என் மலர்
நீங்கள் தேடியது "Petrol"
- பால், தயிர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- 100-க்கும் மேற்ப்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட பொது செயலாளர் அன்பு வீரமணி, நகர தலைவர்கள் எழிலரசன், சதீஸ், வட்டார தலைவர்கள் வடுகநாதன், சங்கரவடிவேல், பாஸ்கர், ஆர்டிஜ பிரிவு தலைவர் ரமேஷ், மாவட்ட துணை தலைவர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் தியாகராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வெங்கடேன், ஸ்டீபன், இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் ரோஜர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் அஜித்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பால், தயிர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்ப்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டனர்.
- பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டது.
- டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது மகாராஷ்டிரா அரசு.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல் மந்திரியாக பொறுப்பேற்ற ஏக்நாத் ஷிண்டே பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3 ரூபாயும் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், மக்களின் நலன் மீது அரசுக்கு உள்ள அக்கறையின் ஒரு பகுதி இது என தெரிவித்தார்.
- பட்டாசுக்கடை, பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
- தடையின்மைச்சான்று பெற தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பித்து பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கான தடையின்மைச்சான்று பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பம் செய்ததின் பேரில் தடையின்மை சான்று வழங்கப்பட்டு வந்தது.
தற்போது சென்னை முதன்மைச் செயலர் , வருவாய் நிர்வாக ஆணையரின் 7.6.2022-ம் நாளிட்ட கடிதத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவைகளுக்கான தடையின்மைச்சான்று பெற, தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் காலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவைகளுக்கான தடையின்மைச்சான்று பெற தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த சாதனை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளது.
- எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இலக்கு எட்டப்பட்டது.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், எரிபொருள் இறக்குமதியை குறைத்தல், அன்னியச் செலாவணியைச் சேமிப்பது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் உள்நாட்டு விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு, எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.
2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை குறிக்கும் இலக்காகக் கருதப்பட்டது எனினும் மத்திய அரசின் நடவடிக்கையால் 20 % எத்தனால் கலப்பு இலக்கு முன்கூட்டியே 2025-26 ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக நடப்பாண்டு நவம்பர் மாதத்திற்குள் பெட்ரோலுடன் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு 5 மாதங்களுக்கு முன்பே எட்டப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாக, காலக்கெடுவை விட முன்னதாகவே இலக்கு எட்டப்பட்டுள்ளது,
இந்த சாதனை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியது மட்டுமின்றி, ரூ.41,500 கோடிக்கு மேல் அந்நிய செலாவணி சேமிப்பை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.