என் மலர்
இந்தியா

தொடர் பேருந்து விபத்துகள் கவலை அளிக்கின்றன: அசோக் கெலாட்
- ஜெய்ப்பூரில் இன்று காலை ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.
- பஸ்சின் மேற்கூரையில் அதிக அளவில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று காலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயணித்தனர். பஸ்சின் மேற்கூரையில் அதிக அளவிலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து பஸ்சின் மீது விழுந்தது.
இதில் பஸ் முழுவதும் தீப்பற்றியது. தீ மளமளவென பரவிய நிலையில் டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயற்சித்தனர். ஆனாலும் தீ மளமளவென பரவியதில் 2 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 17ஆம் ஏசி ஸ்லீப்பர் பேருந்து ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு சென்றபோது தீப்பிடித்து எரிந்தது. இதில் 27 பயணிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபோல் தொடர்ந்து பேருந்துகள் விபத்தில் சிக்குவது கவலை அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளர்.






