என் மலர்
நீங்கள் தேடியது "ஜேபி நட்டா"
- சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
- மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்ற சர்தார் படேல் 150 ஆண்டு நிகழ்வில் மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா காங்கிரசை காரசாரமாக விமர்சித்துக்கொண்டிருந்தார். சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மேடைக்கு முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மற்ற அதிகாரிகள் தூக்கிச் சென்றனர். ஆனால் நட்டா இவை எதையும் பொருட்படுத்தாமல் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்த வீடியோவை எக்ஸில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ், ஜே.பி. நட்டா பேசிக்கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் மேடை அருகே மயங்கி விழுந்துள்ளார்.
இருப்பினும், நட்டா தனது பேச்சை நிறுத்தவில்லை .மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
கண் முன்னால் ஒருவர் விழுந்ததைக் கூடப் பொருட்படுத்தாத பாஜக தலைவர்கள், பணவீக்கம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் போன்ற பொதுமக்களின் கஷ்டங்களைப் பற்றி எப்படி அக்கறை செலுத்துவார்கள்?
அதிகாரம் மட்டுமே முக்கியம், பொதுமக்களின் கஷ்டங்கள் ஒரு பொருட்டல்ல என்பதே பாஜகவின் யதார்த்தம். பாஜக மனித நேயத்தை விற்றுவிட்டது என்று சாட்டியுள்ளது.
இதற்கிடையே மயங்கி விழுந்தவர், நீண்ட நேரம் நின்றதால் சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ உதவிக்கு பின் அவர் உடல்நிலை சீரானதாக கூறப்படுகிறது.
- நிதிஷ் குமார் கட்சி 101 இடங்களில் 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
- பாஜக 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது வெற்றிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, "பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வரலாற்று வெற்றி, நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமார் அரசாங்கங்களின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் மீதான நம்பிக்கையின் முத்திரை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- லாலு பிரசாத் கட்சி பீகாரில் மீண்டும் காட்டு ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புகிறது.
- ஆர்.ஜே.டி. மற்றும் அதன் டிஎன்ஏ மாறவில்லை.
பீகார் மாநிலத்தில் வருகிற 6ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோசமான வானிலை காரணமாக சிவான் மன்றும் முசாபர்பூரில் நடைபெற்ற பேரணியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவால் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் காணொலி மூலம் பேசினார். அப்போது ஜே.பி. நட்டா பேசியதாவது:-
ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியின் கீழ் பீகார் காட்டு ராஜ்ஜியத்தை கண்டது. மாநிலத்தில் முழுமையான அராஜகம் நிலவியது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது. தொழிலதிபர்கள் கடத்தல் சம்பவம் அதிகரித்து கொண்டு வந்தது.
ஷஹாபுதீனின் பயங்கரத்தை சிவான் கண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை அவரது மகனை சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் நிறுத்தியுள்ளது. லாலு பிரசாத் கட்சி பீகாரில் மீண்டும் காட்டு ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புகிறது. ஆர்.ஜே.டி. மற்றும் அதன் டிஎன்ஏ மாறவில்லை. அதனால்தான் ஷஹாபுதீன் மகன் ஒசாமா ஷஹாப் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
இவ்வாறு ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.
மறைந்த முகமது ஷஹாபுதீன் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்.
- SIR-க்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன.
- ஏனென்றால், அவர்கள் ஊடுருவல்காரர்கள் வாக்குகள் அடிப்படையில் அரசு அமைக்க விரும்பினார்கள்.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பீகார் மாநில வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பீகார் நடத்தப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன. ஏனென்றால், அவர்கள் ஊடுருவல்காரர்கள் வாக்குகள் அடிப்படையில் அரசு அமைக்க விரும்பினார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அது நடக்க அனுமதிக்காது. அவர்களின் நிலை முற்றிலும் வெளிப்பட்டுள்ளது. அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு, அவர்களிடம் ஆதாரம் இல்லை.
பணம் பறித்தல், காட்டு ராஜ்ஜியம், மிரட்டல்தான் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிலைப்பாடு. கடந்த 20 ஆண்டுகளில் நிதிஷ் குமார் காட்டு ராஜ்ஜியம் இல்லாத பீகாரை உருவாக்கியுள்ளார்.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 12ஆம் தேதி பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார்.
- ஜே.பி. நட்டா தொடங்கி வைத்து பேசுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற 12-ந்தேதி தனது பிரசார பயணத்தை மதுரையில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளார். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் அவர் தனது முதல் கட்ட பிரசார சுற்றுப் பயணத்தை மதுரையில் தொடங்கி 5 நாட்கள் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து 17-ந்தேதி நெல்லையில் முடிக்க திட்டமிட்டு உள்ளார்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு மதுரையில் வருகிற 12-ந்தேதி பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்துக்கு மதுரை போலீசார் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர்.
அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்தை பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா தொடங்கி வைத்து பேசுவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜே.பி. நட்டாவின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசார பயணத் தொடக்க நிகழ்ச்சியில் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூடுகிறார்கள்.
