search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus fire"

    • உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் தீ விபத்து.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில், பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    காசிப்பூர் பகுதியில், திருமண நிகழ்வுக்கு சென்றபோது, பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், பேருந்துக்குள் இருந்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால், பேருந்து தீ பிடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வேலூரில் இருந்து திருத்தணி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று இரவு வாலாஜாவில் எம்.பி.டி சாலையில் சென்றது பஸ்சில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரி அருகே வந்த போது பஸ்சின் முன்பு ஹோல்ஸில் கரும்புகை வெளிவந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

    இதை பார்த்த சாலையில் சென்ற பொதுமக்கள் பஸ் டிரைவரிடம் கூறியுள்ளனர்.

    இதை தொடர்ந்து பஸ் டிரைவர் பஸ்சை சாலை ஓரமாக நிறுத்தி உடனடியாக பயணிகளை கீழே இறக்கி விட்டுள்ளார்.

    பின்னர் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீ அணைக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பிடிக்காமல் இருக்க பஸ்சின் முன்பக்கத்தில் தண்ணீரை பாய்ச்சி அடித்தனர்.

    இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.
    • காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    வெனிஸ்:

    இத்தாலி வெனிஸ் நகரின் புறநகர் பகுதியான மெஸ்ட்ரேலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 21 பேர் பலியானார்கள். 18 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    வெனிஸ் நகருடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெஸ்ட்ரோ மாவட்டத்தில் உள்ள ரெயில் பாதைகளுக்கு அருகில் பஸ் சாலையை விட்டு விலகி விழுந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    • சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவி பற்றி எரிந்தது.
    • டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக கீழே இறங்க கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மாதவரம்:

    ஆந்திராவில் இருந்து மாதவரம் பஸ் நிலையம் நோக்கி நேற்று மாலை ஆந்திரா அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30 பயணிகன் இருந்தனர். புழல், சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் வந்தபோது பஸ்சின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறங்குமாறு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்தபடி பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.

    சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.

    பஸ்சில் இருந்து புகை வந்ததும் பயணிகளை டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக கீழே இறங்க கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    • மாணவர்கள் பட்டாசு வெடிப்பதும், இதில் பஸ் தீப்பிடித்து எரிவதையும் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது மாநில மோட்டார் வாகன அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.
    • அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீப்பிடித்த பஸ்சை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பஸ்சை துரத்தி சென்ற அதிகாரிகள் பஸ்சை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஒரு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா புறப்பட்டனர்.

    இதற்காக 2 சுற்றுலா பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரி வளாகத்தில் இருந்து 2 பஸ்களும் புறப்பட தயாராக இருந்தது.

    அப்போது சுற்றுலாவில் பங்கேற்ற மாணவர்கள் உற்சாக மிகுதியில் பட்டாசு வெடித்தனர்.

    இதில் பட்டாசு வெடித்து சிதறியதில் பஸ்சின் மேல் பகுதி தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த பஸ் ஊழியர்கள் அவசர, அவசரமாக அதனை அணைத்தனர்.

    பின்னர் அவர்கள் மாணவர்களை ஏற்றி கொண்டு சுற்றுலா புறப்பட்டனர்.

    இதற்கிடையே மாணவர்கள் பட்டாசு வெடிப்பதும், இதில் பஸ் தீப்பிடித்து எரிவதையும் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது மாநில மோட்டார் வாகன அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீப்பிடித்த பஸ்சை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பஸ்சை துரத்தி சென்ற அதிகாரிகள் பஸ்சை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவாவில் இருந்து ஐதராபாத்தை நோக்கி 29 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் உள்ள கமலாபுரா அருகே இன்று அதிகாலை பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இதில், பேருந்து தீ பிடித்து மளமளவென பரவியது. பயணிகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பலத்த காயங்களுடன் பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றனர்.

    இந்த விபத்தில் 22 பேர் பேருந்தில் இருந்து தப்பியதாகவும், 7 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சரக்கு வாகன ஓட்டுனரும் பலத்த காயமடைந்துள்ளார்.

    விபத்தில் காயமடைந்தவர்கள் கலபுர்கியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படியுங்கள்.. உத்தரபிரதேசத்தில் ரூ.80 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
    தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் அதிமுக நிர்வாகிகள் மூவர் 18 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால், அவர்களை விடுவிக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
    சென்னை:

    தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அந்தந்த ஜெயில்களில் இருக்கும் கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் அடுத்த கட்டமாக தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அ.தி.மு.க.வினர் 3 பேர் விடுதலையாகிறார்கள். கடந்த 2000-ம் ஆண்டில் தர்மபுரியில் நடந்த பஸ் எரிப்பில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் 
    பலியானார்கள்.

    இதுதொடர்பாக தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

    மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 3 பேரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இவர்கள் மூவரும் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    அவர்கள் 18 ஆண்டுகாலம் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்யலாமா என்பது குறித்து சிறைத்துறை யுடன் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டதால் அவர்களுக்கு அரசு உத்தரவு பொருந்துமா? குடும்பத்தினர் ஏதும் ஆட்சே பனை தெரிவிக்கிறார்களா? 3 பேரின் மனநிலை என்ன? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் 1996-ம் ஆண்டு சிதம்பரம், அண்ணா மலை பல்கலைக் கழக மாணவரும் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகனுமான நாவரசு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸ்களில் அடைத்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டது.

    இதுதொடர்பாக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அவருடன் படித்த மாணவரான ஜான்டேவிட் கைது செய்யப்பட்டார். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருவதால் இவரையும் விடுதலை செய்வது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது.
    சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் துணை ராணுவ முகாமின் அருகே இன்று மாலை அரசு பேருந்தை வழிமறித்த நக்சலைட்கள் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை தீயிட்டு எரித்தனர். #Naxalstorchbus #bustorchedinBijapur
    ராய்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், ஜகதல்பூரில் இருந்து பசகுடா பகுதியை நோக்கிச் சென்ற பேருந்தை பிஜப்பூர் மாவட்டம், திமாபூர் அருகே இன்று மாலை 6 மணியளவில் சுமார் 25 நக்சலைட்கள் வழிமறித்தனர்.

    பயணிகளை அனைவரையும் கீழே இறக்கிவிட்டு பேருந்தை தீயிட்டு எரித்தனர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் துணை ராணுவப்படை முகாம் உள்ளது குறிப்பிடத்தக்கது. #Naxalstorchbus #bustorchedinBijapur
    புதுச்சேரியில் இருந்து கனகசெட்டிக்குளம் பகுதியில் இன்று வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்தில் பயணித்தவர்களை கீழே இறக்கிவிட்டு மர்மநபர்கள் பேருந்துக்கு தீ வைத்துள்ளனர்.
    புதுச்சேரி:

    பாமக மூத்த தலைவர் காடுவெட்டி குரு நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனை அடுத்து, வட கிழக்கு மாவட்டங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. இந்நிலையில், இன்று புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்து மீது மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.

    கனகசெட்டிக்குளம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு, பின்னர் அந்நபர்கள் தீ வைத்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் வேகமாக தீயை அணைத்தனர். இது தொடர்பாக காலட்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×