என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலால் வரி உயர்வு"

    • சிகரெட்டின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ரூ.2.10 முதல் ரூ.8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது.
    • கூடுதல் கலால் வரி விதிப்பின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் சந்தை 68 சதவீதம்வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1 நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தது. அப்போது முதல் சிகரெட், புகையிலை பொருட்கள், பான் மசாலா உள்ளிட்டவை பாவ பொருட்கள் என வகைப்படுத்தப்பட்டு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு (2025) இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புகையிலை உள்ளிட்ட பாவ பொருட்களுக்கான வரி திருத்தியமைக்கப்பட்டது. அதன்படி சிகரெட், புகையிலை மீதான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் நடப்பு ஆண்டு (2026) பிப்ரவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் சிகரெட், புகையிலைப் பொருட்கள், பான் மசாலா மீது விதிக்கப்பட்ட கூடுதல் கலால் வரியுடன் கூடிய 40 சதவீத ஜி.எஸ்.டி. வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இப்புதிய முறைப்படி பாக்கெட்டில் குறிப்பிடப்பட்ட சில்லறை விற்பனை விலையை அடிப்படையாகக் கொண்டு ஜி.எஸ்.டி. வரி கணக்கிடப்படவுள்ளது.

    பான் மசாலா உற்பத்தியாளர்கள், இன்று முதல் சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் சட்டத்தின் கீழ் புதிய பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உற்பத்தி நிறுவனங்கள், அனைத்து பேக்கிங் எந்திரங்களையும் உள்ளடக்கும் வகையில் செயல்படும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும். அந்த காணொலிப் பதிவுகளை குறைந்தது 24 மாதங்கள் பாதுகாக்க வேண்டும்.

    சிகரெட்டின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ரூ.2.10 முதல் ரூ.8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது. 65 மி.மீ. நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு ரூ.2.10 வரையிலும், 70 மி.மீ நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு 4 ரூபாயும், 75 மி.மீ நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு 5.4 ரூபாய் அளவிலும் உயர்த்தப்படுகிறது. இது புதிதாக அமல்படுத்தப்படவுள்ள 40 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்த்து விதிக்கப்படும்.

    மென்று தின்னும் புகையிலைக்கு 82 சதவீதம் கலால் வரியும் குட்காவுக்கு 91 சதவீதம் கலால் வரியும் பான் மசாலாவுக்கு 88 சதவீதம் கலால் வரிவிதிக்கப்பட உள்ளது. கிரிசில் ரேட்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, கூடுதல் கலால் வரி விதிப்பின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் சந்தை 68 சதவீதம்வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் மதுபானங்களுக்கான கலால் வரி 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. #LiquorPriceHike
    புதுச்சேரி:

    புதுவையில் 450-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்த மதுபான கடைகளில் 1800-க்கும் அதிகமான மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களை விட பல்வேறு விதமான மதுபான வகைகள் கிடைப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும் புதுவைக்கு மது பிரியர்கள் வருகை அதிக அளவில் உள்ளது.

    இதனால் புதுவை மாநிலத்தில் வரி வருவாய் கலால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மதுபானங்களுக்கு கலால் வரி, கூடுதல் கலால் வரி, ஹாலோ கிராம் கட்டணம் ஆகியவை வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகள் விலை குறைவானது. சாதாரணமானது, நடுத்தரமானது, விலை உயர்ந்தது என 4 பிரிவுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் புதுவை கலால்துறை திடீரென வரியை உயர்த்தி உள்ளனர். இதன்படி குவாட்டர் ஒரு கேஸ் (12 பாட்டில்கள்) ரூ.399 வரை உள்ள மதுபானங்களுக்கு ரூ.75 ஆக இருந்த கலால் வரி ரூ.93 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.



    நடுத்தர, விலை உயர்ந்த பிரிவுகள் என இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரு கேஸ் ரூ.400 முதல் ரூ.600-க்கு மேலான மதுபானங்களுக்கு ரூ.100 ஆக இருந்த கலால்வரி ரூ.110 ஆகவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கலால்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, புதுவையில் மது பானங்களுக்கான கலால் வரி 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு மாதந்தோறும் ரூ.2 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். கலால் வரி உயர்வு காரணமாக குறைந்த மற்றும் சாதாரண விலை மது பாட்டில் குவாட்டருக்கு ரூ.5ம், முழு பாட்டில் ரூ.15 வரையிலும் விலை உயர வாய்ப்புள்ளது.

    உயர்ந்த விலை முழு பாட்டில் ரூ.20 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர். #LiquorPriceHike
    ×