என் மலர்
இந்தியா

டிரம்ப்பை கலாய்த்து கங்கனா போட்ட பதிவு.. கடுப்பான நட்டா - என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
- டிரம்ப் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஆல்பா ஆண், ஆனால் நமது பிரதமர் அனைத்து ஆல்பா ஆண்களுக்கும் முதலாளி.
- மாண்புமிகு தேசியத் தலைவர் J.P. நட்டா என்னை அழைத்து பேசினார்.
கத்தாரில் நேற்று நடந்த வணிக மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப் இந்தியாவுடனான வணிக உறவு பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.
அதாவது, "இந்தியா எங்கள் (அமெரிக்க) பொருள்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க சம்மதித்துள்ளது" அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனர் டிம் குக் இடம் வலியுறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
"சீனாவில் ஆப்பிள் நிறுவனம் கட்டிய ஆலைகளுக்கு நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக உடன் இருந்தோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்'' என்று தனது உரையில் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாஜக எம்.பி.யும் பிரபல திரைப்பட நடிகையுமான கங்கனா ரனாவத், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து அதிபர் டிரம்ப் கூறிய கருத்துகளைக் விமர்சித்து அவரை பிரதமர் மோடியுடன்ஒப்பிட்டு தனது சமூக வலைதள பக்கங்களில் பதவு ஒன்றை வெளியிட்டார்.
அவரது பதிவில், "அவர் அமெரிக்காவின் அதிபராக இருக்கலாம், ஆனால் உலகின் மிகவும் பிரபலமான தலைவர் இந்தியப் பிரதமர். டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும்போது, இந்தியப் பிரதமர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். டிரம்ப் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஆல்பா ஆண், ஆனால் நமது பிரதமர் அனைத்து ஆல்பா ஆண்களுக்கும் முதலாளி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட பொறாமையா அல்லது இராஜதந்திர பாதுகாப்பின்மையா?" என்று பல விஷயங்களை அடுக்கினார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் J.P.நட்டா பதறியடித்து கங்கனா ரனாவத்துக்கு போன் போட்டு கண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது பதிவை நீக்கிய கங்கனா அதற்கு விளக்கப் பதவு ஒன்றையும் எக்ஸில் போட்டுள்ளார். அதில், "மாண்புமிகு தேசியத் தலைவர் J.P.நட்டா என்னை அழைத்து, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டாம் என்று டிரம்ப் கூறியது குறித்து நான் பதிவிட்ட ட்வீட்டை நீக்கச் சொன்னார்.
எனது தனிப்பட்ட கருத்தைப் பதிவிட்டதற்கு வருந்துகிறேன். அவரது அறிவுறுத்தலின்படி, அதை உடனடியாக இன்ஸ்டாகிராமிலிருந்தும் நீக்கிவிட்டேன். நன்றி," என்று விலாவரியாக விளக்கியுள்ளார்.






