என் மலர்

  நீங்கள் தேடியது "JP Nadda"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, பீகார் ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா மாநில தலைவர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.
  • ஒடிசா மாநில தலைவராக இருந்த சமீர் மோகண்டிக்கு பதில் மன்மோகன் சமால் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

  புதுடெல்லி:

  ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, பீகார் ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா மாநில தலைவர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பதில் புதிய தலைவர்களை பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நியமித்து உள்ளார்.

  அதன்படி, ராஜஸ்தான் மாநில தலைவராக இருந்து வந்த சதீஷ் பூனியாவுக்கு பதில் சி.பி. ஜோஷியும், ஒடிசா மாநில தலைவராக இருந்த சமீர் மோகண்டிக்கு பதில் மன்மோகன் சமாலும் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

  தலைநகர் டெல்லி மாநில தலைவராக வீரேந்திர சச்தேவாவும், பீகார் மாநில தலைவராக இருந்த சஞ்சய் ஜெய்ஸ்வால் மாற்றப்பட்டு சம்ராத் சவுத்திரியும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராகுல் காந்தி போன்ற தலைவர்களை (அரசியலில்) இருக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? என்று கேள்வி.
  • நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியப் பங்காற்றியுள்ளார்.

  நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சியே தவிர ஜனநாயகம் அல்ல என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார்.

  சமீபத்தில் லண்டன் சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக ஆட்சியின் கீழ் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக குறிப்பிட்டு பேசி இருந்தார்.

  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசியுள்ளார்.

  பொதக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

  காங்கிரஸ் கட்சியினர் இப்போது எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார்கள். ராகுல் காந்தி இங்கிலாந்து சென்று இந்தியாவின் இறையாண்மை மீது கேள்வி எழுப்புகிறார். அவர் ஜனநாயகம் இங்கே முடிந்துவிட்டது என்று கூறுகிறார். சமீபத்திய சட்டசபைத் தேர்தலின் போது நாகாலாந்தில் காங்கிரஸ் பூஜ்ஜியமும், மேகாலயாவில் 5 இடங்களும், திரிபுராவில் 3 இடங்களும் கிடைத்தன. ஆபத்தில் இருப்பது ஜனநாயகம் அல்ல, உங்கள் கட்சி (காங்கிரஸ்) ஆபத்தில் உள்ளது.

  இந்தியாவில் ஜனநாயகம் குறித்த பிரச்சினையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தலையீட்டை நாடியதாகக் கூறப்படும் ராகுல் காந்தி போன்ற தலைவர்களை (அரசியலில்) இருக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? அவர்களை வீட்டில் உட்கார வைக்க வேண்டும்.

  இந்திரா காந்தியின் தலைமையில் நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியது அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான்.

  நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியப் பங்காற்றியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் ஊழல், கமிஷன், கிரிமினல் மயமாக்கலில் ஈடுபட்டுள்ளனர். பிரித்து ஆட்சி செய்வதே அவர்களின் கொள்கை. ஆனால் பொறுப்பான தலைமையுடன் பிரதமர் அரசியலைத் தொடங்கிவிட்டார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து தான்.
  • வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது.

  கிருஷ்ணகிரி:

  கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் 9 மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகங்கள் காணொலி காட்சி மூலம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

  விழாவிற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஜே.பி. நட்டா பேசியதாவது:-

  வடமாநிலங்களில் தேர்தல் முடிந்து முடிவுகள் வந்து விட்டன. திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மேகாலயாவில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

  இதற்கு முக்கிய காரணம், மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டதே ஆகும்.

  தமிழகத்தில் பா.ஜனதா தொண்டர்களின் கடின உழைப்பால், தாமரை மலர்ந்தே தீரும். பா.ஜ.க.வால் மட்டுமே குடும்ப அரசியலை ஒழிக்க முடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

  தமிழ் மொழி, கலாசாரம், மக்கள் மீது மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் கற்று தரவேண்டும் என மோடி அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு முறையும் தனது உரையை தொடங்கும்போது, திருக்குறள், சுப்பிரமணிய பாரதியாரின் வரிகளை மேற்கொள் காட்டியே மோடி பேச தொடங்குகிறார். தமிழகத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.31,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மாநில கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் கட்சியாக தான் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் முதல் தமிழகம் வரை பல மாநிலங்களில் உள்ள கட்சிகளில் வாரிசுகளின் வளர்ச்சியை தான் மையமாக கொண்டுள்ளது.

