என் மலர்
நீங்கள் தேடியது "மாநிலங்களவை"
- 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது.
- இந்த நாடுகடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம்.
2009 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா 18,822 இந்திய குடிமக்களை நாடு கடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் இந்த ஆண்டு மட்டும் 3,258 பேர் ஜனவரி முதல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த ஆண்டு திரும்பிய 3,258 பேரில், 2,032 பேர் வழக்கமான வணிக விமானங்களில் வந்தனர். மீதமுள்ள 1,226 பேர் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நாடு கடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் மாநில அரசுகள் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பஞ்சாப் மாநிலத்தில் இதுபோன்ற வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் NIA இதுவரை 27 மனித கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்து 169 பேரைக் கைது செய்துள்ளது என்றும் 132 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
- இந்தத் திட்டத்தின் கீழ் இன்னும் 0.79 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
- எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
2020 முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் 2.49 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் நிமுபன் ஜெயந்திபாய் பம்பானியா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், இந்தியாவில் தற்போது சுமார் 20 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கிறது. தற்போது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது
இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் இன்னும் 0.79 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளின் விளைவாக, 2020 மற்றும் 2025 க்கு இடையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தோராயமாக 2.49 கோடி ரேஷன் கார்டுகளை அகற்ற முடிந்துள்ளது.
போலி கார்டுகள், தகுதியற்ற பயனாளிகள், e-KYC முரண்பாடுகள், பயனாளிகளின் இறப்பு மற்றும் நிரந்தர இடம்பெயர்வு ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவை நீக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டுகளை தவறாக ரத்து செய்ததாக பயனாளிகளிடம் இருந்து அரசாங்கத்திற்கு எந்த குறிப்பிட்ட புகார்களும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலை 21 ராஜினாமா செய்தார்.
- பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.
14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 15வது ஜனாதிபதி ஆகியுள்ளார்.
அவர் பதியேற்ற பின் முதல் முறையாக அவர் தலைமையில் இன்று மாநிலங்களவை நடந்தது.
அவையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "உங்களுக்கு முன் இந்த அவையின் தலைவராக இருந்தவர், சிறிதும் எதிர்பாராமல் திடீரென விலகினார். பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.
அவருக்கு பிரவு உபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து வருந்துகிறேன்" என்றார்.
கார்கேவின் பேச்சால் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய கிரண் ரிஜிஜு, "புதிய தலைவருக்கு வாழ்த்து கூற வேண்டிய நேரத்தில் கார்கே, தேவையின்றி தன்கர் விவகாரத்தை எழுப்புகிறார்.
இதன்மூலம் அவர் முந்தைய அவைத் தலைவரை அவமதித்துள்ளார். தொடர்பில்லாத விஷயங்களை அவையில் எழுப்பாதீர்கள்" என்று தெரிவித்தார்.
- வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜக-விடம் இல்லை.
- அவர்களுக்கு 28 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே இருந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. 4 இடங்களுக்கான தேர்தலில் உமர் அப்துல்லாவின் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது.
பாஜகவுக்கு வெற்றி பெற 4 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவைப்பட்டது. அந்த 4 பேரும் எங்களுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்திருந்தனர். பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதால், 4 பேரும் பாஜக-வுக்கு வாக்களித்துவிட்டனர் என தோல்வியடைந்த தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் இம்ரான் நபி தார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் நபி தார் கூறுகையில் "வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜக-விடம் இல்லை. அவர்களுக்கு 28 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே இருந்தனர். அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் 32 வாக்குளை பெற்றனர்?. இதன்மூலம் குதிரை பேரம் நடந்துள்ளது தெளிவாகிறது" என்றனர்.
வெற்றி பெற்ற மற்ற வேட்பாளர் "காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட முடிவு நிராகரிக்கப்பட்டுள்ளது" என்பதை காட்டுகிறது" என்றார்.
- புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.