- கரூர் துயர சம்பவத்தால் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளை தள்ளி வைத்துள்ளது.
- புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற 12-ந்தேதி மதுரையில் இருந்து பிரசார பயணத்தை தொடங்குவதாக இருந்தது. இந்த பிரசார பயணத்தை அகில இந்திய பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பதாகவும் இருந்தது. தினசரி 2 மாவட்டங்கள் என்ற அடிப்படையில் அவரது பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கரூர் துயர சம்பவத்தால் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளை தள்ளி வைத்துள்ளது. பா.ஜ.க.விலும் உண்மை கண்டறியும் குழுவை ஜே.பி. நட்டா நியமித்தார். அந்த குழுவினர் கரூர் சென்று சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டு விசாரித்தனர். இந்த குழுவினர் அடுத்த ஒரு வாரத்துக்குள் தங்கள் அறிக்கையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பிரசார பயணத்தை தள்ளி வைக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இதனால் ஜே.பி.நட்டாவின் வருகையும் ரத்தாகி உள்ளது.
இனி தீபாவளி பண்டிகைக்கு பிறகு பிரசார பயணம் தொடங்கும் என்றும் அப்போது ஜே.பி.நட்டா திட்டமிட்டவாறு பிரசாரத்தை தொடங்கி வைப்பார் என்றும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
- நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
- சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகிய முக்கிய தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.
சேலத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்த நிலையில் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
மேலும், தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், டெல்லியில் சென்ற நயினார் நாகேந்திரன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் சந்தித்துள்ளார்.
அப்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் 14 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.
- உலகின் பெரிய அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்றார் ஜே.பி.நட்டா.
அமராவதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாஜக சார்பில் நடந்த பேரணியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாங்கள் 14 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளோம்.
இந்தியாவில் 20 மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியும், 13 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியும் நடக்கிறது.
எங்களிடம் 240 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். சுமார் 1,500 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 170க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.க்கள் உள்ளனர்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 11 ஆண்டுகளில் செயல்திறன் கொண்ட, பொறுப்புணர்வுள்ள அரசு அமைந்துள்ளது.
மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.
ஜிஎஸ்டியை 2 அடுக்காக சீர்த்திருத்தம் செய்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசளித்துள்ளார் என தெரிவித்தார்.
- 2014-க்கு முன்பு, முந்தைய அரசாங்கம் ஊழலால் நிறைந்திருந்தது, நாடு முழுவதும் ஒரு எதிர்மறை உணர்வு நிலவியது.
- ஆனால் 2014-க்குப் பிறகு, பிரதமர் மோடியின் தலைமையில் அந்த உணர்வு மாறியது.
பா.ஜ.க. அரசு அமைந்து 11 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. பிரதமராக 3-வது முறையாக பதவியேற்று ஓராண்டு முடிவு பெறும் நிலையில் பா.ஜ.க. ஆட்சி குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் "நல்லாட்சி மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது. 140 கோடி இந்தியர்களின் ஆசீர்வாதத்தாலும், கூட்டு பங்கேற்பாலும் இந்தியா பல்வேறு துறைகளில் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மட்டுமல்லாமல், காலநிலை நடவடிக்கை, டிஜிட்டல் கண்டுபிடிப்பு போன்ற உலகளாவிய பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்து வாழ்க்கையை எளிதாக்கியுள்ளோம்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 11 ஆண்டுகளில் செய்த பணிகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜே.பி. நட்டா கூறியதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஊழல், மோசடிகள் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் என முத்திரை குத்தப்பட்டது.
பிரதமர் மோடி நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றி, பொறுப்பான மற்றும் பொறுப்புணர்வுள்ள அரசாங்கத்தை வழங்குவதன் மூலம் செயல்திறன் மற்றும் நல்லாட்சி அரசியலைத் தொடங்கினார்.
கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் அரசு செய்த பணிகள் அசாதாரணமானவை, மேலும் அவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.
2014-க்கு முன்பு, முந்தைய அரசாங்கம் ஊழலால் நிறைந்திருந்தது, நாடு முழுவதும் ஒரு எதிர்மறை உணர்வு நிலவியது. ஆனால் 2014-க்குப் பிறகு, பிரதமர் மோடியின் தலைமையில் அந்த உணர்வு மாறியது. இப்போது மக்கள் பெருமையுடன், "Modi hai to mumkin hai (மோடி இருந்தால் அனைத்தும் சாத்தியம்" என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
- மகாராஷ்டிரா தேர்தலில் கிரிக்கெட் போன்று மேட்ச் பிக்சிங் நடைபெற்றது.
- பீகார் தேர்தலிலும் இதுபோன்ற நடைபெறும்.
