என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்காலில் பெங்காலிகளுக்கு பாதுகாப்பு இல்லை: ஜே.பி. நட்டா
    X

    பெங்காலில் பெங்காலிகளுக்கு பாதுகாப்பு இல்லை: ஜே.பி. நட்டா

    • மேற்கு வங்கத்திற்கு ஒரு மாற்றம் தேவை என்ற செய்தியை அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.
    • நாட்டிற்கே வழிகாட்டிய மேற்கு வங்க மாநிலம் இன்று சிக்கலில் இருக்கிறது.

    மத்திய அமைச்சரும், பாஜக முன்னாள் தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிட்டி பெங்காலி கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    தனக்கு முன்னதாக பேசியவர், மத்திய பிரதேசத்தில் பெங்காலி சமூகம் பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், பெங்காலி சமூகத்தினர் பெங்காலில் பாதுகாப்பாக இல்லை என்ற உண்மையை அவரது பேச்சு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது முரண்பாடானது.

    எனவே, மேற்கு வங்கத்திற்கு ஒரு மாற்றம் தேவை என்ற செய்தியை அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாட்டிற்கே வழிகாட்டிய மேற்கு வங்க மாநிலம் இன்று சிக்கலில் இருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் மேற்கு வங்க மாநிலத்துடன் துணை நிற்க வேண்டும். அதன் சிக்கல்களிலிருந்து நாம் அதைக் காப்பாற்ற வேண்டும்.

    மேற்கு வங்கம் மீண்டும் ஒரு புதிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. இத்தகைய தவறான ஆட்சியிலிருந்து வங்காளத்தை விடுவிப்பது நமது பொறுப்பு. இந்தச் செய்தியை நாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இன்று நாம் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வரும் நாட்களில், ஏப்ரல்-மே மாதங்களில், அந்த வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

    Next Story
    ×