என் மலர்
நீங்கள் தேடியது "மதுபானங்கள்"
- இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சிகரெட்டுக்கு 70 முதல் 80 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
- பெட்ரோல், மதுபானங்கள் ஜி.எஸ்.டி.க்குள் வந்தால் விலை கணிசமாக குறையும்.
சென்னை:
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது. ''ஒரே நாடு ஒரே வரி'' என்ற கோஷத்துடன் அறிமுகமானாலும், 2 முக்கிய பொருட்கள் இன்னும் அதற்குள் சேர்க்கப்படவில்லை. அவை பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள். இந்த 2 பொருட்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் தனித்தனி வரிகள் காரணமாக, மக்கள் அசல் விலையைவிட பலமடங்கு அதிகமாக செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ரூ.40 தான். ஆனால் அதற்கு மத்திய அரசின் சுங்கவரி ரூ.20 முதல் ரூ.22 வரையும், மாநில அரசுகளின் வாட் வரி ரூ.18 முதல் ரூ.25 வரையும், டீலர் கமிஷன் ரூ.3 முதல் ரூ.4 வரையும் சேர்க்கப்படுகிறது. இதனால் அதன் இறுதி விலை மாநிலங்களுக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதாவது அசல் விலை ரூ.40 இருந்தும், மக்களுக்கு 150 சதவீதம் கூடுதலாக கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதனை மக்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனால் மதுபானங்களின் விலை மற்றும் அதில் போடப்படும் வரிகளை கேட்டால் தலைசுற்றும். உதாரணமாக, 750 மில்லி லிட்டர் பீர் பாட்டிலின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.180. ஆனால் அதன் அசல் விலை வெறும் ரூ.40 தான். அதாவது, கலால் வரி, சிறப்பு கட்டணம், வாட் வரி ஆகியவை அனைத்தும் சேர்ந்து தான் ரூ.180-க்கு விற்கப்படுகிறது. இதன் பொருள் அசல் விலையை விட 350 சதவீதம் கூடுதலாக மக்கள் செலுத்த வேண்டியுள்ளது.
மதுபானங்களில் மிக கொடுமையானது, வெளிநாட்டு தரத்தில் தயாரிக்கப்படும் இந்திய மதுபானங்களின் விலை. அதில் சாதாரண வகையின் அசல் விலை ரூ.52 தான், ஆனால் விற்பனை விலை ரூ.583. நடுத்தர வகையின் அசல் விலை ரூ.58 தான், ஆனால் விற்பனை விலை ரூ.708. பிரீமியம் வகையின் அசல் விலை ரூ.207 தான், ஆனால் விற்பனை விலை ரூ.1,292 ஆகிறது. இதன் பொருள் இந்த மதுபான வகைகளில் குறைந்தது 500 சதவீதம் முதல் 1,100 சதவீதம் வரை கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சிகரெட்டுக்கு 70 முதல் 80 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோலுக்கு 60 சதவீதம் மட்டுமே வரி. சில நாடுகளில் ஆடம்பர கார்கள் இறக்குமதிக்கு கூட அதிகபட்சம் 200 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மதுபானங்களுக்கு விதிக்கப்படும் 500 முதல் 1,000 சதவீதம் வரை வரி, உலகிலேயே அதிகம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.
பெட்ரோல், மதுபானங்கள் ஜி.எஸ்.டி.க்குள் வந்தால் விலை கணிசமாக குறையும். ஆனால் அதே நேரத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் மதுபான விற்பனையிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. பெட்ரோல் டீசல் விலைகளும் மத்திய, மாநில அரசுகளின் மிகப்பெரிய வருவாய் மூலாதாரம். இதுவே இன்றுவரை இந்த இரண்டு பொருட்களையும் ஜி.எஸ்.டி.க்கு வெளியே வைப்பதற்கான முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
ஆனால் தற்போதைய வரி சீர்திருத்தங்களில் சிகரெட், புகையிலை போன்ற பொருட்கள் ஏற்கனவே ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்பட்டு 40 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இதேபோல எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்களையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது நிபுணர்களின் வலியுறுத்தலாக உள்ளது. மக்கள் கொடுக்கும் பணம், அந்த பொருட்களின் தரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். ரூ.40 தரமுள்ள பொருளை ரூ.180-க்கு வரி என்ற பெயரில் வாங்கச் செய்வது தவறு. உயர்தர மதுபானங்களுக்கு கூடுதல் விலை வைப்பது சரியானது. ஏழைகள் அருந்தும் குறைந்த விலை மதுபானங்களுக்கு இவ்வளவு அதிக வரி விதிப்பது நியாயமற்றது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
ஆனால் அரசின் நிலைமை வேறு. விலை குறைந்தால் மக்கள் அதிகம் குடிப்பார்கள் என்பதே அவர்களின் வாதம். இது ஒரு வகை சரியான விளக்கம் என்றாலும், அரசு உண்மையில் சொல்ல வேண்டியது குடிக்கவே கூடாது என்பதே. ஆனால் நடைமுறையில் அவர்கள் சொல்வது ''நீ குடி, எனக்கு வரி கொடுத்துவிட்டு குடி'' என்ற நிலையாக இருக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர்.
