search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் பா.ஜனதா பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனை  கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பேசிய காட்சி.அருகில் மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    தூத்துக்குடியில் பா.ஜனதா பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்

    • பாராளுமன்ற தேர்தலுக்கு இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும்.
    • பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனையை விளக்கி தெருமுனை பிரச்சாரங்கள் நடத்த வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி மாநகர தெற்கு மண்டல் சார்பாக முத்தையாபுரம் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை

    மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்கள் உமரி சத்தியசீலன், ராஜா, கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மகளிர் அணி தலைவி செல்வி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலுக்கு 7 மாதங்கள் மட்டுமே உள்ளதால் இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும். பூத் வாரியாக பொதுமக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனையை விளக்கி தெருமுனை பிரச்சாரங்கள் நடத்த வேண்டும் என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் குலசேகர ரமேஷ்,பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, விவசாய அணி மண்டல் தலைவர் முத்துராஜ், ஓ.பி.சி. அணி மண்டல் தலைவர் துர்க்கையப்பன், தெற்கு மண்டல் துணை தலைவர் ஜெயசித்ரா ராமலட்சுமி பொய் சொல்லான், மண்டல் செயலாளர்கள் செல்வம், அருண் பாபு, சிவதானு, முத்துகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராம் , விந்தியா முருகன், வெளிநாடு தமிழர் நலன் பிரிவு மாவட்ட செயலாளர் பிரேம் குமார், உள்ளாட்சி அமைப்பு பிரிவு மாவட்ட செயலாளர் முத்து பெரியநாயகம், சமூக வலைதள பிரிவு மண்டல் தலைவர் அஜய், தரவுதளவு மேலாண்மை பிரிவு மண்டல் தலைவர் ராஜ்குமார், அமைப்புசாரா பிரிவு மண்டல் தலைவர் அருள் முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×