என் மலர்tooltip icon

    இந்தியா

    வாட்ஸ்-அப் மூலம் திருமலை திருப்பதி கோவில் தரிசன டிக்கெட்- ஆந்திர அரசு அறிவிப்பு
    X

    'வாட்ஸ்-அப்' மூலம் திருமலை திருப்பதி கோவில் தரிசன டிக்கெட்- ஆந்திர அரசு அறிவிப்பு

    • பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    • சேவைகளுக்கு நன்கொடைகளை வழங்கலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    ஆந்திராவில் 'மன மித்ரா' என்ற பெயரில் வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு தொடங்கி உள்ளது.

    இந்த திட்டத்தை விரிவுபடுத்தி பல்வேறு சேவைகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேசுவர சாமி கோவிலில் (ஏழுமலையான் சாமி) கோவில் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகளும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான சேவைகள் விரைவில் 'வாட்ஸ்- அப்'பில் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். சேவைகளுக்கு நன்கொடைகளை வழங்கலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×