search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 லிட்டர் போலி மதுபானங்கள் பறிமுதல் - 3 பேர் கைது
    X

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 லிட்டர் போலி மதுபானங்கள் பறிமுதல் - 3 பேர் கைது

    • மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண் காணிப்பு பணியை மேற் கொண்டு உள்ளனர்.
    • போலி மதுபானங்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண் காணிப்பு பணியை மேற் கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் களியக்கா விளை வழியாக கேரளா விற்கு மதுபானங்கள் கடத்து வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மார்த்தாண்டம் இன்ஸ்பெக் டர் செந்தில்வேல் குமார் தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் தலைமையிலான போலீ சார் நேற்று இரவு களியக்கா விளை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கேரளா பதிவெண் கொண்ட வாகனம் மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மினி டெம்போவில் கேன் களில் 350 லிட்டர் மதுபானங்கள் இருந்தது தெரிய வந்தது.மேலும் பாட்டில்களில் 150 லிட்டர் மதுபானங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. காலி பாட்டில்கள், பாட்டில் மூடியை அடைக்க கூடிய மிஷின், பாட்டிலில் ஒட்டக்கூடிய லேபிள் ஆகியவையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கேரளா மாநிலம் பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்த அல் அமீன் (வயது 32), சாரோட்டு கோணத்தைச் சேர்ந்த பிரசாத் (28), காட்டாதுறை கவியலூர் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரையும் மார்த்தாண்டம் மதுவிலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். போலி மதுபானங்களை கடத்தி சென்ற மினி டெம்போவும் பறிமுதல் செய்யப்பட்டது. போலி மதுபானங்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுபான கடத்தல் வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×