- தக்காளி வோட்கா ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் விற்கப்படுகிறது.
- நறுமணம் வீசும் மதுபானங்கள் வர இருப்பது மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மது பிரியர்கள் குடித்து விட்டு சென்றால் போலீசிலும், வீட்டிலும் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். இதனை தடுக்க தற்போது வாசனை வீசக்கூடிய மதுபானங்கள் அறிமுகமாகி உள்ளது.
பொதுவாக மதுபானம் திராட்சை, பார்லி போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. தற்போது, புதிய பரிசோதனைகள் மது உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.
பூக்களிலிருந்து ஜின் மற்றும் பழங்களிலிருந்து மதுபானம் தயாரிக்க தொழிற்சாலைகள் போட்டியிடுகின்றன.
இதுவரை, நீங்கள் மது அருந்தும்போது, நீங்கள் மதுவின் வாசனையை உணருவீர்கள். ஆனால் இனிமேல், நீங்கள் மது அருந்தும்போது கூட, பூக்கள் மற்றும் பழங்களின் வாசனையை உணருவீர்கள்.
மல்லிகை, லாவெண்டர், ரோஜா, மாண்டரின், செர்ரி போன்ற பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் ஜின் மற்றும் மாம்பழம், அன்னாசி, பலாப்பழம், தக்காளி போன்ற பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆல்கஹால் சந்தையில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடிக்க உள்ளது.
ஒரு கோப்பையில் மல்லிகைப் பூக்களின் வாசனையும், மற்றொரு கோப்பையில் மாம்பழத்தின் சுவையும் பார்களில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கும்..
இந்த வகை ஆல்கஹால் ஏற்கனவே இங்கிலாந்து, ஜப்பான், ஸ்காட்லாந்து மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விரைவில் தெலுங்கானா மாநிலத்தில் அதன் சுவைகளை விநியோகிக்க உற்பத்தியாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மாம்பழம், அன்னாசிப்பழம், தர்பூசணி, பலாப்பழம், தக்காளி, பீட்ரூட், கேரட் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மதுபானங்கள் சந்தையில் பிரபலமடைந்து வருகின்றன. தக்காளி வோட்கா ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் விற்கப்படுகிறது.
இதன் சிறப்பு என்னவென்றால், இது தக்காளியின் நறுமணத்தை இழக்காது மற்றும் ஆல்கஹால் வாசனையை ஏற்படுத்தாது.
மாம்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் மதுபானம் இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்தில் விற்கப்படுகிறது. அன்னாசி மதுபானம் பிரேசில் மற்றும் ஹவாயில் பிரபலமானது. பலாப்பழ மதுபானம் கேரளா மற்றும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தர்பூசணியிலிருந்து தயாரிக்கப்படும் மதுபானம் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நன்கு அறியப்பட்டதாகும். கோடையில் அங்கு அதிகம் விற்பனையாகும் மதுபான பிராண்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
அது மட்டுமல்லாமல், பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் மதுபானம் அவற்றின் இயற்கையான நறுமணத்தை இழக்காமல் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை மதுபானங்களை அருந்தினால் குடிமகன்கள் சிக்கமாட்டார்கள். நறுமணம் வீசும் மதுபானங்கள் வர இருப்பது மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த மாதம் மது பானங்கள் கழகம் புதிய சப்ளையர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும் வெளியிட்டது.
- மதுபானங்களின் அடிப்படை விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
திருப்பதி:
தெலுங்கானாவில் உள்ள மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல. ஒரே நேரத்தில் 37 புதிய வகை மதுபானங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
இதற்காக, கடந்த மாதம் மது பானங்கள் கழகம் புதிய சப்ளையர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும் வெளியிட்டது.
அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் மொத்தம் 37 பிராண்டுகள் விண்ணப்பித்தன. இவற்றில் 15 வெளிநாட்டு மதுபான பிராண்டுகள், மேலும் 15 உள்நாட்டு பிராண்டுகள், மேலும் 7 பீர் வகைகள் புதிதாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மதுபானங்களின் அடிப்படை விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசாங்கம் ஏற்கனவே பீர் விலையை உயர்த்தியுள்ளது.
நடப்பு பட்ஜெட்டில் கலால் துறையிலிருந்து ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ள நிலையில், அடுத்த பட்ஜெட்டில் வருவாய் இலக்கு ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்தால், மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளனர்.
- வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் பேசினார்.
- உலக சமூகம் அமெரிக்காவை பல காலமாக ஏமாற்றி வருகிறது என்றார்.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதையடுத்து இந்தியா மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது, அதிபர் டிரம்ப் நியாயமான, சமநிலையான வர்த்தக நடைமுறை களை விரும்புகிறார்.