- எதிர்க்கட்சிகள் அமளிக்கிடையில் 3 நிமிடத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதிய வருமான வரி மசோதா2025 நேற்று மக்களவையில் நிறைவேறிய நிலையில் இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வருமான வரிச் சட்டம், 1961-க்குப் பதிலாக இந்தப் புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.
முன்னதாக கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதாவின் பழைய பாதிப்பு கடந்த வாரம் திரும்பபெறப்பட்டது.
31 எம்.பி.க்கள் அடங்கிய தோ்வுக் குழு, மசோதா தொடா்பாக வழங்கிய பரிந்துரைகளை சேர்த்து மசோதாவின் புதிய பதிப்பு நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகள் அமளிக்கிடையில் 3 நிமிடத்தில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்ட்டது.
இந்த மசோதா சட்டமான பின்னர், ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் செய்தார்.
- உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் தேவைக்கேற்ப மாற்றப்பட்டது.
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2025, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
விளையாட்டு வீரர்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் வகையிலான தேசிய விளையாட்டு நிர்வாக மசோதாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் பிற்பகல் 3 மணியளவில் செய்தார்.
பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால், ஆளும் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் தேவைக்கேற்ப, சுயாட்சியை வலுப்படுத்தும் விதமாக தாக்கல் செய்யப்பட்ட தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதாவும் நிரைவேற்றப்பட்டது.
இந்த மசோதாக்கள் தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளன. ஒப்புதலுக்கு பின் மசோதாக்கள் சட்டமாகும்.
- மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
- மேலும் 6 மாதங்களுக்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
புதுடெல்லி:
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 2-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலுக்கான காலக்கெடு ஆகஸ்டு 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதற்கிடையே, 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் முழுமையாக அமைதி திரும்பி இருக்கிறது. நிரந்தர அமைதியை ஏற்படுத்த இனக்குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
- நான் பேசிக் கொண்டிருக்கும்போது, சிலர் என் அருகே வந்து முழக்கம் எழுப்புகிறார்கள்.
- இது ஜனநாயகம் கிடையாது. அவையை நடத்துவதற்கான முறையான வழி கிடையாது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, "பாராளுமன்ற வளாகத்தில் CISF வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் அவர்களுடைய போராட்ட உரிமைய செயல்படுத்தும்போது, இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளது. இது விசித்திரமானது. அதிர்ச்சி அளிக்கிறது. பாராளுமன்றம் அதன் நிலையை குறைக்கிறதா?. இது மிகவும் ஆட்சேபனைக்குரியது" எனக் கூறியிருந்தார்.
இதற்கு ஜே.பி. நட்டா பதில் அளிக்கையில் "அவை செயல்பாடுகளுக்கு இடையூறு அளிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை தெளிவாக உருவாக்கிவிட்டீர்கள். நான் பேசிக் கொண்டிருக்கும்போது, சிலர் என் அருகே வந்து முழக்கம் எழுப்புகிறார்கள். இது ஜனநாயகம் கிடையாது. அவையை நடத்துவதற்கான முறையான வழி கிடையாது. நான் இங்கே எதிர்க்கட்சியாக பல வருடங்கள் இருந்துள்ளேன். இதனால் எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என என்னிடம் பயிற்சி எடுங்கள் என நான் சொல்லுவேன். ஏனென்றால், அடுத்த 40 வருடத்திற்கு எதிர்க்கட்சியாகத்தான் இருக்கப் போகிறீர்கள்.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
- பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டனர்.
- தேசிய பாதுகாப்பிற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை என கடுமையாக சாடினார் அமித்ஷா.
புதுடெல்லி:
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நெற்றியில் சுட்டுக்கொல்லப்பட வேண்டுமென மக்கள் நினைத்தனர். அதேபோல், பயங்கரவாதிகள் 3 பேரும் நெற்றியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பிற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால், அரசியலுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கிறது.
காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலை திருப்திப்படுத்தவே முக்கியத்துவம் கொடுக்கிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்துவிட்டது. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பா.ஜ.க. அரசு மீட்கும் என தெரிவித்தார்.
- ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது கார்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார்.
