என் மலர்
நீங்கள் தேடியது "Maruti Suzki"
- புதிய மாருதி சுசுகி விக்டோரிஸ் காரில் 1.5 லிட்டர், NA பெட்ரோல் எஞ்சின், மைல்ட்-ஹைப்ரிட், ஸ்டிராங்-ஹைப்ரிட் மற்றும் CNG வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- இந்த யூனிட் லிட்டருக்கு 28.65 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. புதிய விக்டோரிஸ் மாடலின் அறிமுக விலை ரூ. 10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இந்த மாடல் BNCAP மற்றும் GNCAP சோதனைகள் இரண்டிலும் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
வெளிப்புறத்தில், மாருதி சுசுகி விக்டோரிஸ் புதிய எல்இடி டிஆர்எல்-கள், புதிய முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள், முழு எல்இடி லைட்கள், புதிய 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், டெயில்கேட்டில் எல்இடி லைட் பார் மற்றும் சில்வர் நிற ரூஃப் ரெயில்களைப் பெறுகிறது. இந்த கார் பத்து விதமான நிறங்கள் மற்றும் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய விக்டோரிஸ் மாடலின் உள்புறத்தில், லெவல் 2 ADAS சூட், புதிய 10.1-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டால்பி அட்மோஸ் மியூசிக் சிஸ்டம், வென்டிலேட்டெட் முன்புற இருக்கைகள், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் உடன் இயங்கும் டெயில்கேட், அண்டர்பாடி CNG டேங்க், பனோரமிக் சன்ரூஃப், 60W மற்றும் 45W USB டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், HUD, சரவுண்ட் லைட்கள் மற்றும் 10.25-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

புதிய மாருதி சுசுகி விக்டோரிஸ் காரில் 1.5 லிட்டர், NA பெட்ரோல் எஞ்சின், மைல்ட்-ஹைப்ரிட், ஸ்டிராங்-ஹைப்ரிட் மற்றும் CNG வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் e-CVT யூனிட்கள் அடங்கும். இந்த யூனிட் லிட்டருக்கு 28.65 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
இந்திய சந்தையில் மாருதி விக்டோரிஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், டாடா ஹரியர், ஃபோக்ஸ்வாகன் டைகுன், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷக் மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.
மாருதி சுசுகி விக்டோரிஸ் மாடலின் 1.5 MT LXi வேரியண்ட் விலை ரூ. 10.50 லட்சம் என துவங்கி, டாப் எண்ட் மாருதி விக்டோரிஸ் 1.5 e-CVT ZXi+ (O) விலை ரூ. 19.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாகும்.
- சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது
இந்தியாவில் 2024-25ம் நிதியாண்டில் டீசல் கார்களைக் காட்டிலும் சிஎன்ஜி கார்களையே மக்கள் அதிகம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நிதியாண்டில் 7,87,724 சிஎன்ஜி கார்களும், 7,36,508 டீசல் கார்களும் விற்பனையாகியுள்ளன.
கடந்த நிதியாண்டில் பயணிகள் கார் விற்பனையில் 15 சதவீதமாக இருந்த சிஎன்ஜி கார் விற்பனை இப்போது 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாக உள்ளதால் பலரும் சிஎன்ஜி கார்களை விரும்புகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
மொத்த சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வீணாக அழ வேண்டாம். காவல் துறையில் புகார் அளித்தால், கார் திரும்ப கிடைக்காது.
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் திருடப்படும் சம்பவங்கள் அதன் உரிமையாளருக்கு தலைவலியை ஏற்படுத்தி விடும். எனினும், சமீபத்தில் காரை திருடிய நபர், அதன் உரிமையாளருக்கு அசத்தலாக தகவல் ஒன்றை சுவற்றில் எழுதி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மார்ச் 20, 2023 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட மாருதி பிரெஸ்ஸா ZXi மாடலை நபர் திருடியுள்ளார். அப்துல் அசிஸ் என்ற நபரின் காரை திருடிய மர்ம நபர், கார் நிறுத்தப்பட்டு இருந்த வீட்டின் சுவரில் ஆறுதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "உங்களது கார் மூன்று நாட்களில் திரும்ப கிடைத்துவிடும். வீணாக அழ வேண்டாம். காவல் துறையில் புகார் அளித்தால், கார் திரும்ப கிடைக்காது. இதனை வேறு யாரிடமும் கூற வேண்டாம். டென்ஷன் ஆகாதீர்கள்," என்று எழுதியுள்ளார்.
எனினும், இந்த சம்பவம் குறித்து காரின் உரிமையாளர் காவல் துறையில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுவரில் அந்த வாசகத்தை எழுதியது யார் என்பதை கண்டறிய தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர்.
கார் திருடப்பட்ட சம்பவம் அசாம் மாநிலத்தின் தாராங் மாவட்டத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி அதிகாலை அரங்கேறி இருக்கிறது.
Photo Courtesy: Rushlane
- தற்போது 600,000 யூனிட் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்.
- கடந்த ஆண்டு, நாங்கள் விற்பனை செய்த ஒவ்வொரு நான்காவது வாகனமும் சிஎன்ஜி மாடலாக இருந்தது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் 33% சிஎன்ஜி மாடல்கள் என அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தற்போது 13 சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் சிஎன்ஜி மாடலும் அடங்கும்.
மாருதியின் சிஎன்ஜி போர்ட்ஃபோலியோவில் ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, ஈகோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, எர்டிகா, பலேனோ, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா மற்றும் எக்ஸ்எல்6 போன்ற மாடல்கள் உள்ளன.
மாருதி சுசுகியின் மூத்த செயல் அதிகாரி பார்த்தோ பானர்ஜி, சிஎன்ஜி கார்கள் இப்போது எங்களின் ஒட்டுமொத்த விற்பனையில் 33% ஆகும். அதாவது நாங்கள் விற்கும் ஒவ்வொரு மூன்றாவது கார் சிஎன்ஜி மாடல் என்று தெரிவித்தார்.
மாருதி தனது சிஎன்ஜி கார் விற்பனையை ஆண்டுக்கு ஆண்டு 25%-க்கும் அதிகமாக அதிகரித்து FY25 இல் 600,000 யூனிட்களாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது.

"கடந்த ஆண்டு, நாங்கள் விற்பனை செய்த ஒவ்வொரு நான்காவது வாகனமும் சிஎன்ஜி மாடலாக இருந்தது. FY24 இல் நாங்கள் 477,000 யூனிட் சிஎன்ஜி வாகனங்களை விற்றோம். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் FY25 வரை 221,000 யூனிட்களை விற்றோம். தற்போது 600,000 யூனிட் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்.
மாருதியின் ஒட்டுமொத்த கார் விற்பனையில் அதிகம் விற்பனையாகும் சிஎன்ஜி மாடல்களில் எர்டிகா, டிசையர், வேகன்ஆர் மற்றும் ஈகோ ஆகியவை அடங்கும். எர்டிகா சிஎன்ஜி 63%, டிசையர் 57%, வேகன்ஆர் 47% மற்றும் ஈகோ 48% யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.