கனடாவில் அமெரிக்க வெண்ணை பொருட்களுக்கு 300 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் அமெரிக்க மதுபானங்களுக்கு 150 சதவீத வரி விதிக்கிறார்கள். ஜப்பானை பொறுத்தவரை அரிசிக்கு 700 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
துரதிருஷ்டவசமாக, கடந்த பல தசாப்தங்களாக கனடா நம்மை மிகவும் நியாயமாக நடத்தவில்லை. உலக சமூகம் அமெரிக்காவை பல காலமாக ஏமாற்றி வருகிறது என்றார்.
- நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க புதுவையில் இருந்து மதுபானங்கள் வாங்கி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 34). இவர் புதியதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்ய உள்ளார். இதையடுத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பார்ட்டி வைக்க முடிவு செய்து, புதுவைக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கினார். அதனை ஒரு கட்டைப்பையில் போட்டுக்கொண்டு மீண்டும் வீடு திரும்பினார். இவர் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இறங்கி, கிராமத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். போலீசாரை கண்டவுடன் கோவிந்தசாமி பதட்டமாக அங்கிருந்து வேகமாக நடந்தார். இதனைக் கண்ட போலீசார் அவரை மடக்கிப் பிடித்து பையை சோதனையிட்டனர். அதில் இருந்து புதுவை மதுபானங்களை கைப்பற்றி வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல உளுந்தூ ர்பேட்டை கார்நேசன் வீதியைச் சேர்ந்த சாந்தா (60), மணலூர் சத்தியராஜ் (29) ஆகியோர் மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். உளுந்தூர்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம், மதுபானம், கஞ்சா விற்பனைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக கலைவாணர் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
- ராயகிரி பஸ் நிறுத்தம் அருகே மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
சிவகிரி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக சங்கரன்கோவில் கலைவாணர் கலைக் குழு வினரின் மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் பிலோமினா, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், தலையாரி அழகராஜா, தலைமை காவலர் ஸ்ரீதர கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்று ராயகிரி பஸ் நிறுத்தம் அருகே மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன், செயல் அலுவலர் சுதா, துணைத் தலைவர் குறிஞ்சி மகேஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
- விலை உயர்வை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும்.
சென்னை:
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை விரைவில் குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயரும் என தெரிகிறது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.

அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மூலப்பொருட்களின் விலை உயர்வால் மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று மதுபான ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அரசுக்கும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மது வகைகள் விலைகள் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுபான கடைக்கு மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டது.
- பாதுபாட்டில்களை தூக்கி சென்ற அனைவரும் ஓடிவிட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மதுபானங்கள் கொண்டு சென்ற வாகனம் வேகத்தடையில் ஏறிய போது மதுபானங்கள் அடங்கிய பெட்டிகள் கீழே விழுந்தது.
அப்போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பலரும் மதுபானங்களை அள்ளிக்கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மதுபான கடைக்கு மதுபானங்கள் அடங்கிய 110 பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. அப்போதுதான் 30 பெட்டிகள் கீழே விழுந்துள்ளது.
மதுபானங்கள் கீழே விழுந்ததை கண்டுபிடித்த ஓட்டுநர் வாகனத்தை திருப்பி வருவதற்குள் பாதுபாட்டில்களை தூக்கி சென்ற அனைவரும் ஓடிவிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண் காணிப்பு பணியை மேற் கொண்டு உள்ளனர்.
- போலி மதுபானங்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண் காணிப்பு பணியை மேற் கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் களியக்கா விளை வழியாக கேரளா விற்கு மதுபானங்கள் கடத்து வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மார்த்தாண்டம் இன்ஸ்பெக் டர் செந்தில்வேல் குமார் தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் தலைமையிலான போலீ சார் நேற்று இரவு களியக்கா விளை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கேரளா பதிவெண் கொண்ட வாகனம் மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மினி டெம்போவில் கேன் களில் 350 லிட்டர் மதுபானங்கள் இருந்தது தெரிய வந்தது.மேலும் பாட்டில்களில் 150 லிட்டர் மதுபானங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. காலி பாட்டில்கள், பாட்டில் மூடியை அடைக்க கூடிய மிஷின், பாட்டிலில் ஒட்டக்கூடிய லேபிள் ஆகியவையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கேரளா மாநிலம் பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்த அல் அமீன் (வயது 32), சாரோட்டு கோணத்தைச் சேர்ந்த பிரசாத் (28), காட்டாதுறை கவியலூர் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் மார்த்தாண்டம் மதுவிலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். போலி மதுபானங்களை கடத்தி சென்ற மினி டெம்போவும் பறிமுதல் செய்யப்பட்டது. போலி மதுபானங்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுபான கடத்தல் வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.