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
முன்னதாக நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கூட்டணி அதிக வெற்றியை பெற்றது. ஆனால் சில மாதங்களுக்கு பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. இதன் பின்னணியில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் நீண்ட கட்டுரை எழுதியுள்ள ராகுல் காந்தி, கிரிக்கெட் போட்டி போன்ற மேட்ச் பிக்சிங் நடைபெற்றது. இதேபோல் பீகார் தேர்தலிலும் மேட்ச் பிக்சிங்கில் பாஜக ஈடுபடும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேர்தல் தோல்விகள் ராகுல் காந்தியை விரக்தியடைய செய்துள்ளன என, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பதில் அளித்துள்ளார்.
ராகுல் காந்தி எப்படி மோசடி நடக்கிறது என்பதை வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக சுட்டுக்காட்டிருந்தார். இதற்கு நட்டா அதேபோல் காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை வரிசைப்படுத்தியுள்ளார்.
ராகுல் காந்திக்கு நட்டா பதில் அளித்து கூறியதாவது:-
1. காங்கிரஸ் கட்சி அதன் செயல்களால் தேர்தல்களுக்குப் பிறகு தோல்வியடைகிறது.
2. சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக, அவர் வினோதமான சதித்திட்டங்களை உருவாக்கி கூக்குரலிடுகிறார்.
3. அனைத்து உண்மைகளையும் தரவுகளையும் புறக்கணிக்கிறார்.
4. எந்த ஆதாரமும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தை அவதூறு செய்கிறார்.
5. உண்மைகளுக்கு மேல் தலைப்புச் செய்திகளை எதிர்பார்க்கிறார். மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்ட போதிலும், அவர் வெட்கமின்றி பொய்களைப் பரப்பி வருகிறார். மேலும், பீகாரில் தோல்வி நிச்சயம் என்பதால் அவர் இதைச் செய்கிறார்.
ஜனநாயகத்திற்கு நாடகம் தேவையில்லை. உண்மை தேவை. தொடர்ச்சியான தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னர் காங்கிரஸ் தலைவர் தனது விரக்தியில் வினோதமான சதித்திட்டங்களை உருவாக்குகிறார்.
இவ்வாறு நட்டா பதில் அளித்துள்ளார்.
- டிரம்ப் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஆல்பா ஆண், ஆனால் நமது பிரதமர் அனைத்து ஆல்பா ஆண்களுக்கும் முதலாளி.
- மாண்புமிகு தேசியத் தலைவர் J.P. நட்டா என்னை அழைத்து பேசினார்.
கத்தாரில் நேற்று நடந்த வணிக மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப் இந்தியாவுடனான வணிக உறவு பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.
அதாவது, "இந்தியா எங்கள் (அமெரிக்க) பொருள்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க சம்மதித்துள்ளது" அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனர் டிம் குக் இடம் வலியுறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
"சீனாவில் ஆப்பிள் நிறுவனம் கட்டிய ஆலைகளுக்கு நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக உடன் இருந்தோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்'' என்று தனது உரையில் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாஜக எம்.பி.யும் பிரபல திரைப்பட நடிகையுமான கங்கனா ரனாவத், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து அதிபர் டிரம்ப் கூறிய கருத்துகளைக் விமர்சித்து அவரை பிரதமர் மோடியுடன்ஒப்பிட்டு தனது சமூக வலைதள பக்கங்களில் பதவு ஒன்றை வெளியிட்டார்.
அவரது பதிவில், "அவர் அமெரிக்காவின் அதிபராக இருக்கலாம், ஆனால் உலகின் மிகவும் பிரபலமான தலைவர் இந்தியப் பிரதமர். டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும்போது, இந்தியப் பிரதமர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். டிரம்ப் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஆல்பா ஆண், ஆனால் நமது பிரதமர் அனைத்து ஆல்பா ஆண்களுக்கும் முதலாளி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட பொறாமையா அல்லது இராஜதந்திர பாதுகாப்பின்மையா?" என்று பல விஷயங்களை அடுக்கினார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் J.P.நட்டா பதறியடித்து கங்கனா ரனாவத்துக்கு போன் போட்டு கண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது பதிவை நீக்கிய கங்கனா அதற்கு விளக்கப் பதவு ஒன்றையும் எக்ஸில் போட்டுள்ளார். அதில், "மாண்புமிகு தேசியத் தலைவர் J.P.நட்டா என்னை அழைத்து, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டாம் என்று டிரம்ப் கூறியது குறித்து நான் பதிவிட்ட ட்வீட்டை நீக்கச் சொன்னார்.
எனது தனிப்பட்ட கருத்தைப் பதிவிட்டதற்கு வருந்துகிறேன். அவரது அறிவுறுத்தலின்படி, அதை உடனடியாக இன்ஸ்டாகிராமிலிருந்தும் நீக்கிவிட்டேன். நன்றி," என்று விலாவரியாக விளக்கியுள்ளார்.
- பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தார்.
- அவரை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
சென்னை:
தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா மே 3-ம் தேதி சென்னைக்கு வருகை தரவுள்ளாா். அப்போது மாநில நிா்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தவுள்ளாா் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தார். அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், பா.ஜ.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.






