search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை  இப்பொழுதே தொடங்க வேண்டும்  - கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய காட்சி. அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.


    பாராளுமன்ற தேர்தல் பணிகளை இப்பொழுதே தொடங்க வேண்டும் - கனிமொழி எம்.பி. பேச்சு

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது.
    • 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், தி.மு.க., துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் பிரம்ம சக்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட் செல்வின், செந்தூர் மணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுக பெருமாள், சோபியா, மாவட்ட பொரு ளாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

    இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்கு மார், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீராசிராசுதீன், உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப், பேரூராட்சி துணைத் தலைவரும், நகர செயலாளருமான சந்தையடி யூர்மால் ராஜேஷ், யூனியன் சேர்மன்கள் ரமேஷ், வசுமதி அம்பாசங்கர், கோமதி ராஜேந்திரன், ஜெயபதி, திருச்செந்தூர் நகராட்சி சேர்மன் சிவ ஆனந்தி, காயல்பட்டணம் முத்து முகமது, பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், முத்துச் செல்வன், இந்திரகாசி, சாகுல் ஹமீது, கணேசன், ஆறுமுக பாண்டியன், ராஜலெட்சுமி, ரவி செல்வகுமார், முகம்மது அலி ஜின்னா, மாவட்ட அமைப்பாளர்கள் மகாவிஷ்ணு, சந்தடி ரவி ராஜா, ஒன்றிய செயலாளர்கள் நவின் குமார், ரமேஷ், சதீஷ், முத்து முகமது, சுடலை, ரவி, பார்த்திபன், ஜோசப், கொம்பையா, கோட்டாளம், இசக்கி பாண்டியன், பாலமுருகன், பொன் முருகேசன், ஜெயக்கொடி, சுப்பிபிரமணியன், சரவண குமார், இளையராஜா, ராமசாமி, சுரேஷ் காந்தி, சிவக்குமார், ஆஸ்கர், உடன்குடி தொடக்க வே ளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், உடன்குடி முன்னாள் நகர செயலாளர் ஜான் பாஸ்கர், உடன்குடி பேரூராட்சி மற்றும் யூனியன் கவுன்சிலர்கள், இளைஞர் அணியை சேர்ந்த பாய்ஸ் அஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    இக்கூட்டத்தில் 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், தி.மு.க., துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவிப்பது, வரும் 27-ந் தேதி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பூத் கமிட்டி பணிகள் உடனடியாக தொடங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல்ஆட்சியை இந்திய நாடேதிரும்பி பார்க்கிறது. இந்தியாவிற்கு எடுத்துக் காட்டாக நடந்து வருகிறது.வரும் பாராளுமன்றதேர்தலை சந்திக்க பணிகளை இப்போழுதேதொடங்க வேண்டும் அனைவரும் ஒற்றுமையுடன் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். பா. ஜனதா அரசு தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் வெற்றி காண துடிக்கிறது. அதற்கு தமிழக மக்களாகிய நாம் இடம் கொடுக்கக் கூடாது, அனைத்து ஜாதியினரையும் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார்.

    ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் நன்றி கூறினார்.

    Next Story
    ×