- நட்டா உடனடியாக தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கார்கே கோரினார்.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எதிராக மாநிலங்களவையில் தெரிவித்த கருத்துக்கள் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தன.
இறுதியில், ஜே.பி. நட்டா தனது கருத்துக்களை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்டதால் சர்ச்சை தணிந்தது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது கார்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார். இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.
கார்கேவின் உரைக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் தனது மன சமநிலையை இழந்து வருவதாக ஜே.பி. நட்டா தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மோடி குறித்த கார்கேவின் கருத்துக்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நட்டா கோரினார்.
கார்கே குறித்த நட்டாவின் கருத்துக்களுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நட்டா உடனடியாக தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கார்கே கோரினார்.
இதற்க்கு பதிலளித்த நட்டா, தான் தனது கருத்துக்களை வாபஸ் பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.
இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகவும் பிரபலமான தலைவர் என்றும், கார்கே தனது நிலையை மீறி அத்தகைய மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும் நட்டா வருத்தம் தெரிவித்தார்.
- ஜூன் 2-ந்தேதி மேல்சபை எம்.பி.க்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
- கமல்ஹாசன் தமிழில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மேல் சபையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களில் இருந்து சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வொரு மாநிலத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, எம்.எல்.ஏ.க்களின் எண் ணிக்கை அடிப்படையில் எம்.பி.க்களின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல் சபையில் 18 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 18 எம்.பி.க்களில் வில்சன், சண்முகம், அப்துல்லா (3 பேரும் தி.மு.க.), சந்திரசேகரன் (அ.தி.மு.க.), வைகோ (ம.தி.மு.க.), அன்புமணி (பா.ம.க.) ஆகிய 6 எம்.பி.க்களின் பதவி காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய கடந்த மாதம் தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படி ஜூன் 2-ந்தேதி மேல்சபை எம்.பி.க்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 12-ந்தேதி அந்த மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. போட்டி ஏற்படாததால் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் பாராளுமன்ற மேல்சபைக்கு ஏகமனதாக தேர்வாகி இருக்கிறார்கள்.
அவர்களில் வில்சனுக்கு தி.மு.க. மீண்டும் வாய்ப்பு கொடுத்து எம்.பி.யாக்கி இருக்கிறது. தி.மு.க. சார்பில் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க. ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மேல்சபை எம்.பி.யாகி உள்ளார். அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் எம்.பி. பதவிக்கு நிறுத்தப்பட்டு தேர்வாகி உள்ளனர். இந்த 6 எம்.பி.க்க ளும் போட்டியின்றி தேர்வானதை கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் புதிதாக தேர்வான மேல்சபை எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நேற்றும், இன்றும் நடந்தது. இன்று மேல்சபையில் தமிழக எம்.பி.க்கள் வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், கமல்ஹாசன், இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் பதவி ஏற்றனர்.
கமல்ஹாசன் தமிழில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.
- மக்களவை கூடிய 6 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் பாராளுமன்றம் முடங்கியது. ஆபரேசன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பி வருகிறார்கள்.
இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியது. அப்போது பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.
இவ்விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சில உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதியில் நின்று பதாகைகளை காட்டினர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களை இருக்கைகளுக்கு செல்லுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். விதிகளின்படி பிரச்சினைகளை எழுப்ப அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
கோஷமிடுவதும், பதாகைகளைக் காண்பிப்பதும் சபையின் கண்ணியத்திற்கு ஏற்றதல்ல. இதுபோன்ற செயல்கள் என்ன மாதிரியான செய்தியை அனுப்பும் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும் என்று சபாநாயகர் கூறினார்.
ஆனால், சபாநாயகரின் கோரிக்கையை ஏற்காததால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதையடுத்து சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மக்களவை கூடிய 6 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 4-வது நாளாக பாராளுமன்ற மக்களவை முடங்கியது.
மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சபை துணைத் தலைவர் ஹரி வன்ஷ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கிடையே மேல்-சபையிலும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஏற்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.






