search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேருந்து விபத்து"

    • மத்தியப் பிரதேசத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்து நடந்துள்ளது.
    • தேர்தல் பணியை முடித்துவிட்டு சொந்த மாவட்டத்திற்கு திரும்பியபோது விபத்து.

    மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் பேருந்தை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 21 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் காயமடைந்துள்ளனர்.

    போலீசார் தங்கள் தேர்தல் பணியை முடித்துவிட்டு மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த மாவட்டமான ராஜ்கருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, போபால்- பேதுல் நெடுஞ்சாலையில் பரேதா காட் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி ஷாலினி பராஸ்தே தெரிவித்தார்.

    விபத்து குறித்து அவர் மேலும் கூறுகையில், " ஐந்து காவலர்கள் மற்றும் மீதமுள்ள வீட்டுக் காவலர்கள் உட்பட மொத்தம் 40 ஜவான்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சிந்த்வாராவில் தேர்தல் பணி முடிந்து ராஜ்கருக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

    இதில், பலத்த காயம் அடைந்த 8 பேர் பெதுலில் உள்ள மாவட்ட மருத்துவமனையிலும், சிறிய காயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்கள் ஷாபூர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஏதிரே வந்த லாரியை இடிக்காமல் செல்ல முயன்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது" என்றார்.

    • விபத்தில் சிக்கிய, 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

    தென்காசியில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தற்காலிக பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இந்த கோர விபத்தில், இருவர் உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூனாம்பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக மதுராந்தகம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் கல்லூரிக்கு புறப்பட்டனர்.
    • உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர் அருகே கண்டெய்னர் லாரி மீது பஸ் உரசியதில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற 3 கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    மதுராந்தகத்தில் தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்த கமலேஷ்(வயது19), சூனாம்பேடு தனுஷ்(19), மோகல்வாடி பகுதியை சேர்ந்த மோனிஷ்(19) உள்ளிட்டோர் படித்து வந்தனர். அவர்கள் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

    இன்று காலை கமலேஷ் உள்ளிட்ட மாணவர்கள் அனைவரும் வழக்கம் போல் சூனாம்பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக மதுராந்தகம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் கல்லூரிக்கு புறப்பட்டனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

    மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்த போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது திடீரென பஸ் உரசியது.

    இதில்படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கமலேஷ், தனுஷ், மோனிஷ் மற்றும் ஒரு மாணவர் என 4 பேர் இடிபாட்டில் சிக்கி சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் கமலேஷ், தனுஷ், மோனிஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்றொரு மாணவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.

    தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பலியான 3 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் பஸ்சின் மற்றொரு படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மேலும் 5 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

    பலியான 3 மாணவர்களும் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் பலியானது பற்றி அறிந்ததும் அவர்களது பெற்றோர் கதறி துடித்தனர். மாணவர்களின் உடல்களை பார்த்து உடன் படித்த மாணவர்கள் கண்ணீர் வடித்தனர். இதனை பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் தீ விபத்து.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில், பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    காசிப்பூர் பகுதியில், திருமண நிகழ்வுக்கு சென்றபோது, பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், பேருந்துக்குள் இருந்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால், பேருந்து தீ பிடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • விபத்தில், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
    • உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டனர்.

    வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழந்து விழுந்தது,

    இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

    ஹரிப்பூர் மாவட்டத்தில் உள்ள கான்பூரில் இருந்து மலைப்பாங்கான கிராமத்திற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது தர்னாவா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

    அதிக வேகம் காரணமாக ஒரு திருப்பத்தின்போது பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இறந்தவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.

    விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்பு வாகனங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு ஹரிபூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    • பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து விபத்து.
    • ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் சிறிது தூரம் தொங்கியபடியே சென்றார்.

    சென்னையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் பெண் பயணி சரிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்து அமைந்தகரை அருகே சென்றபோது பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து விபத்துக்குள்ளானது.

    ஓட்டையில் சறுக்கியபடி கீழே விழுந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பேருந்தின் ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் சிறிது தூரம் தொங்கியபடியே சென்றுள்ளார்.

    இதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    • 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் ப ள்ளி பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் பாட்டில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

    இதில், 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கழிப்பறை சுத்தம் செய்வதற்காக ஆசிட் எடுத்து சென்றபோது வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    • விபத்தில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தகவல்.

    தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பேருந்து ஒன்று 49 பேருடன் பிரச்சாவ் கிரி கான் மாகாணத்திற்கு சென்றுக் கொண்டிருந்தது.

    அப்போது ஹாட் வனாக்கார்ன் தேசிய பூங்கா அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் வேகமாக மோதியது.

    இதில், பேருந்தில் இருந்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், " பேருந்து ஓட்டுனர் தூங்கியதே விபத்துக்கான காரணம் என தெரிகிறது. விபத்தில் உயிர் பிழைத்த பேருந்து ஓட்டுனருக்கு ரத்த மாதிரி சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிகிறோம்.

    உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் தாய்லாந்து, பர்மா மற்றும் வீராபெட் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    • பேருந்தில் இருந்து இறங்கிய சிறுமி லயா பேருந்தின் பின்புறமாக நடந்து சென்றுள்ளார்.
    • தப்பியோடிய ஓட்டுனர் தியாகராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தனியார் பள்ளி பேருந்தில் சிக்கி எல்கேஜி படிக்கும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய சிறுமி லயா பேருந்தின் பின்புறமாக நடந்து சென்றுள்ளார்.

    அதனை அறியாத ஓட்டுநர் பேருந்தை பின்புறமாக இயக்கிபோது டயரில் சிக்கி சிறுமி உயிரிழந்தார்.

    சிறுமியின் உடலை மீட்ட கோத்தகிரி போலீசார், தப்பியோடிய ஓட்டுனர் தியாகராஜனை தேடி வருகின்றனர்.

    • பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 12-ல் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜயவாடா:

    விஜயவாடாவில் நேரு பேருந்து நிலையத்தில் பேருந்து நிலைய நடைமேடையில் அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

    இன்று காலை 8.20 மணியளவில் பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 12-ல் பேருந்து மோதி விபத்துக்குள்ளான போது ஏராளமான பயணிகள் திரண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    "வாகனத்தைத் திருப்புவதற்குப் பதிலாக, ஓட்டுநர் முன்னோக்கி நகர்ந்து பிளாட்பாரத்தில் மோதினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜயவாடா பேருந்து நிலையம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஒரு முக்கிய இணைப்புப் புள்ளியாகும்.

    • மினி பேருந்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • காயமடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதி.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்ட பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி பேருந்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    வத்திராயிருப்பு பகுதியில் இருந்து புதுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த மினி பேருந்து விபத்தில் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    விபத்தில் காயமடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

    • 9 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலமாக கடையம் கொண்டுவரப்பட்டது.
    • உயிரிழந்தவர்களின் உடல்களை பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    தென்காசி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்றுமுன் தினம் சுற்றுலா வந்த பஸ், மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனைத்தொடர்ந்து, குன்னூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து 9 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களது சொந்த ஊரான கடையம் கொண்டுவரப்பட்டது. பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பின்னர், கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக, இறுதிச்சடங்குகள் செய்து உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டன.

    ×