என் மலர்
நீங்கள் தேடியது "பேருந்து"
- ஜெய்ப்பூரில் இன்று காலை ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.
- பஸ்சின் மேற்கூரையில் அதிக அளவில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று காலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயணித்தனர். பஸ்சின் மேற்கூரையில் அதிக அளவிலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து பஸ்சின் மீது விழுந்தது.
இதில் பஸ் முழுவதும் தீப்பற்றியது. தீ மளமளவென பரவிய நிலையில் டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயற்சித்தனர். ஆனாலும் தீ மளமளவென பரவியதில் 2 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 17ஆம் ஏசி ஸ்லீப்பர் பேருந்து ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு சென்றபோது தீப்பிடித்து எரிந்தது. இதில் 27 பயணிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபோல் தொடர்ந்து பேருந்துகள் விபத்தில் சிக்குவது கவலை அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளர்.
- தீப்பிடித்த பேருந்து விமானத்தில் இருந்து சில அங்குல தொலைவில் நின்று கொண்டிருந்தது.
- தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
புதுடெல்லி:
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது..
தீப்பிடித்து எரிந்த பேருந்து ஒரு விமானத்திலிருந்து சில அங்குலங்கள் தொலைவில் நின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் யாரும் விமானத்தில் இல்லை.
அங்கிருந்த தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
இந்த திடீர் தீவிபத்தால் அருகிலுள்ள விமானங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா, தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 13-ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த விழா நடக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது. இதில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், இளையராஜா பொன் விழாவுக்கு வரும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசின் சார்பில் பிரத்யேக பேருந்து தயாராக உள்ளது.
- தனது பையில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
- பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் வழியாக குதித்தனர்.
மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டம் பத்னாபூர் பகுதியில், கடந்த ஞாயிறு இரவு, புனேவிலிருந்து புசேடுக்குச் சென்ற பேருந்தில் அமர்ந்திருந்த 50 வயது பயணி ஒருவர் திடீரென்று, தனது பையில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனால் அவர் சம்பவ உடல் கருகி இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் வழியாக குதித்தனர். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி அனைவரையும் வெளியேற்றினார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றினர். விசாரணையில், இறந்தவரின் பெயர் சுனில் சஜ்ஜன்ராவ் டேல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் புல்தானா மாவட்டத்தின் மெஹ்கர் தாலுகாவின் அரேகான் கிராமத்தில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.
தற்கொலை குறித்த காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்தில் இருந்த 40 பயணிகள் பாத்திரமாக உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தீ விபத்தில் 20 மேற்பட்ட பேருந்து கூடுகள் தீயில் கருகி நாசமானது.
- விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கரூர் சின்னமநாயக்கன்பட்டியில் பழையப் பேருந்துகளின் கூடுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 20 மேற்பட்ட பேருந்து கூடுகள் தீயில் கருகி நாசமானது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
- ஆட்டோ மீது வேகமாக வந்து தனியார் பேருந்து மோதியுள்ளது.
- விபத்துக்குள்ளான ஆட்டோ முன்னே சென்ற பேருந்து மீது மோதியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி ஆட்டோ நசுங்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடியோவில், ஆட்டோ மீது வேகமாக வந்து தனியார் பேருந்து மோதியுள்ளது. இதனால் ஆட்டோ முன்னே சென்ற பேருந்து மீது மோதியுள்ளது. அப்போது இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கி ஆட்டோ நசுங்கியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
- பயணிகளில் ஒருவர் எதையோ வெளியே வீசுவதை ஓட்டுநர் கவனித்தார்.
- அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்து அதை ஜன்னல் வெளியே வீசி கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவின் பர்பானியில், 19 வயது ரித்திகா திர் என்ற பெண்ணையும் அவரது கணவர் என்று நம்பப்படும் அல்தாஃப் ஷேக் என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் பயணித்த பேருந்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் பெர்த்கள் இருந்தன. பயணிகளில் ஒருவர் எதையோ வெளியே வீசுவதை ஓட்டுநர் கவனித்தார். கேட்டபோது, அல்தாஃப் தனது மனைவி பேருந்து பயணத்தால் சோர்வாக இருப்பதாகவும், வாந்தி எடுப்பதாகவும் கூறினார்.
இருப்பினும், இந்த சம்பவத்தை கவனித்த உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி விசாரித்தபோது, குழந்தை பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் கூற்றுப்படி, பயணத்தின் நடுவே பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தம்பதியினர் குழந்தையை ஒரு துணியில் சுற்றி வாகனத்திலிருந்து வெளியே எறிந்ததாக தெரிவித்தனர்.
குழந்தையை வளர்க்க முடியாததால் அதை கைவிட்டதாக தம்பதியினர் போலீசாரிடம் விசாரணையின்போது தெரிவித்தனர். அவர்கள் பர்பானியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு வருடத்திற்கும் மேலாக புனேவில் வசித்து வந்தனர் என்றும் தெரியவந்தது. அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- மாணவிகள் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
- படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
மதுரை:
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 2024-2025 ஆம் கல்வியாண்டில் மொத்தம் 23,49,616 பள்ளி மாண வர்களுக்கும் சுமார் 2,00,000 கல்லூரி மாணவர்களுக்கும் கட்டணமில்லா பயணத்திற்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகளில் மாணவர்கள் செல்லும்போது புத்தகப்பை மற்றும் உணவுப் பைகள் கொண்டு செல்வதால் பேருந்தினுள் கூட்ட நெருக்கடியில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
கூட்ட நெருக்கடியால் மாணவ, மாணவிகள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணலாம். சில நேரங்களில் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.
