என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு
    X

    புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

    புதுவையில் மதுபானங்களுக்கான கலால் வரி 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. #LiquorPriceHike
    புதுச்சேரி:

    புதுவையில் 450-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்த மதுபான கடைகளில் 1800-க்கும் அதிகமான மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களை விட பல்வேறு விதமான மதுபான வகைகள் கிடைப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும் புதுவைக்கு மது பிரியர்கள் வருகை அதிக அளவில் உள்ளது.

    இதனால் புதுவை மாநிலத்தில் வரி வருவாய் கலால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மதுபானங்களுக்கு கலால் வரி, கூடுதல் கலால் வரி, ஹாலோ கிராம் கட்டணம் ஆகியவை வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகள் விலை குறைவானது. சாதாரணமானது, நடுத்தரமானது, விலை உயர்ந்தது என 4 பிரிவுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் புதுவை கலால்துறை திடீரென வரியை உயர்த்தி உள்ளனர். இதன்படி குவாட்டர் ஒரு கேஸ் (12 பாட்டில்கள்) ரூ.399 வரை உள்ள மதுபானங்களுக்கு ரூ.75 ஆக இருந்த கலால் வரி ரூ.93 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.



    நடுத்தர, விலை உயர்ந்த பிரிவுகள் என இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரு கேஸ் ரூ.400 முதல் ரூ.600-க்கு மேலான மதுபானங்களுக்கு ரூ.100 ஆக இருந்த கலால்வரி ரூ.110 ஆகவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கலால்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, புதுவையில் மது பானங்களுக்கான கலால் வரி 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு மாதந்தோறும் ரூ.2 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். கலால் வரி உயர்வு காரணமாக குறைந்த மற்றும் சாதாரண விலை மது பாட்டில் குவாட்டருக்கு ரூ.5ம், முழு பாட்டில் ரூ.15 வரையிலும் விலை உயர வாய்ப்புள்ளது.

    உயர்ந்த விலை முழு பாட்டில் ரூ.20 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர். #LiquorPriceHike
    Next Story
    ×