என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CNG"

    • வழக்கமான கார்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் கார்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.
    • வருடாந்திர கணக்கில், சிஎன்ஜி கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களே சிக்கனம் நிறைந்தவையாக தோன்றுகின்றன.

    பெட்ரோல், டீசல் கார்கள் பழைய டிரெண்ட் ஆகி விட்டன. ஆட்டோமொபைல் துறையில் இப்போதைக்கு, எலெக்ட்ரிக் கார்களும், சிஎன்ஜி கார்களும் தான் அதிகமாக விற்பனையாகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி விலை குறைப்பு நடவடிக்கைகளில், கார் வாங்க திட்டமிடுபவர்கள், பெட்ரோல்-டீசல் மாடல்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி கார்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் அதில் நிறைய நன்மைகளும் இருக்கின்றன.

    கார்களில் எலெக்ட்ரிக் சிறந்ததா, இல்லை சிஎன்ஜி சிறந்ததா? என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்...

    சிஎன்ஜி

    'கம்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ்' என்பதன் சுருக்கம்தான் சிஎன்ஜி இயல்பான கார்களில், கூடுதலாக கியாஸ் சிலிண்டர்களை பொருத்தி, சிஎன்ஜி கியாஸ் நிரப்பி காரை இயக்குவார்கள்.

    எலெக்ட்ரிக்

    மின்சாரத்தில் இயங்கும் கார் இது. வழக்கமான கார்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் கார்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.

    இயக்கத்திறன்

    எலெக்ட்ரிக்-சிஎன்ஜி-யை விட பெட்ரோல், டீசல் என்ஜின் கார்களை விடவும் எலெக்ட்ரிக் கார்களின் இயக்கத்திறன் அசாத்தியமானது. பெட்ரோல் கார்களை விடவும் மின்னல் வேக இயக்கத்திறனை எலெக்ட்ரிக் கார்கள் பெற்றிருக்கின்றன.

    சிஎன்ஜி - எலெக்ட்ரிக் கார்களை விட, கொஞ்சம் குறைவான இயக்கத்திறனே சிஎன்ஜி கார்களுக்கு உண்டு. இருப்பினும், நெடுஞ்சாலை, மலைப்பாதைகளில் சூப்பராக இயங்கும்.

    எரிபொருள்

    எலெக்ட்ரிக்:

    எலெக்ட்ரிக் கார்களுக்கு தேவையான மின்சக்தியை வழங்கும் இ-சார்ஜிங் ஸ்டேஷன்கள் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. நகர பயன்பாட்டில் ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களில் இ-சார்ஜிங் வசதி இருப்பதால், தைரியமாக வாங்கலாம். ஆனால் நெடுஞ்சாலை பயணங்களை மட்டும், கவனமாக திட்டுமிட்டு பயணிக்க வேண்டும்.

    (சார்ஜ் நிரப்ப 30 நிமிடம் தொடங்கி, சில மணி நேரங்கள் ஆகலாம்)

    சிஎன்ஜி:

    சிஎன்ஜி நிரப்பும் ஸ்டேஷன்கள் சென்னையில் நிறைய காணப்படுகிறது. சென்னையை தாண்டினால் நெடுஞ்சாலைகளிலும் நிறைந்திருக்கிறது. அப்படியே, சிஎன்ஜி கியாஸ் தீர்ந்து விட்டாலும் கவலையில்லை, பெட்ரோல் வசதியை தேர்ந்தெடுத்து, பெட்ரோலில் பயணிக்கலாம். இருவிதமான வாய்ப்புகளை, சிஎன்ஜி கார் வழங்குகிறது.

    (பெட்ரோல் நிரப்புவதுபோல சில நிமிடங்களில், சுலபமாக கியாஸ் நிரப்பலாம்)

    சிக்கனம்

    வருடாந்திர கணக்கில், சிஎன்ஜி கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களே சிக்கனம் நிறைந்தவையாக தோன்றுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் சிஎன்ஜி-யை விட குறைவான செலவிலேயே இயங்குகிறது. எலெக்ட்ரிக் காரின் முழு சார்ஜிற்கும் சுமார் 200 ரூபாய் செலவாகலாம். ஆனால் அதன் மூலம் 100 கிலோமீட்டர்கள் பயணம் செய்யலாம். அதுவே, சிஎன்ஜி-யில் 200 ரூபாயில் 60 கிலோமீட்டர்கள் தூரம் மட்டுமே பயணிக்க முடியும்.

    விலை

    கார்களின் விலை நிலவரப்படி, எலெக்ட்ரிக் கார்களை விட சிஎன்ஜி கார்கள் மிக மிக குறைவு. பட்ஜெட் விலையில் கூட சிஎன்ஜி கார்களை வாங்கலாம். உதாரணத்திற்கு, ரூ.10 லட்சத்திலேயே சிஎன்ஜி சாதனத்துடன் அசத்தலான செடான் காரை வாங்கிவிட முடியும். அதுவே எலெக்ட்ரிக் ரகமாக இருந்தால், செடான் மாடலை வாங்க குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் தேவைப்படும். அதனால் விலை நிலவரப்படி, பட்ஜெட் பிரியர்களின் தேர்வாக இருப்பது, சிஎன்ஜி தான்.

    • சி.என்.ஜி. என்பது கம்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ் எனப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடியது.
    • பெட்ரோல் விலையைவிட கொஞ்சம் குறைவானது.

    ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்களுடன் எலெக்ட்ரிக், சி.என்.ஜி. கார்களும் விற்பனையாகின்றன. எலெக்ட்ரிக் மோகம் அதிகரித்திருந்தாலும், சி.என்.ஜி. மாடல் கார்களின் விற்பனை கொஞ்சம் மந்தமாகவே இருக்கின்றன.

    உண்மையில், சி.என்.ஜி. கார்களை நம்பி தைரியமாக வாங்கலாம். ஏனெனில் சி.என்.ஜி. என்பது கம்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ் எனப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடியது. இது சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்றது. பெட்ரோல் விலையைவிட, கொஞ்சம் குறைவானது. அதிக மைலேஜ் தரக்கூடியது.

    அதனால் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மட்டுமல்ல, சி.என்.ஜி. கார்களையும் துணிந்து வாங்கலாம். செயல்பாடுகளும் திருப்திகரமாக இருக்கும்.

    • பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாகும்.
    • சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது

    இந்தியாவில் 2024-25ம் நிதியாண்டில் டீசல் கார்களைக் காட்டிலும் சிஎன்ஜி கார்களையே மக்கள் அதிகம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த நிதியாண்டில் 7,87,724 சிஎன்ஜி கார்களும், 7,36,508 டீசல் கார்களும் விற்பனையாகியுள்ளன.

    கடந்த நிதியாண்டில் பயணிகள் கார் விற்பனையில் 15 சதவீதமாக இருந்த சிஎன்ஜி கார் விற்பனை இப்போது 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாக உள்ளதால் பலரும் சிஎன்ஜி கார்களை விரும்புகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

    மொத்த சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பணியின்போது இறந்த பணியாளர்களின் 49 வாரிசுதாரர்களுக்கு (ஒரு ஓட்டுநர் மற்றம் 48 நடத்துநர்களுக்கு) கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்கள்.
    • தமிழ்நாடு அரசின் நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023-ஐ பரிந்துரைத்துள்ளது.

    போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் டீசல் எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த (CNG) மற்றும் (LNG) பயன்படுத்தி, மறுசீரமைப்பு செய்த பேருந்துகளை பரிச்சார்த்த முறையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,160 டீசல் பேருந்துகள் மூலம், தினசரி சுமார் 1.76 கோடி பொது மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். போக்குவரத்துக் கழகங்களின் மொத்த செலவில் சுமார் 27% டீசலுக்காக செலவிடப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசின் நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023-ஐ பரிந்துரைத்துள்ளது.

    அதன் அடிப்படையில், குறைந்த கார்பன் உமிழ்வு, அதிகப்படியான கிலோமீட்டர். டீசலைவிட 7% முதல் 20% வரை செலவு குறைந்த, சுற்றுச் சூழலுக்கு உகந்த, சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) மற்றும் திரவ நிலை இயற்கை எரிவாய்வு (LNG) பேருந்துகளை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பரிச்சார்த்த அடிப்படையில் இயக்கிட. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, 7 போக்குவரத்து கழகங்களில் தலா இரண்டு பேருந்துகளில் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) பயன்படுத்தி என்ஜினில் மறுசீரமைப்பு செய்து, மொத்தம் 14 பேருந்துகளை இயக்கவும், மேலும் மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் விழுப்புரம் போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகளில், திரவ நிலை இயற்கை எரிவாய்வு (LNG) பயன்படுத்தி என்ஜினில் மறுசீரமைப்பு செய்து, மொத்தம் 4 பேருந்துகளை இயக்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதில், முதல் கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 4 திரவ நிலை இயற்கை எரிவாய்வு (LNG) பேருந்துகள் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 2 சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) பேருந்துகள் என மொத்தமாக 6 பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் இன்று தொடங்கி வைத்து, கீழ்கண்ட 6 வழித்தடங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது.


    மேலும், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 49 வாரிசுதாரர்களுக்கு (ஒரு ஓட்டுநர் மற்றம் 48 நடத்துநர்களுக்கு) கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்கள். ஏற்கனவே, 57 வாரிசுதாரர்களுக்கு 8 ஓட்டுநர். 48 நடத்துநர் மற்றும் ஒரு நிர்வாகப் பணியாளர் நியமன ஆணைகள் வழங்கப்பட்டு. தற்போது வரை மொத்தமாக 106 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.




     


    இந்நிகழ்வில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி. மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், ராஜ்யசபா உறுப்பினர் மு.சண்முகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், இணை மேலாண் இயக்குநர் குணசேகரன், போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் நடராஜன், இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி) அண்ணாதுரை, உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×