  நான் ஏற்கனவே கூறியது போல், தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து தான். தற்போது தி.மு.க. குடும்ப அரசியல் என்பதற்கு, முதல்-அமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இன்னும் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என தெரியவில்லை. வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது. மக்கள் அரசியலால் பா.ஜனதா வளர்ந்து வருகிறது.

  தமிழகத்திற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சி பா.ஜ.க. குறிப்பாக தமிழக வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே கட்சி பா.ஜ.க. தான்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும் என நட்டா பேசினார்.
  • ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது.

  கிருஷ்ணகிரி:

  தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று வருகை தந்தார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து நட்டா பேசியதாவது:-

  தமிழகத்தில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும். பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை, மக்களுக்கான நேரடி ஆட்சியே பாஜக ஆட்சி. பாஜக கட்சி அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்.

  ஜம்மு- காஷ்மீர், உத்தர பிரதேசம் தொடங்கி தமிழகம் வரை மாநில கட்சிகள் குடும்ப கட்சிகளாக உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது. காங்கிரசின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றின.

  இவ்வாறு அவர் பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை வழிநெடுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
  • ஜே.பி.நட்டாவை வருகையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  கிருஷ்ணகிரி:

  கிருஷ்ணகிரியில் பா.ஜனதா கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க இன்று கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பெங்களூருரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் வந்து இறங்கினார்.

  பின்னர் அங்கிருந்து கார் மூலம் கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு அருகில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தை பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்.

  இதைதொடர்ந்து 75 அடி உயர கம்பத்தில் பா.ஜனதா கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

  தொடர்ந்து காணொலி காட்சி மூலம் தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.

  தொடர்ந்து பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது.

  இந்த விழாவிற்கு பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மத்திய மந்திரி எல்.முருகன் முன்னிலை வகித்தார்.

  இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பா. ஜனதா தலைவர் கே.எஸ்.ஜி. சிவபிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், செய்தி தொடர்பாளர் நரசிம்மன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் அன்பரசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

  ஜே.பி.நட்டாவை வருகையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் கடும் சோதனைக்கு பிறகே தொண்டர்களை உள்ளே அனுமதித்தனர்.

  தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை வழிநெடுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிருஷ்ணகிரியில்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தை மதியம் 3 மணி அளவில் திறந்து வைக்கிறார்.
  • காணொலி மூலம் தருமபுரி, திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

  கிருஷ்ணகிரி:

  கிருஷ்ணகிரிக்கு நாளை பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிறார்.

  பெங்களூருக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

  பின்னர், கிருஷ்ணகிரியில்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தை மதியம் 3 மணி அளவில் திறந்து வைக்கிறார்.

  தொடர்ந்து, காணொலி மூலம் தருமபுரி, திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

  இதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முருகன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜனதா மாநில மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய சங்கல்ப யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
  • விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

  பெங்களூரு :

  கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் சித்தராஜூ பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி எங்கள் கட்சி சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூரு கே.ஆர்.புராவில் நாளை(இன்று) நடைபெறும் விஜய சங்கல்ப யாத்திரையில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார்.

  தனி விமானம் மூலம் வரும் அவர் மாலை 5.20 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் கே.ஆர்.புரத்திற்கு வரும் அவர், அங்கு நடைபெறும் விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

  இதில் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள் ஆர்.அசோக், எம்.டி.பி.நாகராஜ், பைரதி பசவராஜ், சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

  இவ்வாறு சித்தராஜூ கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா வரும் 10ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.
  • பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

  சென்னை:

  சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றிருந்தது. இடைத்தேர்தலின்போது கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே சிறு சிறு மோதல்கள் நிலவி வந்தன.

  இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 10-ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார். கிருஷ்ணகிரி புதிய மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.

  இந்த வருகையின்போது வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க. உயர்மட்ட குழுவுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

  வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.- அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? தனித்துப் போட்டியிடுமா? மாற்று கட்சிகளுடன் கூட்டணி வைக்குமா? என்பது குறித்து ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது.
  • அனைத்து தரப்பினரின் வளர்ச்சியே பா.ஜனதாவின் மந்திரம்.

  விஜயாப்புரா :

  கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் களத்தில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி தலைவா்கள் பஸ் யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஜனதா தளம் (எஸ்) பஞ்சரத்னா யாத்திரையை மேற்கொண்டு வருகிறது. ஆளும் பா.ஜனதா ஏற்கனவே ஜனசங்கல்ப யாத்திரையை நடத்தியது. அதைத்தொடர்ந்து தற்போது விஜய சங்கல்ப யாத்திரையை நேற்று தொடங்கியது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று விஜயாப்புராவில் நடந்த கூட்டத்தில் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார்.

  கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜனதா ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, வெளிப்படைத்தன்மை, ஆட்சி நிர்வாகம், முழுமையான வளர்ச்சி என்றால் அது பா.ஜனதா என்று பொருள். மக்கள் விரோத, ஊழல், கமிஷன், சாதியவாதம், மக்களை பிளவுபடுத்துவது என்றால் அது காங்கிரஸ் என்று பொருள். அனைத்து தரப்பினரின் வளர்ச்சியே பா.ஜனதாவின் மந்திரம். பிரதமரின் கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது.

  கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு 782 கோடி டிஜிட்டல் பண பரிமாற்றம் நடந்துள்ளது. இதில் உலக அளவில் இந்தியாவின் பங்கு 40 சதவீதம் ஆகும். கடந்த 2014-ம் ஆண்டு வரை 350 கிலோ மீட்டர் நீளத்திற்கு தான் ஓ.எப்.சி. கேபிள் வயர்கள் பதிக்கப்பட்டு இருந்தன. அது தற்போது 2.78 லட்சம் கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியல், சாதி அரசியல் மற்றும் மண்டல அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் பா.ஜனதாவோ, அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மையமாககொண்டு செயல்படுகிறது.

  இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

  முன்னதாக அவர் சமீபத்தில் மரணம் அடைந்த மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமியின் ஆசிரமத்திற்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார். சிக்பள்ளாப்பூரில் நடைபெற்ற யாத்திரையில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கும், துமகூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் கலந்து கொண்டனர்.

  சிக்பள்ளாப்பூரில் பேசிய மேலிட பொறுப்பாளர் அருண்சிங், "கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸ் என்ன நல்லது செய்துள்ளனர். பி.எப்.ஐ. அமைப்பை மாநிலம் முழுவதும் விஸ்தரித்ததே சித்தராமையா ஆட்சியின் சாதனை ஆகும். அப்போது 32 இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர். இது தான் காங்கிரசின் சாதனையா?. சித்தராமையா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது. இரட்டை என்ஜின் அரசால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் இந்த முறை பா.ஜனதாவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர். மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையும்" என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறைகேடு செய்கிறது
  • மம்தா பானர்ஜி, அரசியல் சட்டத்துக்குட்பட்டு பணியாற்ற வேண்டும்.

  கொல்கத்தா:

  பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று மேற்கு வங்காளத்துக்கு சென்றார். பதவிக்காலம் நீ்ட்டிக்கப்பட்ட பிறகு அவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை. பேதுவதஹரி என்ற இடத்தில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் நட்டா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

  மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறுகிறது. இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. உண்மையில், 100 நாள் வேலைத்திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்றவற்றுக்கான மத்திய அரசு நிதியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறைகேடு செய்கிறது. அதுபற்றிய விசாரணை தொடங்கப்பட்டவுடன், மத்திய அரசு மீது வீண்பழி போடுகிறது.

  முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அரசியல் சட்டத்துக்குட்பட்டு பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால், மக்களின் கோபத்தை சந்திக்க நேரிடும். கொல்கத்தா ஐகோர்ட்டின் சில தீர்ப்புகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராததற்காக அவர்கள் போராடுவது வெட்கக்கேடு என்று அவர் பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo