என் மலர்
நீங்கள் தேடியது "பெட்ரோல்"
- இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சிகரெட்டுக்கு 70 முதல் 80 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
- பெட்ரோல், மதுபானங்கள் ஜி.எஸ்.டி.க்குள் வந்தால் விலை கணிசமாக குறையும்.
சென்னை:
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது. ''ஒரே நாடு ஒரே வரி'' என்ற கோஷத்துடன் அறிமுகமானாலும், 2 முக்கிய பொருட்கள் இன்னும் அதற்குள் சேர்க்கப்படவில்லை. அவை பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள். இந்த 2 பொருட்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் தனித்தனி வரிகள் காரணமாக, மக்கள் அசல் விலையைவிட பலமடங்கு அதிகமாக செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ரூ.40 தான். ஆனால் அதற்கு மத்திய அரசின் சுங்கவரி ரூ.20 முதல் ரூ.22 வரையும், மாநில அரசுகளின் வாட் வரி ரூ.18 முதல் ரூ.25 வரையும், டீலர் கமிஷன் ரூ.3 முதல் ரூ.4 வரையும் சேர்க்கப்படுகிறது. இதனால் அதன் இறுதி விலை மாநிலங்களுக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதாவது அசல் விலை ரூ.40 இருந்தும், மக்களுக்கு 150 சதவீதம் கூடுதலாக கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதனை மக்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனால் மதுபானங்களின் விலை மற்றும் அதில் போடப்படும் வரிகளை கேட்டால் தலைசுற்றும். உதாரணமாக, 750 மில்லி லிட்டர் பீர் பாட்டிலின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.180. ஆனால் அதன் அசல் விலை வெறும் ரூ.40 தான். அதாவது, கலால் வரி, சிறப்பு கட்டணம், வாட் வரி ஆகியவை அனைத்தும் சேர்ந்து தான் ரூ.180-க்கு விற்கப்படுகிறது. இதன் பொருள் அசல் விலையை விட 350 சதவீதம் கூடுதலாக மக்கள் செலுத்த வேண்டியுள்ளது.
மதுபானங்களில் மிக கொடுமையானது, வெளிநாட்டு தரத்தில் தயாரிக்கப்படும் இந்திய மதுபானங்களின் விலை. அதில் சாதாரண வகையின் அசல் விலை ரூ.52 தான், ஆனால் விற்பனை விலை ரூ.583. நடுத்தர வகையின் அசல் விலை ரூ.58 தான், ஆனால் விற்பனை விலை ரூ.708. பிரீமியம் வகையின் அசல் விலை ரூ.207 தான், ஆனால் விற்பனை விலை ரூ.1,292 ஆகிறது. இதன் பொருள் இந்த மதுபான வகைகளில் குறைந்தது 500 சதவீதம் முதல் 1,100 சதவீதம் வரை கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சிகரெட்டுக்கு 70 முதல் 80 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோலுக்கு 60 சதவீதம் மட்டுமே வரி. சில நாடுகளில் ஆடம்பர கார்கள் இறக்குமதிக்கு கூட அதிகபட்சம் 200 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மதுபானங்களுக்கு விதிக்கப்படும் 500 முதல் 1,000 சதவீதம் வரை வரி, உலகிலேயே அதிகம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.
பெட்ரோல், மதுபானங்கள் ஜி.எஸ்.டி.க்குள் வந்தால் விலை கணிசமாக குறையும். ஆனால் அதே நேரத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் மதுபான விற்பனையிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. பெட்ரோல் டீசல் விலைகளும் மத்திய, மாநில அரசுகளின் மிகப்பெரிய வருவாய் மூலாதாரம். இதுவே இன்றுவரை இந்த இரண்டு பொருட்களையும் ஜி.எஸ்.டி.க்கு வெளியே வைப்பதற்கான முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
ஆனால் தற்போதைய வரி சீர்திருத்தங்களில் சிகரெட், புகையிலை போன்ற பொருட்கள் ஏற்கனவே ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்பட்டு 40 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இதேபோல எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்களையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது நிபுணர்களின் வலியுறுத்தலாக உள்ளது. மக்கள் கொடுக்கும் பணம், அந்த பொருட்களின் தரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். ரூ.40 தரமுள்ள பொருளை ரூ.180-க்கு வரி என்ற பெயரில் வாங்கச் செய்வது தவறு. உயர்தர மதுபானங்களுக்கு கூடுதல் விலை வைப்பது சரியானது. ஏழைகள் அருந்தும் குறைந்த விலை மதுபானங்களுக்கு இவ்வளவு அதிக வரி விதிப்பது நியாயமற்றது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
ஆனால் அரசின் நிலைமை வேறு. விலை குறைந்தால் மக்கள் அதிகம் குடிப்பார்கள் என்பதே அவர்களின் வாதம். இது ஒரு வகை சரியான விளக்கம் என்றாலும், அரசு உண்மையில் சொல்ல வேண்டியது குடிக்கவே கூடாது என்பதே. ஆனால் நடைமுறையில் அவர்கள் சொல்வது ''நீ குடி, எனக்கு வரி கொடுத்துவிட்டு குடி'' என்ற நிலையாக இருக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர்.
- பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுவதால் வாகன மைலேஜ் குறைந்துவிட்டதாக புகார்
- டீசலுடன் எத்தனாலை கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கிய நிலையில், 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது.
ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மில்லி லிட்டர் பெட்ரோல் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்கப்படுவதால் (E 20) வாகன மைலேஜ் குறைந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரி எரிசக்தி மாநாட்டின் உரையாற்றிய நிதின் கட்கரி, "டீசலுடன் எத்தனாலை கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததால், தற்போது டீசலுடன் ஐசோபியூடனாலை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பிற்கு எதிரான கருத்துக்கள், தனக்கு எதிராக பணம் கொடுத்து திட்டமிட்டு நடக்கும் பரப்புரை என விமர்சித்தார்.
- டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
- பழைய CNG வாகனங்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் ஜூலை 1 முதல் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் RC-ஐ சரிபார்த்த பின்னரே பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவை மீறி இயக்கப்படும் 2 சக்கர வாகங்களுக்கு 5000 ரூபாயும் 4 சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாயும் அபராதம் விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தற்போது, 15 ஆண்டுகளுக்கும் மேலான CNG வாகனங்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 80 பழைய வாகனங்களைப் பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பாக பெட்ரோல் பங்குகள் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளன.
- டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
- பழைய வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களும் இன்று முதல் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் RC-ஐ சரிபார்த்த பின்னரே பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவை மீறி இயக்கப்படும் 2 சக்கர வாகங்களுக்கு 5000 ரூபாயும் 4 சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாயும் அபராதம் விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தற்போது, 15 ஆண்டுகளுக்கும் மேலான CNG வாகனங்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
- ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது.
- இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது
ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் முடிவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "ஹார்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் முடிவு பொருளாதார தற்கொலைக்கு சமம். இது மற்ற நாடுகளின் பொருளாதாரங்களையும் பாதிக்கும். சீன அரசாங்கம் இது குறித்து ஈரானிடம் பேசவேண்டும். ஏனென்றால் அவர்கள் தங்கள் எண்ணெய் தேவைக்காக ஹார்முஸ் நீரிணையை பெரிதும் நம்பியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
- ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது.
- இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
ஈரானின் இந்த நடவடிக்கையால் ரஷியா அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது.
- ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது
ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி விலகும் போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.9.20 ஆக இருந்தது
- தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் கலால் வரி ரூபாய் 21.90 ஆக உயர்ந்திருக்கிறது.
பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு குறைக்காதது ஏன்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க. அரசு வரிக்கு மேல் வரி பலமுனைகளில் விதித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்களை நேரடியாக பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாள்தோறும் மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. எந்த பொருளை வாங்கினாலும் ஜி.எஸ்.டி. வரியிலிருந்து தப்ப முடியாது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெட்ரோல், டீசல் விலையும் குறைவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடைமுறையாக இருந்தது. கச்சா எண்ணெய் 110 டாலராக இருந்த போது மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மானியங்களை வழங்கி சுமையை ஏற்றுக் கொண்டது.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு சமீபத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 2 கலால் வரி விதித்திருக்கிறது. இந்த கலால் வரி உயர்வினால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 11 முதல் 13 வரையிலும், ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 8 முதல் 10 வரையும் விலை உயர்வு ஏற்படும் என்று கூறப்பட்டது.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 19.90 ஆக இருந்து ரூபாய் 21.90 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் கலால் வரி ரூபாய் 15.80 இல் இருந்து ரூபாய் 17.80 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல, சமையல் எரிவாயு விலையும் சிலிண்டருக்கு ரூபாய் 50 உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விலை உயர்வை நுகர்வோர் மீது திணிக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. கலால் வரி உயர்வினால் ஒன்றிய அரசின் வருமானம் பலமடங்கு கூடியிருக்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி விலகும் போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 9.20 ஆக இருந்தது. டீசல் மீதான கலால் வரி ரூபாய் 3.46 ஆக இருந்தது. ஆனால், இன்றைக்கு கலால் வரி உயர்வு பெட்ரோலுக்கு 357 சதவிகிதமும், டீசலுக்கு 54 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி அரசின் வரி பயங்கரவாதத்திற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. பெட்ரோல், டீசல் வரி உயர்வினால் மக்கள் பயன்பாட்டில் உள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
2014 மே மாதம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் ரூபாய் 9,265. இன்று ரூபாய் 5596 மட்டுமே. அதாவது, 2014 ஆம் ஆண்டை கணக்கிடும் போது கச்சா எண்ணெய் விலை 40 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், 2014 இல் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 71.41 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 55.49 ஆகவும் இருந்தது. இன்று அதே பெட்ரோல் விலை ரூபாய் 94.77, ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 87.67 ஆகவும் உயர்ந்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 40 சதவிகிதம் குறைந்திருக்கும் போது பெட்ரோல், டீசல் விலையை குறைத்து சாமானிய மக்கள் பயனடைகிற வகையில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காமல் மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றி வருகிறது. பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதிப்பின் காரணமாக 2014 இல் இருந்து 2025 வரை பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மூலம் கடந்த 11 ஆண்டுகளில் ரூபாய் 39.54 லட்சம் கோடியை வரியாக வசூலித்து ஒன்றிய அரசு தனது கஜானாவை நிரப்பியிருக்கிறது. இதைவிட அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.
- பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாகும்.
- சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது
இந்தியாவில் 2024-25ம் நிதியாண்டில் டீசல் கார்களைக் காட்டிலும் சிஎன்ஜி கார்களையே மக்கள் அதிகம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நிதியாண்டில் 7,87,724 சிஎன்ஜி கார்களும், 7,36,508 டீசல் கார்களும் விற்பனையாகியுள்ளன.
கடந்த நிதியாண்டில் பயணிகள் கார் விற்பனையில் 15 சதவீதமாக இருந்த சிஎன்ஜி கார் விற்பனை இப்போது 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாக உள்ளதால் பலரும் சிஎன்ஜி கார்களை விரும்புகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
மொத்த சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்வு.
- 2008ம் ஆண்டுக்கு பிறகு உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது கடுமையாக சரிந்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது.
விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது.
2008ம் ஆண்டுக்கு பிறகு உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது கடுமையாக சரிந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.5 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 59.16 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
- அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
- வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலோனார் முறையாக ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரை பறிகொடுக்கும் நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்தும் வகையில் போலீசார் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை தீவிரப்படுத்த திருவள்ளூர் மாவட்ட போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
அதன்படி மாவட்ட காவல்துறை மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வருகிற ஏப். 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்பதை நடைமுறைப்படுத்த உள்ளனர்.
இதனை தீவிரமாக செயல்படுத்த பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் கூறியதாவது:-
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்து விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம்.
முதற்கட்டமாக தற்போது திருவள்ளூர் நகர் பகுதிகளில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு வாசகம் ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் பங்க்குகளுக்கு பெட்ரோல் போட வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
- தொழிற்சங்க மையத்தின் 15-வது மாநில மாநாடு,
அரியலூர்
தமிழ்நாடு இந்திய தொழிற்சங்க மையத்தின் 15-வது மாநில மாநாடு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி சி.கோவிந்தராஜன் நினைவு ஜோதி பிரசார பயண வாகனத்திற்கு ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் தமிழ்நாடு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை பாதியாக குறைக்க வேண்டும். முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது. நேரடியாக உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாகுபாடு இன்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமானம், ஆட்டோ, தையல் உள்ளிட்ட அனைத்து நலவாரிய பணப் பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கக்கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் தெரிவித்து இந்திய தொழிற்சங்க மைய நிர்வாகிகள் பேசினர். இதில் மாநிலத் துணைத் தலைவர் கருப்பையா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்."






