என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: மயங்கி விழுந்த பாதுகாப்பு அதிகாரி.. சட்டை செய்யாமல் பேச்சை தொடர்ந்த நட்டா - காங்கிரஸ் விமர்சனம்
    X

    VIDEO: மயங்கி விழுந்த பாதுகாப்பு அதிகாரி.. சட்டை செய்யாமல் பேச்சை தொடர்ந்த நட்டா - காங்கிரஸ் விமர்சனம்

    • சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
    • மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

    குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்ற சர்தார் படேல் 150 ஆண்டு நிகழ்வில் மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா காங்கிரசை காரசாரமாக விமர்சித்துக்கொண்டிருந்தார். சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

    அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மேடைக்கு முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மற்ற அதிகாரிகள் தூக்கிச் சென்றனர். ஆனால் நட்டா இவை எதையும் பொருட்படுத்தாமல் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    இந்த வீடியோவை எக்ஸில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ், ஜே.பி. நட்டா பேசிக்கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் மேடை அருகே மயங்கி விழுந்துள்ளார்.

    இருப்பினும், நட்டா தனது பேச்சை நிறுத்தவில்லை .மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

    கண் முன்னால் ஒருவர் விழுந்ததைக் கூடப் பொருட்படுத்தாத பாஜக தலைவர்கள், பணவீக்கம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் போன்ற பொதுமக்களின் கஷ்டங்களைப் பற்றி எப்படி அக்கறை செலுத்துவார்கள்?

    அதிகாரம் மட்டுமே முக்கியம், பொதுமக்களின் கஷ்டங்கள் ஒரு பொருட்டல்ல என்பதே பாஜகவின் யதார்த்தம். பாஜக மனித நேயத்தை விற்றுவிட்டது என்று சாட்டியுள்ளது.

    இதற்கிடையே மயங்கி விழுந்தவர், நீண்ட நேரம் நின்றதால் சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ உதவிக்கு பின் அவர் உடல்நிலை சீரானதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×