என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra Govt"

    • பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
    • பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பேருந்து தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த நிலையில் ஆந்திர மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தெலுங்கானாவில் தனியார் வசம் உள்ள மதுபான கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைப்பது தெரியவந்தது.
    • செப்டம்பர் மாத இறுதியில் ஆன்லைன் மூலம் மதுபான கடைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த 2017-ம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது மதுபான கடைகள் தனியார் வசம் இருந்தது.

    அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மதுபான கடைகளை அரசு மதுகடைகளாக மாற்றினார்.

    சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு புதிய மதுபான கொள்கைகளை அமல்படுத்த முடிவு செய்தார்.

    அதன்படி கலால் துறை அதிகாரிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மதுபான கொள்கை குறித்து ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

    அதில் தெலுங்கானாவில் தனியார் வசம் உள்ள மதுபான கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைப்பது தெரியவந்தது.

    இதனால் தெலுங்கானா மதுபான கொள்கையை பின்பற்ற முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    அதன்படி செப்டம்பர் மாத இறுதியில் ஆன்லைன் மூலம் மதுபான கடைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

    மதுபான கடைக்கு விண்ணப்பம் செய்ய ரூ.2 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் 40 விண்ணப்பங்கள் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2000 கோடி வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆட்சியில் அரசு மதுபான கடை என்பதால் அருகில் பார் வைக்க அனுமதி கொடுக்கவில்லை. இதனால் மது குடிப்பவர்கள் சாலைகளில் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது மதுக்கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதால் மது கடையுடன் கூடிய பார் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளதாக ஆந்திர மாநில கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    • சேவைகளுக்கு நன்கொடைகளை வழங்கலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    ஆந்திராவில் 'மன மித்ரா' என்ற பெயரில் வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு தொடங்கி உள்ளது.

    இந்த திட்டத்தை விரிவுபடுத்தி பல்வேறு சேவைகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேசுவர சாமி கோவிலில் (ஏழுமலையான் சாமி) கோவில் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகளும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான சேவைகள் விரைவில் 'வாட்ஸ்- அப்'பில் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். சேவைகளுக்கு நன்கொடைகளை வழங்கலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    • தெலுங்கானாவில் தொழில்துறை படிப்புகளில் ஆந்திர மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானா மாநில பிரிவினையின் போது இரு மாநிலங்களுக்கு இடையே 10 ஆண்டுகளுக்கான கல்வி இட ஒதுக்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு முடிவடைகிறது.

    இதனால் வரும் கல்வியாண்டு முதல் தெலுங்கானாவில் தொழில்துறை படிப்புகளில் ஆந்திர மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 15 சதவீத ஒதுக்கீடு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

    இந்த அறிவிப்பின் மூலம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தெலுங்கானா கல்வி நிறுவனங்களில் இனி இட ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #AndhraGovt #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் 12 மணிநேரம் தொடர் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டார்.

    இந்த போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்கள், தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

    தற்போது இந்த போராட்டத்துக்கு மொத்தம் எவ்வளவு தொகை செலவானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

    ஆந்திர அரசு செலவில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சந்திரபாபு நாயுடு தன் மாநிலத்திலிருந்து பொதுமக்களை டெல்லிக்கு அழைத்துசென்றார். இதற்காக 2 ரெயில்கள் முன்பதிவு செய்யப்பட்டது. ஆந்திர அரசே மத்திய ரெயில்வே துறையிடமிருந்து 20 பெட்டிகள் கொண்ட ரெயில்களை முன்பதிவு செய்து ரெயில்களுக்கு வாடகையாக ரூ.1.12 கோடி அளித்தது.

    முக்கிய வி.ஐ.பிக்களுக்கு சொகுசு அறைகள், பொது மக்களுக்கு தனியாக அறைகள் என மொத்தம் 1100 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதற்காக கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது.

    உணவு, இதர செலவு என மொத்தம் ரூ.10 கோடி செலவாகி உள்ளது. இதற்கான தொகையை 6-ந்தேதியே ஒதுக்கீடு செய்து ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 12 மணி நேர போராட்டத்துக்கு 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது எதிர்க்கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் நடந்த போராட்டத்திலேயே இந்தச் செலவுகள் குறித்து சந்திரபாபு நாயுடு பேசி இருந்தார். அதில், ‘இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆந்திர அரசின் பணத்தில்தான் நடத்தப்படுகிறது.

    இது மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம். ஆந்திர அரசு இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. என் மக்களின் சுதந்திரத்துக்காகவே இது நடத்தப்படுகிறதே தவிர, ஒரு தனிப்பட்ட கட்சியின் போராட்டம் இல்லை’ என்று விளக்கம் அளித்தார். #AndhraGovt  #ChandrababuNaidu

    ×