என் மலர்
நீங்கள் தேடியது "smokers"
- நாளை முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது
- அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6-8% அளவு குறையக்கூடும் .
புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி நாளை (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, மற்றும் பான் மசாலா மீதான சுகாதார செஸ், அதிகபட்சமாக 40% ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், நாளை முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது. சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ரூ.2.05-8.50 வரை விலை உயர்கிறது.
கூடுதல் கலால் வரிகளால், அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6-8% அளவு குறையக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா வாசனை கொண்ட புகையிலை மற்றும் குட்காவிற்கு முறையே 82% மற்றும் 91% கலால் வரி விதிக்கப்படுகிறது.
- சிகரெட்டுகளுக்கு 1,000 குச்சிகளுக்கு ரூ.200-735 வரை இருந்த கலால் வரி ரூ.2,700–11,000 ஆக உயரும்
- புகையிலை மீதான வரிகள் 25% முதல் 100% வரை நான்கு மடங்கு அதிகரிக்கும்
மத்திய அரசின் கலால் சட்டத்திருத்தத்தால், ஒரு சிகரெட் விலை ரூ.18-ல் இருந்து ரூ.72ஆகவும், புகையிலை மீதான வரிகள் 25% முதல் 100% ஆகவும் உயர வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய கலால் (திருத்த) மசோதா, 2025 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அது சட்டமாக மாறும்பட்சத்தில் இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலைகளின் விலைகள் உயரும். நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அறிமுகப்படுத்திய இந்த மசோதா, சிகரெட் மற்றும் சுருட்டுகள் முதல் ஹூக்கா மற்றும் மெல்லும் புகையிலை வரை பல்வேறு புகையிலை பொருட்களின் மீதான கலால் வரிகளை திருத்துகிறது. அதாவது இந்தப் பொருட்கள் மீதான கலால் மற்றும் வீத வரியை உயர்த்துகிறது.
இந்தத் திருத்தத்தின் கீழ், சிகரெட்டுகளுக்கு 1,000 குச்சிகளுக்கு ரூ.200-735 வரை இருந்த கலால் வரி ரூ.2,700–11,000 ஆக உயரும், இது வகை மற்றும் நீளத்தைப் பொறுத்து இருக்கும். மெல்லும் புகையிலை மீதான வரிகள் 25% முதல் 100% வரை நான்கு மடங்கு அதிகரிக்கும், ஹூக்கா புகையிலை 25% முதல் 40% வரை உயரும்.
மேலும் புகைபிடிக்க பயன்படுத்தும் குழாய்கள் மற்றும் புகையிலைக் கூறுகளின் கலவைகளுக்கான வரி ஐந்து மடங்கு அதிகரிக்கும், அதாவது 60% முதல் 300% வரை அதிகரிக்கும். இன்று ரூ.18 விலையில் உள்ள ஒரு சிகரெட்டின் விலை விரைவில் ரூ.72 ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- டீக்கடைகளில் புகை பிடிப்பவர்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- இனிமேலாவது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமா?
மதுரை
பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் அது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இது தொடர்பாக எந்த விழிப்புணர்வு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக மதுரையில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முக்கியமாக டீக்கடை களில் புகைப்பிடிப்பவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஹாயாக நின்று புகையை ஊதி தள்ளுகின்றனர். இதனால் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் உள்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீ சார் கண்டும் காணாமல் இருக்கின்றனர். பஸ் மற்றும் ரெயில்களிலும் ரகசியமாக சிலர் புகை பிடிக்கிறார்கள்.
புகை பழக்கத்தால் புற்று நோய் வரும் என்பது அனை வருக்கும் தெரிந்ததே. அந்தப் புகையை சுவாசித்தால் மற்றவர்களுக்கும் புற்றுநோய் வரும் என்பது விஞ்ஞான பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை.
பொது இடத்தில் புகை பிடிப்பதால் அந்தப் பழக்கம் இல்லாதவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இது தொடர்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இனி மேலாவது பொது இடத்தில் புகை பிடிப்பதை தடுக்க இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமா?






