என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலால் வரி"

    • சிகரெட்டின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ரூ.2.10 முதல் ரூ.8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது.
    • கூடுதல் கலால் வரி விதிப்பின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் சந்தை 68 சதவீதம்வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1 நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தது. அப்போது முதல் சிகரெட், புகையிலை பொருட்கள், பான் மசாலா உள்ளிட்டவை பாவ பொருட்கள் என வகைப்படுத்தப்பட்டு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு (2025) இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புகையிலை உள்ளிட்ட பாவ பொருட்களுக்கான வரி திருத்தியமைக்கப்பட்டது. அதன்படி சிகரெட், புகையிலை மீதான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் நடப்பு ஆண்டு (2026) பிப்ரவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் சிகரெட், புகையிலைப் பொருட்கள், பான் மசாலா மீது விதிக்கப்பட்ட கூடுதல் கலால் வரியுடன் கூடிய 40 சதவீத ஜி.எஸ்.டி. வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இப்புதிய முறைப்படி பாக்கெட்டில் குறிப்பிடப்பட்ட சில்லறை விற்பனை விலையை அடிப்படையாகக் கொண்டு ஜி.எஸ்.டி. வரி கணக்கிடப்படவுள்ளது.

    பான் மசாலா உற்பத்தியாளர்கள், இன்று முதல் சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் சட்டத்தின் கீழ் புதிய பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உற்பத்தி நிறுவனங்கள், அனைத்து பேக்கிங் எந்திரங்களையும் உள்ளடக்கும் வகையில் செயல்படும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும். அந்த காணொலிப் பதிவுகளை குறைந்தது 24 மாதங்கள் பாதுகாக்க வேண்டும்.

    சிகரெட்டின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ரூ.2.10 முதல் ரூ.8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது. 65 மி.மீ. நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு ரூ.2.10 வரையிலும், 70 மி.மீ நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு 4 ரூபாயும், 75 மி.மீ நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு 5.4 ரூபாய் அளவிலும் உயர்த்தப்படுகிறது. இது புதிதாக அமல்படுத்தப்படவுள்ள 40 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்த்து விதிக்கப்படும்.

    மென்று தின்னும் புகையிலைக்கு 82 சதவீதம் கலால் வரியும் குட்காவுக்கு 91 சதவீதம் கலால் வரியும் பான் மசாலாவுக்கு 88 சதவீதம் கலால் வரிவிதிக்கப்பட உள்ளது. கிரிசில் ரேட்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, கூடுதல் கலால் வரி விதிப்பின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் சந்தை 68 சதவீதம்வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது
    • அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6-8% அளவு குறையக்கூடும் .

    புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி நாளை (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, மற்றும் பான் மசாலா மீதான சுகாதார செஸ், அதிகபட்சமாக 40% ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால், நாளை முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது. சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ரூ.2.05-8.50 வரை விலை உயர்கிறது.

    கூடுதல் கலால் வரிகளால், அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6-8% அளவு குறையக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

    மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா வாசனை கொண்ட புகையிலை மற்றும் குட்காவிற்கு முறையே 82% மற்றும் 91% கலால் வரி விதிக்கப்படுகிறது.

    • கடுகு எண்ணெய் விலை 25% அதிகரித்து லிட்டருக்கு ரூ.170 க்கும் அதிகமாக உள்ளது.
    • பாமாயிலின் சராசரி சில்லறை விலை லிட்டருக்கு 34% உயர்ந்தது.

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25% முதல் 34% வரை உயர்ந்துள்ளது.

    ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட, மே 28 அன்று பாமாயிலின் சராசரி சில்லறை விலை லிட்டருக்கு 34% உயர்ந்து ரூ.134 ஆக இருந்தது. அதே நேரத்தில் சூரியகாந்தி எண்ணெய் விலை 30% அதிகமாக இருந்தது.

    சோயா எண்ணெய் உள்நாட்டு சந்தையில் 18% உயர்ந்து லிட்டருக்கு ரூ.147க்கு விற்கப்பட்டது. கடுகு எண்ணெய் விலை சராசரியாக 25% அதிகரித்து லிட்டருக்கு ரூ.170 க்கும் அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோயா பீன்ஸ் ஆயில் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையை சரிகட்ட இறக்குமதிக்கான கலால் வரியை 10% குறைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று முதல் இந்த வரிக்குறைப்பு அமலுக்கு வந்தது.

    • கலால் வரி ரூ 2 என்ற அளவில் ஒன்றிய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
    • சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்திருப்பதால் அதன் பலன்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனப் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

    இதன்மூலம் ஒன்றிய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடைகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உரிமையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நிலைமை இவ்வாறு இருக்க பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு கலால் வரி ரூ 2 என்ற அளவில் ஒன்றிய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாமான்ய மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவர்கள்.

    ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்கவேண்டும். ஏற்றப்பட்ட கலால் வரியை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்திருப்பதால் அதன் பலன்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.

    • விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்வு.
    • 2008ம் ஆண்டுக்கு பிறகு உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது கடுமையாக சரிந்தது.

    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது.

    விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது.

    2008ம் ஆண்டுக்கு பிறகு உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது கடுமையாக சரிந்தது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.5 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 59.16 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ×