவ்விரு கட்சிகள் சார்பில் தேர்வு பெற்றிருந்தனர். கடந்த 2014 தேர்தலில் இவ்விரு கட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றன. இதுதான் இதுவரையில் அக்கட்சிகள் பெற்ற குறைவான எண்ணிக்கையாக இருந்து வந்தது.

  இந்த தேர்தலில்தான் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் 5 தொகுதிகளில் மட்டுமே இக்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

  கேரளாவில் ஆலப்புழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஏ.எம். ஆரிப் வெற்றி பெற்றார்.

  மீதி 4 இடங்களையும் தமிழ்நாட்டில் இருந்து இக்கட்சிகளுக்கு பெற்றுத்தந்த புண்ணியம், தி.மு.க.வைச் சேரும். தி.மு.க. கூட்டணியில் இணை ந்து தலா 2 தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டு, வெற்றி பெற்றிருக்கின்றன.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பி.ஆர். நடராஜன் கோவையிலும், சு.வெங்கடேசன் மதுரையிலும் வெற்றி பெற்றனர்.

  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செல்வராசு நாகப்பட்டினத்திலும், கே.சுப்பராயன் திருப்பூரிலும் வென்றனர்.

  நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்ட இடங்கள் 45. இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்ட இடங்கள் 55. ஆக இவ்விரு கட்சிகளும் கூட்டாக போட்டியிட்ட இடங்கள் 100. வெற்றி பெற்ற இடங்கள் 5. எனவே 5 சதவீத வெற்றியை மட்டுமே இந்த கட்சிகள் பெற்றுள்ளன.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்த தேர்தலில் வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது. 2004-ல் 43 தொகுதிகளிலும், 2009-ல் 16 தொகுதிகளிலும், 2014-ல் 9 தொகுதிகளிலும் இந்த கட்சி வெற்றி பெற்றிருந்தது.

  இந்த முறையோ 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து, கொடி கட்டிப்பறந்த மேற்கு வங்காளத்திலும், திரிபுராவிலும் ஒரு இடம் கூட இக்கட்சிக்கு கிடைக்கவில்லை.

  இதே நிலைதான் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது.

  இந்த கட்சி சார்பில் பீகாரில் பெகுசாராய் தொகுதியில் களம் இறங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மாணவர் தலைவர் கன்னையா குமாரும் தோல்வியைத்தான் தழுவினார்.

  மேற்கு வங்காளத்தில் இவ்விரு கட்சிகள் சார்பில் களம் கண்டவர்களில் ஒருவர் தவிர்த்து அத்தனை பேரும் டெபாசிட் தொகையினை பறிகொடுத்துள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  கூடவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 2 கட்சிகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பறிகொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  ஒரு கட்சி, தேசிய கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு 3 அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது.

  1. பாராளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

  2. நான்கு மாநிலங்களில் இருந்து 4 இடங்களை கைப்பற்றுவதுடன், 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.

  3. நான்கு மாநிலங்களில் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். 8 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருக்க வேண்டும்.

  இந்த அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்யாத நிலையில், 2 கம்யூனிஸ்டுகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பறிகொடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள மாநிலம் வயநாட்டில் அவர் மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி கேரள மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்தார்.
  அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தாலும், கேரள மாநிலம் வயநாட்டில் அவர் மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் கேரள மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்தார்.  இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் செய்தியில், “தன்னை வெற்றி பெற செய்த வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கும், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற உதவிய கேரள மக்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டு உள்ளார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அசத்தலாக பேசியுள்ளார். அப்படி அவர் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.
  சென்னை:

  பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. கட்சி துவங்கி 14 மாதங்களே ஆன நிலையில், கணிசமான அளவு வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்தின் எழுச்சியே எங்கள் இலக்கு. விவசாயிகளுக்கு எதிரான திட்டம் கூடாது. தேர்தல் வரும் போகும். ஆனால், எங்கள் இலக்கு தமிழகத்தின் வளர்ச்சியே ஆகும்.  நேர்மையாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படிதான், நான்  மக்களை வழி நடத்துவேன். நம் கட்சி தொண்டர்களும் அப்படிதான் செயல்பட்டனர். இன்று தமிழகத்தில் மூன்றாவது இடம் மாற்று என மக்கள் நினைக்கும் அளவிற்கு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுள்ளது. இன்னும் அயராது பாடுபடும்.

  நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு  நாங்கள் பேசக்கூடிய அளவிற்கு இந்த தேர்தலில் வாக்குகள் பெற்றுள்ளோம். மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக கருத வேண்டும். அரசியலை நான் தொழிலாக நினைக்கவில்லை. தொழிலாக நினைத்தால் அது மாபெரும் தவறு.

  14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓட விட்டுள்ளனர். மக்களின் வாக்குகள், நாங்கள் நேர்மையான வழியில் பயணித்து பணிகளை மேற்கொள்ள மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.  தமிழக மக்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.  

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக மாநிலம், தும்கூரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமரும் அம்மாநிலத்தின் முதல் மந்திரி குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா தோல்வி அடைந்தார்.
  பெங்களூரு:

  மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமரும் அம்மாநிலத்தின் முதல் மந்திரி குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தொகுதிமாறி தும்கூரில் போட்டியிட்டார்.

  அங்கு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பசவராஜ் 5 லட்சத்து 96 ஆயிரத்து 127 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 5 லட்சத்து 82 ஆயிரத்து 788 வாக்குகளை பெற்ற தேவேகவுடா 13 ஆயிரத்து 339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  லக்னோ:

  கடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தமுறை வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார்.

  வாரணாசியில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முழுமையான முடிவுகள் வெளியான நிலையில் பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகளை பெற்றார். இரண்டாவது இடத்தை பிடித்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகளை பெற்றார்.

  ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 548 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

  கடந்த 2014-ம் ஆண்டில் இதே தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3 லட்சத்து 71 ஆயிரத்து 784 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கருத்து தெரிவித்துள்ளார்.
  பெங்களூரு :

  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை நேரில் ஆய்வு செய்து அம்பலப்படுத்தியவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. இதன் மூலம் அவர் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார்.

  அதன் பிறகு அவர் சிறைத்துறையில் இருந்து வேறு துறைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் தற்போது ரெயில்வேத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார்.

  தற்போது நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இதுபற்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது. அதற்கான சாத்தியமே இல்லை. இது அனைத்து ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் தெரியும். நான் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் இந்த கருத்தை கூறவில்லை.

  உண்மை நிலையை கூறுகிறேன். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள். இது எனது கருத்து. இதில் அரசியலுக்கு இடமில்லை.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாடு முழுவதும் நாளை டாஸ்மாக் விடுமுறை முன்னிட்டு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க முயன்ற 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 68 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
  கோவை:

  நாடு முழுவதும் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மது பானங்களை வாங்கி விற்பனை செய்ய முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளது. அதனை தொடர்ந்து பெரிய நாயக்கன்பாளையம், பேரூர், தொண்டாமுதூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் மதுபானங்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

  அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த பூமிநாதன் (38), மதுக்கரை ராமலிங்கம் (34), நீலாம்பூர் குமார் (26), பெரிய நாயக்கன் பாளையம் தமிழரசன் (27), செம்மேடு மந்திரப்பன் (67) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 68 பாட்டில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூர் தொகுதி வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என 306 நபர்கள் ஈடுபட உள்ளனர்.
  பெரம்பலூர்:

  தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

  இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

  பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கும் எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர், தமிழக சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவ்வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என 306 நபர்கள் ஈடுபட உள்ளனர்.

  பதிவான வாக்குகள் அனைத்தும் 14 எண்ணிக்கையிலான மேஜைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. அதன்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 24 சுற்றுகளாகவும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 18 சுற்றுகளாகவும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும், முசிறி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 19 சுற்றுகளாகவும், துறையூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin