என் மலர்
இந்தியா

ஷஹாபுதீன் மகனுக்கு சீட் வழங்கியது, ஆர்.ஜே.டி. காட்டு ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புவதை காட்டுகிறது: ஜே.பி. நட்டா
- லாலு பிரசாத் கட்சி பீகாரில் மீண்டும் காட்டு ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புகிறது.
- ஆர்.ஜே.டி. மற்றும் அதன் டிஎன்ஏ மாறவில்லை.
பீகார் மாநிலத்தில் வருகிற 6ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோசமான வானிலை காரணமாக சிவான் மன்றும் முசாபர்பூரில் நடைபெற்ற பேரணியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவால் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் காணொலி மூலம் பேசினார். அப்போது ஜே.பி. நட்டா பேசியதாவது:-
ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியின் கீழ் பீகார் காட்டு ராஜ்ஜியத்தை கண்டது. மாநிலத்தில் முழுமையான அராஜகம் நிலவியது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது. தொழிலதிபர்கள் கடத்தல் சம்பவம் அதிகரித்து கொண்டு வந்தது.
ஷஹாபுதீனின் பயங்கரத்தை சிவான் கண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை அவரது மகனை சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் நிறுத்தியுள்ளது. லாலு பிரசாத் கட்சி பீகாரில் மீண்டும் காட்டு ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புகிறது. ஆர்.ஜே.டி. மற்றும் அதன் டிஎன்ஏ மாறவில்லை. அதனால்தான் ஷஹாபுதீன் மகன் ஒசாமா ஷஹாப் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
இவ்வாறு ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.
மறைந்த முகமது ஷஹாபுதீன் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்.