ஆகவே, மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வண்ணம், நெருக்கடி மிகுந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக தனிப் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, பிள்ளைகளை அறிவுறுத்தி வளர்க்க வேண்டியதில் பெற்றோரின் கடமை உள்ளது. பள்ளியிலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு மாணவர்கள் ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது. மாணவிகள் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. நடத்துனர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் அதனை ஏற்பதில்லை. அது தண்டனைக்குரிய குற்றம். காவல்துறையினர் வழக்கு பதிவு கூட செய்யலாம்.
ஆகவே மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
- படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட நேரிடும்.
- பிள்ளைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கினால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கூறுகையில்,
* நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் ஏற்பதில்லை, படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
* பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம்.
* படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட நேரிடும்.
* சென்னையில் அரசு பேருந்துகளின் மேற்கூரையில் மாணவர்கள் பயணிப்பதை காண முடிகிறது.
* படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
* பள்ளியிலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா பழக்கங்கள் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.
* மாணவியர் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
* பிள்ளைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
* பேருந்துகளின் உள்ளே போதிய இடம் இருந்தும், பள்ளி மாணவர்கள் தான் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.
* மாணவர்கள் பேருந்துக்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதை உறுதி செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
- நைஜீரியாவின் மோசமான சாலைகளினால் விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
- கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் சாலை விபத்துககளினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர்
நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது.
இதில் 21 தடகள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து டிரைவரின் சோர்வு அல்லது அதிக வேகத்தின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நைஜீரியாவின் மோசமான சாலைகளினாலும் போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் வேகமாக வாகனம் ஓட்டுவதாலும் விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் 9,570 சாலை விபத்துககளினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது.
- பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் ஐபிஎல் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கே.கே.ஆர்.- ஆர்.சி.பி. போட்டியை பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐ.பி.எல் போட்டியை பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் செயலை பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிசை அவர் டேக் செய்திருந்தார். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
- போக்குவரத்து துறை அமைச்சரிடம் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
- பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், முதியோர்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி:
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ் குமார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பேருந்துகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், முதியோர்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது சம்மந்தமாக சட்டமன்ற அலுவலகத்திற்கு அதிகமான மனுக்கள் வந்துள்ளதாலும், பொதுமக்கள் பலமுறை நேரில் சந்தித்து என்னிடம் கோரிக்கை வைத்துள்ளதாலும் கீழ்கண்ட வழித்தடங்களில் இயங்கி கொண்டிருந்த பேருந்துகளை மீண்டும் அதே வழித்தடங்களில் இயக்கி தந்து உதவுமாறு அமைச்சரை கேட்டு கொள்கிறேன்.
கருங்கலில் இருந்து கருமாவிளை, திக்கணங்கோடு, திங்கள் நகர், இரணியல், வழித்தடத்தில் நாகர்கோவிலுக்கு செல்லும் பாயிண்டு டூ பாயிண்டு முழுநேர பேருந்து, மற்றும் புதுக்கடை, சடையன்குழி, கிள்ளியூர், தொலையாவட்டம், பாலூர், கருங்கல், கருமாவிளை, கருக்குப்பனை, மத்திகோடு, திக்கணங்கோடு, பாளையம், திங்கள்நகர் வழியாக தக்கலை செல்லும் தடம் எண் 10 C - புதுக்கடை - தக்கலை முழுநேர பேருந்து மற்றும் வடசேரி, பார்வதிபுரம், சுங்கான்கடை, பரசேரி, இரணியல், திங்கள்நகர், திக்கணங்கோடு, மத்திகோடு, கருங்கல், இனையம்புத்தன்துறை, இனையம், ஹெலன் நகர் வழியாக ராமன்துறை செல்லும் தடம் எண் 309 E மற்றும் 309 E, F.P - நாகர்கோவில் - ராமன்துறை முழுநேர பேருந்து, மற்றும் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, குருந்தன்கோடு, இரணியல், திங்கள்நகர், பாளையம், திக்கணங்கோடு, மத்திகோடு, கருங்கல், மிடாலக்காடு வழியாக மிடாலம் செல்லும் தடம் எண் 7 J - நாகர்கோவில் - மிடாலம் பேருந்து, குளச்சல், பாலப்பள்ளம், கருங்கல், பாலூர், கம்பிளார், வேங்கோடு, புதுக்கடை, நித்திரவிளை வழியாக நீரோடி காலனி செல்லும் தடம் எண் 302 A - குளச்சல் - நீரோடி பேருந்து, கருங்கலில் இருந்து
பாலூர், தெருவுக்கடை, தொழிக்கோடு, செந்தறை, பரவை, பொத்தியான்விளை, வில்லாரிவிளை, கீழ்குளம், தேங்காப்பட்டணம், புதுக்கடை, காப்பிக்காடு வழியாக மார்த்தாண்டத்திற்கு தடம் எண் 87B - மார்த்தாண்டம் - கருங்கல் பேருந்தை ஒரே வழித்தடத்தில் முழுநேர பேருந்தாக இயக்க வேண்டும். இனையம் முதல் தேங்காப்பட்டணம் வழியாக மார்த்தாண்டத்திற்கு தடம் எண் 87A - பேருந்தை இனையத்திலிருந்து உடவிளை, ஈத்தன்காடு, செந்தறை, தொழிக்கோடு, தெருவுக்கடை வழியாக கருங்கல் வரை பொதுமக்கள் நலன் கருதி நீட்டிப்பு செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






